ஸ்ரீபீடம் சார்த்திய ஸ்தபதி

     பொதுவாகத் திருக்கோயில்களில் சிற்பம் முதலியவற்றை உருவாக்கும் ஸ்தபதிகள் தம் வேலை முடிந்த பிறகு ஸன்மானத்தோடு தகுந்த மரியாதை செய்து அனுப்பப் பெறுவர். அதன் பிறகு ப்ரதிஷ்டை முதலியவற்றை சிவாசார்யர்களும் பட்டாசார்யர்களும் மேற்கொள்வர். ஆனால் கல்வெட்டொன்று கோயிலில் உடையாரின் ஸ்ரீபீடம் சுதையினாலேயே இருந்ததனால் காசளித்து கல்லினால் ஸ்ரீபீடம் உருவாக்கச் செய்து அதைப் பொருத்தமுடியாமல் ஏதோ காரணத்தினால் சைவாசார்யர்கள் திண்டாட ஸ்தபதியே பொருத்திய செய்தியைத் தெரிவிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு உடையார்கோயில் கரவந்தீச்வரர் கோயிலின்…

தொடர்ந்து வாசிப்பு

கல்வெட்டியில் சிற்பியின் இலக்கணம்

     பின்வரும் கல்வெட்டு அதன் இயல்பினால் மிகவும் முக்யமானதும் அரிதானதுமானது. இந்தக் கல்வெட்டு திருவாரூர் தியாகேசப்பெருமானின் திருக்கோயிலில் முதற் ப்ராகாரத்தில் வடபுறச்சுவரில் செதுக்கப் பெற்றுள்ளது. இது இருமொழிக்கல்வெட்டாகும். இதன் வடமொழிப்பகுதி க்ரந்த எழுத்துக்களிலும் தமிழ்ப்பகுதி தமிழ் எழுத்துக்களிலுமானவை. இந்தக் கல்வெட்டு விச்வகர்மகுலத்தைப் பற்றிய நீண்ட நெடிய விளக்கமான அலசலைத்தருகிறது. பாண்டிகுலாந்தகச்சதுர்வேதி மங்கலத்தைச்சேர்ந்த சில அந்தணர்கள் ஆகம, புராண, சிற்ப நூல்களை ஆராய்ந்து விச்வகர்ம குலத்தினரின் ஸமூஹ நிலை, கடமை மற்றும் உரிமைகளைப் பற்றிய நீண்ட நெடிய விளக்கத்தை…

தொடர்ந்து வாசிப்பு