கதிரவனின் கணைப்போர்

கதிரவனின் கணைப்போர்

ஒப்புவமையின்றி ஒளிவீசும் கலாச்சாரத்தைப் படைத்த நமது பாரதமண்ணில் எல்லாக் கூறுகளிலும் தெய்வத்தன்மையைக் கண்டு போற்றும் பண்பு இன்றளவும் எழில்வாய்ந்ததொன்றாக போற்றப்பெறுகிறது. சிற்பங்களும் கட்டிடக்கலையும் தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடுகளாக ஏற்றம் பெற்றுத் திகழ்கின்றன. அந்தச் சிற்பங்களிலும் வேத, புராணச் செய்திகளின் நுட்பமான வெளிப்பாடு இருபுலத்தையும் உணர்ந்தவர் மனதில் இறும்பூதெய்தச் செய்கிறது.

பல்லவர் காலத்திய ஆலய சிற்பங்களில் வேதபுராணச் செய்திகள் திறம்பட எடுத்தாளப் பெற்றிருக்கின்றன. அதைத்தொடர்ந்து சோழர்கால சிற்பங்களிலும் வேதபுராணச் செய்திகள் திறனுற கையாளப்பெற்றிருப்பதைக் காணும்போது அவர்தம் அறிவுத்திறத்தை வியக்காமலிருக்கமுடியவில்லை.

 

அந்தணர்தம் அன்றாடவழிபாடு

அந்தணர்களுக்கு விதிக்கப்பெற்ற ஆறுவிதமான நாட்கடமைகளுள் தலையாயது ஸந்த்யாவந்தனம் எனப்பெறும் கடமை. காணாமல் கோணாமல் கண்டு செய் என்ற வழக்கின்படி காலை கதிரவனின் தோற்றத்திற்கு முன்பும் நண்பகலில் கோணாது பகலவன் நேராக நிற்கும்போதும் மாலை மறைந்ததைக் கண்டபின்னும் இறுக்கும் கடமையிது. இந்தக் கடமையில் மூன்றுவேளையும் அந்தணர்கள் கதிரவனை குறித்து மந்த்ரங்களைக் கூறி அர்க்யம் இட்டு அதன்பிறகு கதிரவனுக்குண்டான காயத்ரீ மந்த்ரத்தை ஜபம் செய்வர். இத்தகைய அர்க்யம் ஏன் விடவேண்டும் என்பதற்கான விளக்கம் தைத்திரீய ஆரண்யகத்தில் இருக்கிறது. இந்த மந்த்ரம் பொதுவாக நீத்தார் கடன் தீர்க்கும் ச்ராத்த நாளில் அந்தணர் வீடுகளில் உணவு படைக்கும் போது ஜபிக்கப்பெறும், அந்த மந்த்ரத்தையும் அதன் பொருளையும் பார்ப்போம்.

रक्षाग्ंसि ह वा पुरो’नुवाके तपो’ग्रमतिष्ठन्त तान्प्रजापतिर्वरेणोपामन्त्रयत तानि वरम् अवृणीत आदित्यो नो योद्धा इति तान्प्रजापतिरब्रवीत् योधयध्वमिति

ரக்ஷாக்³ம்ʼஸி ஹ வா புரோ’நுவாகே தபோ’க்³ரமதிஷ்ட²ந்த தான்ப்ரஜாபதிர்வரேணோபாமந்த்ரயத தானி வரம் அவ்ருʼணீத ஆதி³த்யோ நோ யோத்³தா⁴ இதி தான்ப்ரஜாபதிரப்³ரவீத் யோத⁴யத்⁴வமிதி

பொருள்

முன்பு அவுணர்கள் மிகக் கடுமையான தவத்தை இயற்றினார்கள். அப்போது ப்ரஜாபதி அவர்க்ளின் முன் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அவர்களோ கதிரவனை எங்களோடு போரிடுமாறு செய்யும் வரம் வேண்டும் என்று கேட்டனர். ப்ரஜாபதி அவ்விதமே நீங்கள் போரிடுங்கள் என்று வரம் கொடுத்தார்,

 

तस्मादुत्तिष्ठन्तग्ं ह वा तानि रक्षाग्ंसि आदित्यं योधयन्ति यावदस्तमन्वगात् तानि ह वा एतानि रक्षाग्ंसि गायत्रियाभि-मन्त्रितेन अंभसा शाम्यन्ति तदु ह वा

