வடமொழியில் பெண்பாற்புலவர்கள்

ubhaya

     நமது பாரதநாட்டில் ஆண்களைப் போல பெண்பாற்புலவர்களும் எல்லா மொழிகளிலும் இருக்கிறார்கள். சங்கத்தமிழ் கொஞ்சிய தங்கக் காலத்திலும் காமக்கண்ணியார், வெள்ளிவீதியார் போன்ற பல பெண்பாற்புலவர்களைக் காணமுடியும். பிற்காலத்திலும் அவ்வையார், ஆண்டாள் போன்ற கவிஞர்களும் தமிழன்னைக்குப் பாமுடி சூட்டினர். இன்றளவும் இத்தகைய பெண்பாற்புலவர்களின் கொடி பட்டொளி வீசத்தான் செய்கிறது.      அதைப்போலவே வடமொழியிலும் பண்டைக்காலந்தொட்டே பல பெண்பாற் கவிஞர்களும் ரிஷிகளும் இருந்தனர். அத்தகைய பெண் ரிஷிகளை ரிஷிகா என்று குறிப்பிடுவர். வேதங்களில் இருபத்தேழு ரிஷிகாக்களைப் பற்றிய குறிப்புள்ளது. விச்வவாரா,…

தொடர்ந்து வாசிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் தசாவதாரக் கல்வெட்டு

பின்வரும் கல்வெட்டு பகல்பத்து மண்டபத்தின் மேற்குச் சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி இருபத்து நான்கில் 488 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு சிதைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு திருமாலின் பத்து அவதாரங்களை வர்ணித்துப் பிறகு கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடுகிறது. இந்த தானங்கள் ரங்கநாதர், திருமகள், ஸேனைமுதலி மற்றும் கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு விளக்கெரிப்பதற்காகவும் மற்றைய திருவிழாக்களுக்குமாக சின்னசெவ்வன்-மூர்த்யம்பா தம்பதியரின் மகனான குமார அச்யுதனால் வழங்கப்பெற்றவை. இந்தக் கல்வெட்டின் காலமான சக…

தொடர்ந்து வாசிப்பு

வடமொழி நாடகநூல்களில் சுவடியியற் குறிப்புகள்

        வடமொழியில் நாடக இலக்கியங்களுக்கென்று தனியிடம் உண்டு. அத்தகைய நூல்களிலும் சுவடியியற் குறிப்புகள் காணப்படுகின்றன. பாஸன் என்னும் கவிஞன் பொயுமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனுடைய அவிமாரகம் என்னும் நாடகத்தில் புத்தகத்தைப் பற்றிய குறிப்புளது.  அந்நாடகத்தில் விதூஷகனின் வசனம் विदूषकः भवति, इदमक्षरं नाम पुस्तके नास्ति।         விதூஷக​: ப⁴வதி, இதமக்ஷரம்ʼ நாம புஸ்தகே நாஸ்தி         இவ்வசனத்தின் பொருள். சேடியே இந்த எழுத்து புத்தகத்தில் இல்லையே. என்பது. இதன் மூலம் புத்தகங்களைப் பற்றிய குறிப்பு…

தொடர்ந்து வாசிப்பு

காவாந்தண்டலத்து வடமொழிக் கல்வெட்டு

காவாந்தண்டலத்து வடமொழிக் கல்வெட்டு      பின்வரும் கல்வெட்டு காஞ்சிக்கு அருகிலுள்ள காவாந்தண்டலத்திலுள்ள லக்ஷ்மீநாராயணர் கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு கோயிலின் மேற்குச்சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஏழில் 422-ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டை எழுத்தியல் ரீதியாக ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நிர்ணயிக்கவியல்கிறது. இந்தக் கல்வெட்டு மானஸர்ப்பன் என்பான் கோயிலை எடுப்பித்ததைக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டின் வரிகளாவன. Line 1 : स्वस्तिश्री नमो नारायणाय। महीसुरमहारत्नप्रसूतिप्रवराकरे। धात्रा वसुन्धरावासनिरतेनैव निर्म्मिते।। सहिता…

தொடர்ந்து வாசிப்பு

மகதைப்பெருமாளின் திருவண்ணாமலைக் கல்வெட்டு

பின்வரும் கல்வெட்டு திருவண்ணாமலை கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் என்று வழங்கப்பெறும் கோபுரத்தில் அமைந்குள்ளது. இந்தக் கல்வெட்டு பொன் வேய்ந்தானான ராஜராஜ வாணகோவரையனின் பெருமையைப் பாடுகிறது. பெரும் வடமொழிக்கவியான கவிராஜன் என்பான் இந்தக் கல்வெட்டுப்பாவை யாத்துள்ளான். இந்தக் கல்வெட்டின் காலத்தை அதே கோயிலிலுள்ள மற்றொரு கல்வெட்டினால் அறியவியல்கிறது. அந்தக் கல்வெட்டு பொன்வேய்ந்தானான ராஜராஜவாணகோவரையன் அங்கு வந்து எந்தையை வணங்கி சில நிவந்தங்களுக்காக நிலங்களைத் தானமாக வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது. அந்தக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பத்தைந்தாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது….

