சுவடிகளின் வடிவங்கள்

Manus

     சுவடிகளின் ஏடுகள் பொதுவாக தைக்கப்பெற்றோ தைக்கப்பெறாமலோ இருக்கும். ஓலைச்சுவடிகளும் பூர்ஜ பத்ரங்களும் தைக்கப்பெறாமலும் இருக்கும். கையினால் உருவாக்கப் பெற்ற காகிதங்களும் கூட தைக்கப்பெறாமல் இருக்கும்.      தச வைகாலிக ஸூத்ரம் என்னும் நூல் சுவடிகளின் பின்வரும் வகைகளைக் குறிப்பிடுகிறது. கண்டீ கச்சபீ ஸம்புட பலகம் மற்றும் முஷ்டி      கண்டி வகைச் சுவடிகளின் நீள அகலங்கள் ஒத்தமைந்து ஒரு பலகையைப் போலிருக்கும். கச்சபீ வகைச் சுவடிகள் நடுவில் அகன்றும் ஓரங்களில் சுருங்கியும் இருக்கும். ஸம்புட பலகமான…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளின் எழுத்தர்

scribe

     எழுத்தர் என்பவர் சுவடிகள் ஆவணங்கள் இவற்றைப் படியெடுப்பவர் ஆவார். எழுத்தருக்கும் நூல்களை யாத்தவருக்கும் வேறுபாடறியாமல் சிலர் மயங்குவதுண்டு. லிபிகரன், லிபிகாரன், லேககன் ஆகியவை எழுத்தருக்கான வடமொழிச் சொற்களாம். பண்டைய காலத்தில் அரசாங்க எழுத்தரும் இருந்தனர். அவர்கள் கரணிகர், காயஸ்தர், ராஜலேககர், ராஜலிபிகரர் என்று வழங்கப்பெற்றனர். ஆவணங்களைப் பாதுகாப்பவர் அக்ஷபாடலிகர் என்று வழங்கப்பெற்றார். கௌடல்யரும் எழுத்தரின் இலக்கணத்தைப் பின்வருமாறு தருகிறார்.      अमात्यसम्पदोपेतः सर्वसमयवित्, आशुग्रन्थः चार्वक्षरः लेखनवाचनसमर्थः लेखकः स्यात्।       அமைச்சருக்குண்டான பண்புகளோடியைந்தவர், எல்லா…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபொருட்கள்

stylus1

     சுவடிகளில் எழுதவும் பல வகையான பொருட்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அவற்றின் தன்மையைப் பொறுத்து அவை மூவகையாகப் பிரிக்கப்பெற்றுள்ளன. கூரியமுனையுடைய எழுத்தாணி – ஓலைகளில் எழுத மென்மையான முனையுடைய எழுதுபொருள் – பூர்ஜபத்ரம் முதலியவற்றில் எழுத தூரிகை – வண்ணங்கள் பூச 1. எழுத்தாணியை வடமொழியில் லோஹகண்டகம் அல்லது சலாகா என்று கூறுவர். இரும்பினாலான நீளமான கம்பி 10-30 செமீ அளவில் ஆக்கப்பெற்று எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பெறும். இதற்கு மிகக் கூரிய முனையும் அமைக்கப்பெறும். மற்றொரு முனை தட்டையாக்கப்பெற்று…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – தோல்

     பாரதநாட்டில் புலித்தோல் மற்றும் மான்தோலைத்தவிர மற்றைய தோல்கள் புனிதமற்றவை என்று கருதப்பெற்றதால் எகிப்து போன்ற தேசங்களைப் போன்று அவற்றின் பயன்பாடு நம் நாட்டில் இன்றி மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.      கரும்பலகையைப் போல வரைபடங்களுக்கும் நகல் எழுதுதற்கும் தோல் பயன்பட்டு வந்திருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமொழிப்புலவரும் வாஸவதத்தம் என்னும் உரைநடைக் காப்பிய நூலை யாத்தவருமான ஸுபந்து என்பார் எழுதும் முறையில் தோலின் பயன்பாட்டைக் குறிப்பிடுகிறார். विश्वं गणयतो धातुः शशिखठिनीखण्डेन तमोमषीयामे अजिन इव…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள்

palm

     சுவடியியலைப் பயிலும்போது சுவடிகளை எழுதப்பயன்படும் பொருட்களும் கூட முக்கியமான இடத்தை வகிக்கின்றன. சுவடிகளுக்கான எழுதுபடுபொருட்களைத் தேர்ந்தெடுப்பது அதன் பயனைப் பொறுத்தே அமைகிறது. இன்றும் கூட நாம் தரமுயர்ந்த தாளில் தினசரிகளை அச்சிடுவதில்லை. தரமுயர்ந்த நூல்களை சாணித்தாள்களில் அச்சிடுவதுமில்லை. எழுதப்போகும் நூலுக்கான நோக்கமும் இயல்புமே சுவடிக்கான எழுதுபடு பொருளைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன.      பண்டைய காலத்திலும் அவர்களுக்கு எளிமையாக கிடைத்த கையாளத்தக்கபடியான பொருட்களையே பயன்படுத்தினர். சிலநேரங்களில் அதிசயமாக நாம் எதிர்பாராத சில பொருட்களிலும் சுவடிகளுக்கான…

தொடர்ந்து வாசிப்பு

பாரதத்தின் பண்டைய எழுத்தியல் – இதிஹாஸ புராண சான்றுகள்

பண்டைய பாரதத்தின் எழுத்தியலைப் பற்றி வேத வேதாங்கங்களில் உள்ள இலக்கிய சான்றுகளை முன்பு பார்த்தோம். தற்போது பண்டைய தார்மிக இலக்கியங்களான இதிஹாஸ புராணங்களில் உள்ள சான்றுகளைப் பற்றி காண்போம். ராமாயணமும் மஹாபாரதமும் நமது நாட்டின் மிக இன்றியமையாத இரு இதிஹாஸங்கள். இவ்விரு இதிஹாஸங்களிலும் பண்டைய பாரதத்தின் எழுத்தியலைப் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன. இதிஹாஸங்கள் 1.1. ராமாயணம்      இந்த பழமை வாய்ந்த இதிஹாஸம் ஆதிகாவ்யம் என்று புகழ்பெற்றது. இந்த இதிஹாஸத்தில் லிக, லேகக, லேகன என்னும் சொற்கள்…

தொடர்ந்து வாசிப்பு