தஸ்மாது³த்திஷ்ட²ந்தக்³ம்ʼ ஹ வா தானி ரக்ஷாக்³ம்ʼஸி ஆதி³த்யம்ʼ யோத⁴யந்தி யாவத³ஸ்தமன்வகா³த் தானி ஹ வா ஏதானி ரக்ஷாக்³ம்ʼஸி கா³யத்ரியாபி⁴-மந்த்ரிதேன அம்ப⁴ஸா ஸா²ம்யந்தி தது³ ஹ வா

பொருள்

ஆகவே அந்த அவுணர்கள் காலையில் எழும் கதிரவனோடு மாலை மறையும் வரை போரிட்டனர். அந்த அவுணர்கள் காயத்ரி மந்த்ரத்தினால் மந்த்ரிக்கப்பெற்ற நீரினாலேயே அடங்குகின்றனர்,

एते ब्रह्मवादिनः पूर्वाभिमुखाः सन्ध्यायां गायत्रियाभिमन्त्रिता आप ऊर्ध्वं विक्षिपन्ति ता  एता आपो वज्रीभूत्वा तानि रक्षाग्ंसि मन्देहारुणे द्वीपे प्रक्षिपन्ति

ஏதே ப்³ரஹ்மவாதி³ன​: பூர்வாபி⁴முகா²​: ஸந்த்⁴யாயாம்ʼ கா³யத்ரியாபி⁴மந்த்ரிதா ஆப ஊர்த்⁴வம்ʼ விக்ஷிபந்தி தா  ஏதா ஆபோ வஜ்ரீபூ⁴த்வா தானி ரக்ஷாக்³ம்ʼஸி மந்தே³ஹாருணே த்³வீபே ப்ரக்ஷிபந்தி

பொருள்

இந்த வேதத்தைக் கூறும் அந்தணர்கள் கிழக்குமுகமாக ஸந்த்யா வந்தனத்தில் காயத்ரி மந்த்ரத்தினால் ஜபிக்கப்பெற்ற நீரை மேலே எறிகின்றனர். அந்த நீரே வஜ்ராயுதமாக மாறி அந்த அவுணர்களை மந்தே ஹாருணே தீவில் எறிகிறது.

यत्प्रदक्षिणं प्रक्रमन्ति तेन पाप्मानमवधून्वन्ति

उद्यन्तम् अस्तंयन्तम् आदित्यम् अभिध्यायन् कुर्वन् ब्राह्मणो विद्वान् सकलं भद्रमश्नुते

யத்ப்ரத³க்ஷிணம்ʼ ப்ரக்ரமந்தி தேன பாப்மானமவதூ⁴ன்வந்தி

உத்³யந்தம் அஸ்தம்ʼயந்தம் ஆதி³த்யம் அபி⁴த்⁴யாயன் குர்வன் ப்³ராஹ்மணோ வித்³வான் ஸகலம்ʼ ப⁴த்³ரமஸ்²னுதே

பொருள்

வலமாகச் சுழற்றுவதனால் பாவத்தை நீக்கிக் கொள்கின்றனர். உதிக்கும் மற்றும் மறையும் கதிரவனை மனத்தால் த்யானித்து இவ்வாறு செய்யும் அறிவாளியான அந்தணன் எல்லா மங்களத்தையும் அடைகிறான்.

असावादित्यो ब्रह्मेति ब्रह्मैव सन् ब्रह्माप्येति

य एवं वेद ॥

அஸாவாதி³த்யோ ப்³ரஹ்மேதி ப்³ரஹ்மைவ ஸன் ப்³ரஹ்மாப்யேதி

ய ஏவம்ʼ வேத³ ||

இந்த கதிரவன்தான் ப்ரஹ்மமாகும். ப்ரஹ்ம்மாக இருந்து ப்ரஹ்மத்தையே அடைகிறான், இப்படி அறிபவனே,,,

 

இவ்வாறு மந்த்ரம் கூறுகிறது., இதே கதை ஹாரீத ஸ்ம்ருதியிலும் கூறப்பெற்றிருக்கிறது.

