சுவடியியலில் பயன்படும் ஏனைய கருவிகள்

vyasa

     மற்றைய சில கருவிகளும் சுவடிகளை எழுதுங்கால் பயன்படுத்தப் பெறுகின்றன. வட்டங்களும் கோடுகளும் வரைய சுழற்கருவிகளும் அளவிகளும் கூட பயன்படுத்தப்பெறுகின்றன. ராயபஸேணிய ஸுத்தம் என்னும் ஜைன நூல் சுவடிகளோடு தொடர்புடைய பலவிதமான கருவிகளைக் குறிப்பிடுகிறது. கூழாங்கற்களும் சங்கும் கூட மென்மையாக்கும் கருவிகளாகப் பயன்படுகின்றன. எழுத்தாணிகளை வைக்கும் பெட்டிகளும் கூட பயன்படுத்தப்பெறுகின்றன. சிலவேளை மைக்கூடுகள் இத்தகைய எழுத்தாணிப்பெட்டகத்தோடு இணைக்கப்பட்டதாய் கிடைத்துள்ளன. மற்றைய சில கருவிகள் கீழே குறிப்பிடப்பெற்றுள்ளன. ரேகாபடீ      பூர்ஜபத்ரம் அல்லது காகிதத்தில் கோடுகளை நேராக வரைவதற்காக…

தொடர்ந்து வாசிப்பு

சுவடிகளுக்கான எழுது படு பொருட்கள் – பூர்ஜபத்ரம்

kharosthi_script

இதுவரை சுவடிகளுக்கான எழுதுபடு பொருளாக பனையோலை பயன்பட்டதைப் பார்த்தோம். இரண்டாவது முக்கியமான எழுதுபடுபொருள் பூர்ஜபத்ரமாகும். இது ஆங்கிலத்தில் Birch bark என்று வழங்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Baetula utiles அல்லது Baetula bhoj-patra. இந்த மரம் ஹிமாலயச்சாரலில் 30000 அடி உயரத்தில் வளரும். இந்த மரம் வடநாட்டில் லேகன் என்றும் வழங்கப்பெறுகிறது. தயாரிப்பு முறை      இந்த மரப்பட்டையின் உட்பகுதி பலவிதமான ஏடுகளைக் கொண்டிருக்கும், அத்தகைய வெண்மை அல்லது செந்நிறமுள்ள ஏடுகள் தனித்தனியாகக் கவனமாகப் பிரித்து…

தொடர்ந்து வாசிப்பு