
இந்திய நாடகவியலின் விழுமிய வடிவாய்த் திகழும் பரதமுனிவர் நாடகவியலுக்கே இலக்கணமான நாட்ய சாஸ்த்ரத்தை இயற்றியவர். நாடகவியலுக்கே உறுபொருளாய்த் திகழும் இந்நூலில் அவருடைய தற்குறிப்புக்களைப் பற்றிய கருத்துக்கள் அதிகமாக இல்லை. அவர் ஒரு முனிவர் என்பதும் அவருடைய காலம் பொயுமு இரண்டு முதல் பொயு இரண்டாகலாம் என்பதும் மட்டுமே அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்து. ஆயினும் அவருடைய பிறப்பிடத்தைப் பற்றிய எவ்விதக் கருத்தும் இல்லை. ஈண்டு அவருடைய நாட்ய சாஸ்த்ரத்தில் கிடைக்கும் ஒரு குறிப்பை வைத்து அவருடைய பிறப்பிடத்தைக் கண்டறிய…
தொடர்ந்து வாசிப்பு