 

आदित्येन सह प्रातः मन्देहानाम राक्षसाः।

युध्यन्ति वरदानेन ब्रह्मणोऽव्यक्तजन्मनः॥

ஆதித்தனோடு கூட காலையில் மந்தேஹா என்னும் அவுணர்கள் தானாக தோன்றிய ப்ரஹ்மனின் வரத்தால் போரிடுகின்றனர்.

उदकाञ्जलिनिक्षेपात् गायत्र्याचाभिमन्त्रितः।

निघ्नन्ति राक्षसान् सर्वान् मन्देहाख्यान् द्विजेरिताः॥

அந்தணர்கள் காயத்ரி மந்த்ரத்தைக் கூறி நீரை அஞ்ஜலியாகத் தருவதால் அது அந்த மந்தேஹர் என்று பெயர் பெற்ற அவுணர்களை அழிக்கிறது.

ततः प्रयाति सविता ब्राह्मणैरभिरक्षितः।

मरीच्याद्यैर्महाभागैः सनकाद्यैश्च योगिभिः॥

அதன் பிறகே மரீசி முதலிய பெரியோர்களாலும் ஸனகர் முதலிய யோகிகளாலும் அந்தணர்களாலும் காக்கப்பெற்ற கதிரவன் தன் வழியே செல்கிறான்.

तस्मान्नलङ्घयेत् सन्ध्यां सायं प्रातः समाहितः।

उल्लङ्घयति यो मोहात् स याति नरकं ध्रुवं॥

ஆகவே ஒருவரும் ஸந்த்யா வந்தனத்தைக் காலையிலும் மாலையிலும் தவறக்கூடாது., எவன் தவறுகிறானோ அவன் நிச்சயமாக நரகத்தை அடைகிறான்.

 

இவ்விதம் வேதத்தில் சொல்லப்பெற்ற கருத்தே ஹாரீத ஸ்ம்ருதியிலும் கூறப்பெற்றுள்ளது.

 

கூத்தரின் கூற்று

 

இதே கருத்தை குறிப்பாலுணர்த்தும் ஒட்ட கூத்தர் தமது தக்கயாக பரணியில்

எழுங்கடற்ப கைப்பி ணத்தும் ரவிதி கந்த எல்லை போய்

விழுங்க டற்ப கைப்பி ணத்தும் ஓடி உண்டு மீள்பவே

இந்தப் பாடலில் பேய்களைப் பாடும் கூத்தர், அந்தப் பேய்கள் கதிரவன் எழும்போதும் விழும்போதும் அவுணர்களோடுபோராடி அவுணர்களின் பிணங்களை வீழ்த்துகிறான் அல்லவா. அவற்றைத் தின்று வர அங்கே ஓடும் பேய்கள் என்று குறிப்பிடுகிறார்.

சிற்பத்தில் செய்தி

கதையொருபுறம் இருக்கட்டும். இந்தக் கதை சிற்பத்தில் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா. அதற்கு முதலில் புத்தகயாவில் கிடைத்த சிற்பத்திலிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். பின்வரும் சிற்பத்தைப் பாருங்கள்.

bodhgaya

பொ.யு. 4-5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக்க் கருதப்பெறும் இந்தச் சிற்பத்தில் மின்னேர் தனியாழி வெங்கதிரோன் நடுநாயகமாக வீற்றிருக்கின்றான். இருபுறமும் இரு தேவியர்கள். இரு ஸந்திகளையும் குறிப்பிடும் உஷா மற்றும் ப்ரத்யுஷா. இருவரும் கட்டழகோடு கணைவில்லையும் கையிலேந்தியுள்ளனர், அவர்களின் முன்பு அவுணர்கள் இறந்து படுவதைப் போல இந்த சிற்பம் அமைந்துள்ளது,

அதுசரி இதற்கும் தமிழகச் சிற்பக்கலைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா, புஞ்சையில் இருக்கும் பின்வரும் குறுஞ்சிற்பத்தைப் பாருங்கள்.

