இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை

     ஸனாதன தர்மத்தில் ஸமூஹ மேம்பாட்டிற்காகப் பலவகையான சடங்குகள் கூறப்பெற்றிருக்கின்றன என்பதை நாமறிவோம். போரில் வெல்லவும் பலவகையான சடங்குகள் கூறப்பெற்றிருக்கின்றன. நம்முடைய முன்னோர்கள் இத்தகைய சடங்குகளைத் தம் வெற்றிக்காகவும் நன்மைக்காகவும் மேற்கொண்டனர். அத்தகையதோர் சடங்கு காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்க கல்வெட்டால் அறியக்கிடக்கிறது.      இந்தக் கல்வெட்டு பொயு 1166 முதல் 1178 வரையாண்ட இரண்டாம் ராஜாதிராஜ சோழனின் காலத்தைச் சேர்ந்தது. அவனுடைய ஆட்சியில் இலங்கையிலிருந்து படை தமிழகத்தில் புகுந்து பல கோயில்களையும் அழித்தது. மக்களுக்கும் சொல்லொணாத் துயரை…

தொடர்ந்து வாசிப்பு

மேலைச் சாளுக்ய பேரரசின் பெண்ணரசி

vijaya

     முதலாம் நரஸிம்ஹ பல்லவன் மேலைச் சாளுக்யர் தம் கோநகராம் வாதாபியைத் தூளாக்கி எரிகொளுவிய செய்தியை நாமறிவோம். ஈடற்ற பேரரசனாகத் திகழ்ந்த இரண்டாம் புலகேசியும் கூட அவனது கரங்களால் மாண்டுபட்டான். இவ்விரு செய்திகளும் வாதாபியிலுள்ள பொயு 642 இல் பொறிக்கப்பெற்ற பல்லவ சாஸனத்தாலும் அவர்தம் குலச் செப்பேடுகளாலும் உய்த்துணரக் கிடக்கிறது. இரண்டாம் புலகேசியின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய மகன்களான ஆதித்யன், சந்த்ராதித்யன் மற்றும் முதலாம் விக்ரமாதித்யன் ஆகியோர் நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். விக்ரமாதித்யனின் ஹொன்னூர் செப்பேட்டில் இவர்களின்…

தொடர்ந்து வாசிப்பு

சுந்தரபாண்ட்யனின் ஸ்ரீரங்கக் கல்வெட்டு

     பின்வரும் கல்வெட்டு ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதரின் ஆலயத்தில் கருவறை முன்னுள்ள மண்டபத்திலுள்ள நான்கு தூண்களிலும் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு 1892 ஆமாண்டு தொல்லியில் அறிக்கையில் 60 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது. பின்னர் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 507 ஆம் எண்ணோடு மூலம் மட்டுமாகப் பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு ஜடாவர்மன் சுந்தர பாண்ட்யன் (பொயு 1251-1268) ஸ்ரீரங்கநாதர் ஆலயத்துக்கு செய்வித்த தங்கத்தினாலான கைங்கர்யங்களைக் குறிப்பிடுகிறது. முதல்வரி மெய்கீர்த்தியின் துவக்கமானாலும் ஒற்றைச் சொல்லுடன நின்றுவிட்டது. வரி 1. स्वस्तिश्री।…

தொடர்ந்து வாசிப்பு

மூன்றாம் நந்திவர்மனின் குமரடி மங்கலச்செப்பேட்டின் வடமொழிப்பகுதி

plate

கிடைத்தவிடம்      இந்தச் செப்பேடு தஞ்சைக்கருகிலுள்ள கருந்தட்டான்குடியிலிருந்த தமிழ்ப்பேராசிரியரான ஸ்ரீ கோவிந்தராஜன் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றது. இதை ஹைதராபாத்திலுள்ள பிர்லா தொல்லியல் மற்றும் பண்பாட்டு ஆய்வகம் விலைக்குப் பெற்றது. செப்பேட்டு விவரங்கள்      இந்தச் செப்பேட்டில் ஐந்து செப்பிதழ்களுள்ளன. அவை 23 செமீ நீளமும் 9 செமீ அகலமும் உடையன. இவற்றின் கனம் 2 செமீ ஆகும். இதன் வளையமும் இலச்சினையும் கிடைக்கவில்லை. இவை நல்ல நிலையில் கிடைத்துள்ளன. இந்தச் செப்பேடு 69 வரிகளைக் கொண்டுள்ளது. இதன்…

தொடர்ந்து வாசிப்பு

நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி

DSC04248

அரசர்களின் சாஸனங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பிருந்தே கிடைத்து வருகின்றன. இவற்றுள் வடமொழிச் சாசனங்களைப் பொறுத்தவரை அயோத்தியில் கிடைத்த கல்வெட்டுச்சாசனமும் கோசுண்டிசாசனமும்  ஹாதிபாடா சாசனமும் மிகப் பழமையானவையாகக் கருதப்பெறுகின்றன (Indian Epigraphy by Rechord Solomon, Page 86). இந்தக் கல்வெட்டுக்கள் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று எழுத்தமைதியைக் கொண்டும் மற்றைய காரணிகளாலும் நிர்ணயிக்கப்பெற்றிருக்கின்றன. அதன் பிறகு கிபி 1-2 நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் மதுரா முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. தென்னகத்தைப் பொறுத்தவரை நாகார்ஜுனகொண்டாவில் கிடைத்த கிபி மூன்றாம்…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் பராந்தகனின் இறுதி ஆட்சியாண்டு

     விஜயாலயனில் துவங்கிய முற்காலசோழர்வரிசையில் முதலாம் பராந்தகனே அதிக ஆட்சியாண்டுகளைக் கொண்டவன். (முதலாம் குலோத்துங்கன் சாளுக்ய வழியைச் சேர்ந்தவன்.) அவனுடைய ஆட்சியின் துவக்க ஆண்டை திரு. ஸேதுராமன் அவர்கள் 906 டிஸம்பர் 27 இலிருந்து 907 ஏப்ரல் 3க்குள்ளாக நிர்ணயித்திருக்கிறார். (Early cholas, pg pg 7). அவனுடைய இறுதி ஆட்சியாண்டு சர்ச்சைக்குரியதாகிறது. அவனுடைய கல்வெட்டுக்கள் 46 ஆம் ஆட்சியாண்டோடு திருக்கண்டியூர் (SII V, No570), திருச்சோற்றுத்துறை (Ins 135 of 1931) ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன….