தொடர்ந்து வாசிப்பு

மொஹம்மது என்னும் பெயரின் வடமொழியாக்கம்

     ஐரோப்பிய மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்தவர்களை யவனர்கள் என்றழைக்கும் வழக்கம் பண்டைய தமிழ் மற்றும் வடமொழி நூல்களில் காணப்பெறுவது நாமனைவரும் அறிந்ததே. காளிதாஸர் பெர்ஷியர்களை பாரசீகர்கள் என்று வழங்குவது குறிப்பிடத்தக்கது. அவரியற்றிய ரகுவம்ச மஹாகாவ்யத்தில் ரகுவின் திக்விஜயத்தை வர்ணிக்கும் காளிதாஸன் பின்வரும் குறிப்பை வழங்குகிறார். पारशीकांस्ततो जेतुं प्रतस्थे स्थलवर्त्मना।(Raghuvaṃśa 4.59) பாரஸீ²காம்ʼஸ்ததோ ஜேதும்ʼ ப்ரதஸ்தே² ஸ்த²லவர்த்மனா|      இடைக்கால வரலாற்றில் அரபிய நாடுகளுக்கும் பாரதத்திற்கும் மிகத் தெளிவான தொடர்பு இருந்து வந்ததை அறியமுடிகிறது. ராஷ்ட்ரகூடர்கள்…

தொடர்ந்து வாசிப்பு

கடிகையில் தமிழும் கற்பிக்கப்பெற்றதா…

காஞ்சிக் கடிகை காஞ்சியில் நிலைகொண்டிருந்த கடிகாஸ்தானம் என்னும் கல்விநிறுவனம் பொதுயுகம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே செயல்பட்டு வந்தது. கடிகாஸ்தானத்தைப் பற்றிய மிகப்பழமையான சாசனச் சான்று கர்ணாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்திலுள்ள தாள்ளகுண்டா என்னுமிடத்திலிருந்து கிடைக்கிறது. அந்தக் கல்வெட்டு கதம்பவம்சத்தைச் சேர்ந்த ககுஸ்தவர்மனுடையது. அந்தக் கல்வெட்டு அவனுக்கு இரு தலைமுறைகள் முந்தைய முன்னோனான மயூரவர்மன் என்னும் அரசன் தன் குருவான வீரசர்மனுடன் கூட காஞ்சியிலுள்ள கடிகாஸ்தானத்தில் எல்லா சாஸ்த்ரங்களையும் கற்கவேண்டி காஞ்சிக்கு வந்ததைக் குறிப்பிடுகிறது. அந்தக் கல்வெட்டிலுள்ள பின்வரும் ச்லோகம்…

தொடர்ந்து வாசிப்பு

காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயிலில் இரு புதிய வடமொழிக்கல்வெட்டுக்கள்

இரண்டாம் வடமொழிக்கல்வெட்டு.

காஞ்சியின் முழுமுதல் தெய்வமான அன்னை நகரின் நடுநாயகமாக வீற்றிருக்கிறாள். இங்கு அன்னைக்கு காமாக்ஷி என்றும் அவள் வீற்றிருக்குமிடம் காமகோஷ்டம் – தமிழில் காமகோட்டம் என்றும் வழங்கப்பெறுகிறது. இங்கு அமைந்துள்ள தர்மசாஸ்தாவின் ஸன்னிதியும் கரிகாலசோழனோடு தொடர்புடைய பெருமையுடையது. பொயு ஒன்பதாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்திற்கு எழுதப்பெற்ற உரையான அடியார்க்கு நல்லார் உரை இத்தகையதோர் பெருமையைப் பின்வரும் செய்யுளால் குறிப்பிடுகிறது. கச்சி வளைக்கைச்சி காமகோட்டங்காவல் மெச்சியினிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச்செண்டு கம்ப களிற்றான் கரிகாற்பெருவளத்தான் செம்பொன் கிரிதிரித்த செண்டு. பெருயானை வலி படைத்த…

தொடர்ந்து வாசிப்பு