சங்க இலக்கியங்களில் பலவகையான சொற்கள் பயன்பட்டுள்ளன. அவற்றுள் சில சொற்கள் உரையாசிரியர்தம் உரைகொண்டே அறியற்பாலன. அத்தகையதோர் சொல்லாட்சி வேதாளிகர் என்பதாகும். மதுரைக்காஞ்சி பின்வருமாறு வேதாளிகரைக் குறிப்பிடுகிறது. சூதர் வாழ்த்த மாகதர் நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப இமிழ்முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப (மதுரைக்காஞ்சி : 671-672) சூதர் வாழ்த்துக்களைக் கூறவும் மாகதர் பாடவும் வேதாளிகரும் நாழிகைக் கணக்கர் எழுப்பவும் பள்ளியெழுப்பும் முரசுகள் ஒலியெழுப்பவும் ஏறுகள் முழங்கவும் காலைப்பொழுது திகழ்ந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இங்கு…
தொடர்ந்து வாசிப்பு