மல்லையின் தவச்சிற்பத் தொகுதி – ஒரு மீளாய்வு

dsc04036

மல்லையிலுள்ள தவச்சிற்பத்தொகுதியை அடையாளம் காண்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வாதங்களை முன்வைத்துள்ளனர். அத்தகைய வாதங்கள் யாவும் கீழ்க்கண்ட சொடுக்கியில் அங்கை நெல்லிக்கனியென தொகுக்கப்பெற்றுள்ளன. http://puratattva.in/2016/07/07/mamallapuram-the-great-penance-3718                 இவையன்றி, அங்குள்ள சிற்பத்தொகுதியை அடையாளம் காண மேலும் சில குறிப்புக்களை முன்வைக்க விரும்புகிறேன். பகீரதன் தவமாயினும் அர்ஜுனனின் தவமாயினும் இரு பகுதிகளும் மஹாபாரதத்தின் வனபர்வத்தில் விளக்கப்பெற்றுள்ளன. இதன் செய்யுட்களும் அதன் விளக்கங்களும் கற்போர் உள்ளம் கவரும் வண்ணம் விளக்கப்பெற்றுள்ளன. ஈண்டு அத்தகைய செய்யுட்களின் சில பகுதிகளையும் காஞ்சி கைலாயநாதர் ஆலயத்துச்…

தொடர்ந்து வாசிப்பு

கருடன் கொண்ட யானையும் ஆமையும்

Garuḍa holds Vibhāvasu and Supratīka

கச்யப ப்ரஜாபதியான மஹர்ஷிக்கு பதின்மூன்று மனைவியர். அவர்கள் தக்ஷனின்  புதல்வர்கள். வினதா மற்றும் கத்ரூ ஆகிய இருவரும் அவர்களில் இருவர். இவர்களுள் கத்ரூ நாகங்களைப் பெற்றெடுத்தாள். வினதை தன் கணவரிடம் கத்ருவின் புதல்வர்களை விட வலிமை கொண்ட புதல்வர்கள் வேண்டுமெனக் கேட்டாள். அவளுக்கு இரு முட்டைகள் பிறந்தன. ஆர்வத்தின் காரணமாக ஒரு முட்டையை அவள் உடைத்துப் பார்த்தாள். கால்களும் தொடையுமில்லாமல் அருணன் அந்த முட்டையிலிருந்து பிறந்தான். தன்னை அப்படி பிறப்பித்ததனால் தன் தாயை அவள் யாரோடு போட்டியிட்டாளோ…

தொடர்ந்து வாசிப்பு