கம்பவர்ம பல்லவனின் சோழபுரக் கல்வெட்டு

kampavarma

பின்வரும் கல்வெட்டு சோழபுரத்திலுள்ள ஒரு இடிபாடுற்ற சிவன் கோயிலிலிருந்து திரு. ஜீ. வெங்கோபராவ் அவர்களால் அகழ்ந்தெடுக்கப் பெற்றது. இந்தக் கல்வெட்டு வடமொழி மற்றும் தமிழ் என்னும் இரு மொழியிலும் அமைந்துள்ளது. வடமொழிப்பகுதி இரண்டரைச் செய்யுட்களோடு ஒன்பதாம் நூற்றாண்டைய க்ரந்த எழுத்துக்களில் எழுதப்பெற்றுள்ளது. தமிழ்ப்பகுதி கம்பவர்மனின் எட்டாம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. தமிழ்ப்பகுதி கங்கர் பரம்பரையைச் சேர்ந்த ராஜாதித்யன் என்பான் தனது தந்தையான ப்ருத்விபதி கங்கரையர் என்பார் இறந்து பட்டமையால் பள்ளிப்படையும் நினைவகமும் எடுப்பித்து ஒரு அந்தணருக்குத் தானம் அளித்தமையைக்…

தொடர்ந்து வாசிப்பு