லால்குடி மஹாகாள மூர்த்தி

Mahakala Siva

பின்வரும் அரிய சிற்பத்தை இணையத்தில் காணநேர்ந்தது. இந்தச் சிற்பம் லால்குடி ஸப்தரிஷீச்வரர் கோயிலில் அமைந்துள்ளது. இந்தச் சிற்பம் ஜடாபாரத்தைக் கொண்டுள்ளது. அதன் நடுவே ஒரு கபாலமும் அமைந்துள்ளது. தலையில் லலாடபட்டம் அழகுற அமைந்துள்ளது. சிறு கோரைப்பற்கள் அமைந்திருந்தாலும் கூட இதன் புன்னகை மயக்குகிறது. ஒரு சிறிய கண்டிகையும் அதனையொட்டி ருத்ராக்ஷமாலையும் மார்பை அலங்கரிக்கின்றன. முப்புரிநூல் உபவீதமாக குறுக்கே அமைந்துள்ளது. நெற்றிக்கண் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் சந்தனத்தால் மறைந்துள்ளது. நாகவடிவிலான கேயூரம் புயங்களை அலங்கரிக்கிறது. மேலிரு கைகளிலும முத்தலைச்…

தொடர்ந்து வாசிப்பு