காஞ்சி காமகோடி பீடச்செப்பேடுகள் – 2

Virasimha

வீரநரஸிம்ஹனின் செப்பேடு      காஞ்சி காமகோடி பீடத்தில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த நான்கு செப்பேடுகள் உள்ளன. இவற்றுள் மிகப் பழமையானது துளுவ வம்சத்தை சேர்ந்தவனும் புகழ்பெற்ற க்ருஷ்ண தேவராயனின் தமையனுமான வீரநரஸிம்ஹனுடையதாகும். இவன் பொயு 1505 முதல் 1509 வரை ஆண்டவனாவான்.      இந்தச் செப்பேடு வடமொழியிலும் பதினாறு நூற்றாண்டைய நந்தி நாகரி எழுத்துக்களிலும் எழுதப்பெற்றது. இந்தச் செப்பேடு மற்றைய விஜயநகர சாஸனங்களில் காணப்பெறும் வழக்கமான காப்புச் செய்யுளைக் கொண்டுள்ளது. புராண அரசர்களுக்குப் பிறகு செப்பேட்டை வழங்கிய…

தொடர்ந்து வாசிப்பு

காஞ்சி காமகோடி பீடச்செப்பேடுகள் – 1

mutt_1

விஜயகண்ட கோபாலதேவனின் செப்பேடு      பண்டைய காலத்தில் கோயில்கள், மடங்கள், மதத்தைச் சேர்ந்தோருக்கு நிலங்களும் மற்றைய பொருட்களும் வழங்கப்பெற்றன. அத்தகைய தானங்கள் ஓலைச்சுவடி, செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆகியவற்றில் பதிவு செய்யப்பெற்றன. ஆகவே இவற்றிற்கு த்ரிபலீ சாஸனம் என்ற பெயருண்டு. அத்தகைய செப்பேடுகள் ஸ்ரீமத் ஆதிசங்கரபகவத்பாதர்களிடமிருந்து உருவாகியதாகக் கூறும் காஞ்சி காமகோடி பீடத்திலும் உள்ளன. உண்மையில் இந்த மடத்தில் சோழர் முதலியோருடையதாக 125 செப்பேடுகள் இருந்ததாக் கூறப்பெறுகிறது. கர்னல் மெக்கன்ஸி அவர்களின் மராட்டி மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு….

தொடர்ந்து வாசிப்பு

ஸ்ரீபீடம் சார்த்திய ஸ்தபதி

     பொதுவாகத் திருக்கோயில்களில் சிற்பம் முதலியவற்றை உருவாக்கும் ஸ்தபதிகள் தம் வேலை முடிந்த பிறகு ஸன்மானத்தோடு தகுந்த மரியாதை செய்து அனுப்பப் பெறுவர். அதன் பிறகு ப்ரதிஷ்டை முதலியவற்றை சிவாசார்யர்களும் பட்டாசார்யர்களும் மேற்கொள்வர். ஆனால் கல்வெட்டொன்று கோயிலில் உடையாரின் ஸ்ரீபீடம் சுதையினாலேயே இருந்ததனால் காசளித்து கல்லினால் ஸ்ரீபீடம் உருவாக்கச் செய்து அதைப் பொருத்தமுடியாமல் ஏதோ காரணத்தினால் சைவாசார்யர்கள் திண்டாட ஸ்தபதியே பொருத்திய செய்தியைத் தெரிவிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு உடையார்கோயில் கரவந்தீச்வரர் கோயிலின்…

தொடர்ந்து வாசிப்பு