ராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு

????????????????????????????????????

     பின்வரும் கல்வெட்டு போளூர் தாலூகாவிலுள்ள தென்மாதி மங்கலம் என்னுமூரின் அருகிலுள்ள மலையின் மீது உள்ளூரில் அடுக்கங்கல் என்று வழங்கப்பெறும் ஒரு கல்லில் பொறிக்கப்பெற்றதாகக் கண்டெடுக்கப் பெற்றது. இது வடமொழியில் 10-11 ஆம் நூற்றாண்டிற்கான க்ரந்த லிபியில் அமைந்தது. இந்தக் கல்வெட்டு 1933-34 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை ஆண்டறிக்கையில் 50 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது. இதுவரை இதன் வரிகள் வெளியாகாமையால் மத்திய தொல்லியல் துறையிலிருந்து அதன் மைப்படியைப் பற்று ஈண்டு வெளியிடுகிறேன்.      இந்தக் கல்வெட்டு…

தொடர்ந்து வாசிப்பு

எதிரெதிர் பேரரசுகளின் இரு அந்தணத் தளபதிகள்

பதினோராம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தக்காணத்தில் கோலோச்சிய இரு பெரும் பேரரசுகள் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த சோழர்களும் கல்யாணியைக் கொண்ட சாளுக்யர்களுமேயாம். மற்றைய அரசர்கள் இவ்விரு பேரரசுகளின் பின்னரே அணிவகுத்து நின்றனர். இவ்விரு அரசுகளுக்குமான மோதலைத் துவக்கி வைத்தது ராஜராஜப் பெருந்தகையேயாம். முதலாம் ராஜராஜன் கல்யாணி சாளுக்யர்களின் வேந்தனான ஸத்யாச்ரயனை (997-1007 CE) வென்கண்டான். அவனைத் தொடர்ந்து வந்த அரசர்களில் முதலாம் ராஜேந்த்ரன் துவங்கி வீரராஜேந்த்ரன் வரையில் வந்த மன்னர்கள் மேலைச் சாளுக்யர்களோடு மோதினர். இந்தப் போர்வரிசை முதலாம்…

தொடர்ந்து வாசிப்பு

பொயு 971-இல் உத்தமசோழன் இளவரசனா…

  மேதகு நந்திபுரி ஸுந்தர சோழன் அரசுகட்டிலேறிய காலம் பொயு 957 என்று நிறுவப்பெற்றிருக்கிறது. இந்த முடிவு அவனுடைய கல்வெட்டுக்களிலுள்ள வானியற் குறிப்புக்களைக் கொண்டு முடிவு செய்யப்பெற்றுள்ளது, அவனுடைய கல்வெட்டாவணங்கள் பதினேழாம் ஆட்சியாண்டு வரை கிடைத்துள்ளன. திருமால்புரம் (S.I.I III, 117 & 118), நெமலி (139 of 1942-43), அல்லூர் (377 of 1903) மற்றும் திருமழவாடியிலுள்ள (2 of 1920) கல்வெட்டுக்கள் அவருடைய பதினேழாம் ஆட்சியாண்டைக் கொண்டிருக்கின்றன. கோயில் தேவராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டு (230…

தொடர்ந்து வாசிப்பு