தொடர்ந்து வாசிப்பு

பல்லவர் வரலாற்றில் பப்ப பட்டாரகர்

பல்லவர் செப்பேடுகளில் பப்ப பட்டாரகர் என்னும் பெயரை பலமுறை கண்டிருக்கலாம். சிவஸ்கந்தவர்மனின் ஹிரஹடகல்லி செப்பேட்டில் துவங்கி பெரும்பாலும் எல்லா செப்பேடுகளுமே இந்தச் சொல்லைக் கொண்டுள்ளன. எல்லாச் செப்பேடுகளும் அரசனை “பப்ப பட்டாரக-பாதானுத்யாத” என்றே குறிப்பிடுகின்றன. பப்ப பட்டாரகரின் திருவடிகளை த்யானிக்கும் என்பது இதன் பொருள். மிகப்பழமையான செப்பேடான ஹிரஹடகல்லி செப்பேடு பப்ப ஸ்வாமி என்பவருக்கு மஹாராஜர் என்னும் அடைமொழியையும் தருகிறது. மற்றைய செப்பேடுகளின் குறிப்பாவன. விஷ்ணுகோபவர்மனின் உறுவப்பள்ளி செப்பேடு –     பப்ப பட்டாரக மஹாராஜ பாதபக்த இரண்டாம்…

தொடர்ந்து வாசிப்பு

வேறுமாநிலத்தைச் சேர்ந்த இரு சோழ தளபதிகள்

இடைக்கால வரலாற்றுப் பகுதியில் திறமை எப்பகுதியில் இருந்தாலம் மெச்சிப் போற்றப்பெற்றது. இதை அக்காலத்திய கல்வெட்டுக்களை ஆராய்வதன் மூலம் தெள்ளென அறியவியலும். அத்தகைய இருவர் சோழர்தம் தளபதிகளாகப் பணியாற்றியமையைக் காண்போம். வெள்ளன் குமரன் இவன் கேரளத்தின் நந்திக்கரைப் புத்தூரைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தகனின் இளவரசனாகிய ராஜாதித்யனுக்கு வலதுகரமாகத் திகழ்ந்தவன். அவனுடைய சரிதம் கிராமம் என்னுமூரிலுள்ள கல்வெட்டின் வாயிலாகத் தெரியவருகிறது. அங்கு அவன் எந்தைக்கு ஒரு கற்றளி எடுப்பித்த செய்தியை அந்தக் கல்வெட்டு சுட்டுகிறது. அந்தக் கல்வெட்டின் வடமொழிப்பகுதியைக்…

தொடர்ந்து வாசிப்பு

பக்தி பகைமையைக் காட்டிலும் பெரிது,.

பண்பட்ட மனத்திலெழும் பக்தியெனுமுணர்வு உறுதிபடுங்கால் அது மற்றைய உணர்வுகளைக் காட்டிலும் மேலோங்கி நிற்பது கண்கூடு. அத்தகைய பண்பட்ட பக்தி வெறுப்பு, சினம், பகை போன்ற உணர்வுகளால் உள்ளடங்காது உயர்ந்து நிற்கும். வரலாற்று காலத்திலும் பரம்பரைப் பகையைக் காட்டிலும் பக்தியே பெருஞ்செல்வமாகப் போற்றப்பெற்றுள்ளது. அக்காலக் கல்வெட்டுக்களை நோக்குங்கால் இந்தச் செய்தி வெள்ளிடைமலையாகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேந்திபுரத்தில் முதலாம் பராந்தகன் காலத்துக் கல்வெட்டு இந்தச் செய்தியை ஐயந்திரிபற தெளிவாக்குகிறது. இந்தக் கல்வெட்டு தெய்வநாயகப் பெருமாள் கோயிலிலுள்ள பிராகாரத்தின் தூணில் செதுக்கப்பெற்றுள்ளது….

தொடர்ந்து வாசிப்பு

பாண்டியர் தம் அறிவார்ந்த அலுவலர்கள் இருவர்

அறிவு சார் வேலைகளும் அலுவலக வேலைகளும் மிகவும் அரிதாகவே ஒருவரிடமே மலிந்து நிற்கும். அத்தகையதோர் அரிய ஒருங்கிணைப்பு இடைக்கால வரலாற்றில் கல்வெட்டுக்கள் வாயிலாக காணக்கிடைக்கிறது. மிகப் பண்டைய உலகத்து அரசர் பரம்பரைகளுள் ஒன்றான பாண்டியர்தம் அவையில் அத்தகையதோர் ஒருங்கிணைப்பு இருந்ததை அறிய முடிகிறது. அத்தகைய இருவரைப் பற்றி இப்போது பார்ப்போம் மாறன் காரி             இவன் பராந்தகன் நெடுஞ்சடையனான முதலாம் வரகுணனின் அவைக்களத்து அமைச்சன். இவனது அலுவலகப்பெயர் மூவேந்த மங்கலப்பேரரையன் என்பதாகும். இவன் கரவிந்தபுரம் (களக்குடி) என்னும்…

தொடர்ந்து வாசிப்பு