முதலாம் மஹேந்த்ர பல்லவனின் மாமண்டூர் கல்வெட்டு

mamandur

ஏழாம் நூற்றாண்டின் இணையற்ற வேந்தர்களுள் ஒருவனான மஹேந்த்ர பல்லவன் பல்லவ தேசத்தை நாற்பது ஆண்டுகளேனும் ஆண்டிருக்க வேண்டும். அவனுடைய கல்வெட்டுக்கள் பல இடங்களிலும் கிடைத்துள்ளன. அவனால் கட்டப்பெற்ற குடவரைக் கோயில்களும் அவனுடைய கல்வெட்டுக்களைத் தாங்கியுள்ளன. அத்தகைய குடவரைகளுள் ஒன்று மாமண்டூரில் அமைந்துள்ளது. இது ருத்ரவாலீச்வரம் என்று சோழர் கால கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு முழுதும் தேய்ந்திருந்தாலும் கூட இது மஹேந்த்ரன் இயற்றிய நூல்களின் பெயர்களைத் தருவதால் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கல்வெட்டு 1888…

தொடர்ந்து வாசிப்பு

வடமொழி நாடகநூல்களில் சுவடியியற் குறிப்புகள்

        வடமொழியில் நாடக இலக்கியங்களுக்கென்று தனியிடம் உண்டு. அத்தகைய நூல்களிலும் சுவடியியற் குறிப்புகள் காணப்படுகின்றன. பாஸன் என்னும் கவிஞன் பொயுமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனுடைய அவிமாரகம் என்னும் நாடகத்தில் புத்தகத்தைப் பற்றிய குறிப்புளது.  அந்நாடகத்தில் விதூஷகனின் வசனம் विदूषकः भवति, इदमक्षरं नाम पुस्तके नास्ति।         விதூஷக​: ப⁴வதி, இதமக்ஷரம்ʼ நாம புஸ்தகே நாஸ்தி         இவ்வசனத்தின் பொருள். சேடியே இந்த எழுத்து புத்தகத்தில் இல்லையே. என்பது. இதன் மூலம் புத்தகங்களைப் பற்றிய குறிப்பு…

தொடர்ந்து வாசிப்பு