Surya with Usha and Chaya

Surya with Usha and Chaya

அதே தனியாழி வெங்கதிரோன், இருபுறமும் கணைவில்லோடு கட்டழகியர். களைத்து வீழும் அவுணர்கள்,. என்று இந்த சோழர்திறத்தைச் சொக்கும் விதத்தில் காட்டும் பத்தாம் நூற்றாண்டு சிற்பம் வேதபுராணச் செய்தியை விளக்கும் பாங்கே அழகல்லவா…

Please follow and like us:

2 thoughts on “கதிரவனின் கணைப்போர்

 1. .
  .
  ரிக் வேத காலத்தில்
  .
  ஒரேயினமாய்
  ..
  நமது ….
  மூதாதையரின்
  .
  வாழ்நிலை
  ..
  இயற்க்கையோடு
  இயற்க்கையாக

  இறைவனோடு
  இயற்க்கையாக
  .
  இழைந்திருக்க
  .
  இழைந்ததால்
  பிரிந்தது
  ..
  குணங்களாய்
  பிரிந்தது
  .
  பிரிந்தது
  ..
  இன்னும் ….
  பிரிந்தது
  .
  குலங்களாக
  பிரிந்தது
  .
  பிரிந்தே
  நின்றாலும்
  .
  நின்றயிடத்திலேயே
  ..
  நின்று
  .
  நமது
  மூதாதையர்
  ..
  இயற்க்கையான
  .
  ப்ரமத்தை
  ..
  உணர்வில்
  உள்வாங்கி

  உயர்வாக
  வாழ்ந்த
  வாழ் நிலையை
  .
  ஓரினமாய்
  நின்று
  .
  நினைவுப்படுத்தியதற்காக
  ..
  நினைவோடு
  இன்றுவரை
  .
  கடமையாக
  கடைப்பிடித்துவருவதை
  .
  நினைத்து
  .
  நமையெல்லாம்
  ..
  ப்ரமத்தையரிய
  தூண்டும்
  .
  நமை
  நாம்

  யாரென்று
  ..
  அரிய. ….
  தூண்டும்
  .
  இப்புனித

  குணப்பதிவிற்க்கு
  ..
  கடமையான
  பதிவிற்கு
  .
  இதயம்
  கனிந்த

  ப்ரம்மம்
  .
  0
  .

  .
  .

 2. .
  .
  ரிக் வேதத்தில்
  .
  நெறியோடு…

  நடுநிலையாய்
  ..
  வாழ்ந்த
  .
  நமது
  மூதாதையரின்

  வாழ்நிலை
  .
  தொகுப்பாயிருக்க….

  .
  .

  தொகுத்ததை
  .
  அயணப்படுத்தி ….
  .
  பயன்டுத்திய
  காலகட்டத்தை
  ..
  கடந்து வந்த
  பிற்காலகட்டத்தில்
  .
  ஒரேயினமாய்
  ..
  நமது ….
  மூதாதையரின்
  .
  வாழ்நிலை
  ..
  இயற்க்கையோடு
  இயற்க்கையாக

  இறைவனோடு
  இயற்க்கையாக
  .
  இழைந்திருக்க
  .
  இழைந்ததால்
  பிரிந்தது
  ..
  குணங்களாய்
  பிரிந்தது
  .
  பிரிந்தது
  ..
  இன்னும் ….
  பிரிந்தது
  .
  குலங்களாக
  பிரிந்தது
  .
  .
  கலியுக காலகட்டத்தில்
  .
  நந்த வம்ச
  காலகட்டத்தில்
  ..
  பிரிந்தே
  நின்றாலும்
  .
  நின்றயிடத்திலேயே
  ..
  நின்று
  .
  நமது
  மூதாதையர்
  ..
  இயற்க்கையான
  .
  ப்ரமத்தை
  ..
  உணர்வில்
  உள்வாங்கி

  உயர்வாக
  வாழ்ந்த
  வாழ் நிலையை
  .
  ஓரினமாய்
  நின்று
  .
  நினைவுப்படுத்தியதற்காக
  ..
  நினைவோடு
  இன்றுவரை
  .
  கடமையாக
  கடைப்பிடித்துவருவதை
  .
  நினைத்து
  .
  நமையெல்லாம்
  ..
  ப்ரமத்தையரிய
  தூண்டும்
  .
  நமை
  நாம்

  யாரென்று
  ..
  அரிய. ….
  தூண்டும்
  .
  இப்புனித

  குணப்பதிவிற்க்கு
  ..
  கடமையான
  பதிவிற்கு
  .
  இதயம்
  கனிந்த

  ப்ரம்மம்
  .
  0
  .

  .
  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *