கல்வெட்டில் மறுஜென்ம கதை

பின்வரும் கல்வெட்டு இயல்பில் மிகவும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது. இந்தக் கல்வெட்டு ஆந்திர மாநிலம், பெஜவாடாவிலுள்ள இந்த்ர கீல மலையில் அமைந்துள்ளது. அங்கு நிறுவப்பெற்றுள்ள ஒரு தூணில் இந்தக் கல்வெட்டு செதுக்கப்பெற்றுள்ளது. அந்தத் தூணில் கிராத-அர்ஜுனர்களின் உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளது.  இந்தக் கல்வெட்டு 1915 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் ஆண்டறிக்கையில் 33-ஆம் எண்ணோடு பதிவு செய்யப்பெற்றுள்ளது.

இந்தக் கல்வெட்டு அர்ஜுனன் தவமியற்றி பாசுபதாஸ்த்ரம் பெற்ற இடம் என்று அவ்விடத்தைக் குறிப்பிடுவதால் மிகவும் இன்றியமையாததாகிறது. இந்தக் கல்வெட்டை பெச்சவாடா கலியம போயி என்பவரின் மகனான த்ரிகோடி போயி என்பவர் வெட்டுவித்தார். அவர் தன்னைத்தானே ஒரு யக்ஷரின் மறுபிறப்பாகக் கூறிக்கொண்டுள்ளார். அந்த யக்ஷன்தான் அர்ஜுனனைத் தவமியற்ற அவ்விடத்திற்கு அழைத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கல்வெட்டு பத்தாம் நூற்றாண்டு சாளுக்யர்தம் எழுத்துக்களால் எழுதப்பெற்றுள்ளது. வடமொழியில் அமைந்த இக்கல்வெட்டு தெலுகு வரிவடிவத்திலெழுதப்பெற்றுள்ளது.

இதன் வரிகளாவன..

 

Line 1:        అర్జ్జునః ఫల్గుణ[:] పార్త్థ[:] కిరీటీ శ్వేతవాహ

Line 2:        నః వీభత్సుర్వ్విజయ[:] క్రిష్ణః సవ్యసాచీ ధనం

Line 3:        జయః స్వస్తి శ్రూయతే ఖలు ద్వైతవనే పాణ్డవా

Line 4:        న్దృష్ట్వా తత్పక్షపాతేన వ్యగ్రో అర్జ్జున ఇన్ద్రకీలం గత్వా

Line 5:        విష్ణుసాహాయ్యతో తపసా మహేన్ద్రమారాధ్య తదుప

Line 6:        దేశాత్ మహేశ్వరమారాధయతః పాశుపతాస్త్రా

Line 7:        ర్త్థం చాతిగహనమిన్ద్రకీలం అయం యక్షః ప్రాప

Line 8:        యిష్యతి త్వామిత్యాదిష్టవానితి స చ యక్షః శాపా

Line 9:        న్తరాత్కలౌ పెచ్చవాడకలియమబోయి పుత్రః

Line 10:      త్రికోటి బోయి నామా ధార్మ్మికః ప్రాదురభూ

Line 11:      ద్యః కర్ణ్ణ ఇవ బలపరాక్రమోపేతో వదా

Line 12:      న్యశ్చl మాతలిరివ సర్వ్వకార్య్యకుశలః స్వా

Line 13:      మిభక్తశ్చl హనుమానివ విదితజన్మాన్త

Line 14:      రావతారో స్వకులోత్తమచరితశ్చl సః పూ

Line 15:      ర్వ్వమర్జ్జున మైత్ర్యాజ్జన్మాన్తరవేదీ తత్పా

Line 16:      శుపతాస్త్రావాప్తికలాన్నిదానమిన్ద్రకీలే

Line 17:      స్వయశోనిధిమివ స్వకులాభివృద్ధయే

Line 18:      స్తమ్భమాస్థాపయత్l ఇన్ద్రకీలో గిరి

Line 19:      ర్య్యావత్ ద్యావచ్చేయమ్మహానదీ త్రి

Line 20:      కోటిబోయి ధర్మ్మోయం స్థేయాన్నాపద్భవేది

Line 21:      హl విజయాచార్య్యస్య లిఖితంll

Line 1:            அர்ஜ்ஜுன​: ப²ல்கு³ண[:] பார்த்த²[:] கிரீடீ ஸ்²வேதவாஹ

Line 2:            ந​: வீப⁴த்ஸுர்வ்விஜய[:] க்ரிஷ்ண​: ஸவ்யஸாசீ த⁴னம்ʼ

Line 3:            ஜய​: ஸ்வஸ்தி ஸ்²ரூயதே க²லு த்³வைதவனே பாண்ட³வா

Line 4:            ந்த்³ருʼஷ்ட்வா தத்பக்ஷபாதேன வ்யக்³ரோ அர்ஜ்ஜுன இந்த்³ரகீலம்ʼ க³த்வா

Line 5:            விஷ்ணுஸாஹாய்யதோ தபஸா மஹேந்த்³ரமாராத்⁴ய தது³ப

Line 6:            தே³ஸா²த் மஹேஸ்²வரமாராத⁴யத​: பாஸு²பதாஸ்த்ரா

Line 7:            ர்த்த²ம்ʼ சாதிக³ஹனமிந்த்³ரகீலம்ʼ அயம்ʼ யக்ஷ​: ப்ராப

Line 8:            யிஷ்யதி த்வாமித்யாதி³ஷ்டவானிதி ஸ ச யக்ஷ​: ஸா²பா

Line 9:            ந்தராத்கலௌ பெச்சவாட³கலியமபோ³யி புத்ர​:

Line 10:          த்ரிகோடி போ³யி நாமா தா⁴ர்ம்மிக​: ப்ராது³ரபூ⁴

Line 11:          த்³ய​: கர்ண்ண இவ ப³லபராக்ரமோபேதோ வதா³

Line 12:          ந்யஸ்²சl மாதலிரிவ ஸர்வ்வகார்ய்யகுஸ²ல​: ஸ்வா

Line 13:          மிப⁴க்தஸ்²சl ஹனுமானிவ விதி³தஜன்மாந்த

Line 14:          ராவதாரோ ஸ்வகுலோத்தமசரிதஸ்²சl ஸ​: பூ

Line 15:          ர்வ்வமர்ஜ்ஜுன மைத்ர்யாஜ்ஜன்மாந்தரவேதீ³ தத்பா

Line 16:          ஸு²பதாஸ்த்ராவாப்திகலான்னிதா³னமிந்த்³ரகீலே

Line 17:          ஸ்வயஸோ²னிதி⁴மிவ ஸ்வகுலாபி⁴வ்ருʼத்³த⁴யே

Line 18:          ஸ்தம்ப⁴மாஸ்தா²பயத்l இந்த்³ரகீலோ கி³ரி

Line 19:          ர்ய்யாவத் த்³யாவச்சேயம்மஹானதீ³ த்ரி

Line 20:          கோடிபோ³யி த⁴ர்ம்மோயம்ʼ ஸ்தே²யான்னாபத்³ப⁴வேதி³

Line 21:          ஹl விஜயாசார்ய்யஸ்ய லிகி²தம்ʼll

pillar erected by Trikoṭi boyi

 

இந்தக் கல்வெட்டின் முதல் இரண்டரை அடிகள் அர்ஜுனன், பல்குனன், பார்த்தன், கிரீடீ போன்ற பெயர்களைக் குறிப்பிடுகின்றன. அதன் பிறகுதான் செய்தி ஆரம்பிக்கிறது.

பின்வருவதை நாம் கேட்டிருக்கிறோம். முன்பு த்வைதவனத்தில் பாண்டவர்களைக் காக்க உறுதி பூண்டவனான அர்ஜுனன்  கண்ணனின் ஆணைப்படியே தவமியற்றி இந்த்ரனை மகிழ்வித்து அவனுடைய ஆணையின் வண்ணம் மஹேச்வரரை தவத்தால் மகிழ்விக்க உறுதி பூண்டான். அதற்கான இடத்தை ஒரு யக்ஷன் காட்டுவான் என்ற மஹேந்த்ரனின் ஆணைப்படி யக்ஷன் காட்டிய வழியில் இந்த்ர கீல மலையை அடைந்து தவமியற்றி பாசுபதத்தைப் பெற்றான்.

அந்த யக்ஷன் வேறொரு சாபத்தினால் பெச்சவாடா கலியமபோயி என்பவரின் மகனாக த்ரிகூடபோயி என்னும் வடிவில் பிறந்தான். அவன் அறவாளன். கர்ணனைப்போல வீரமிக்க கொடையாளி. மாதலியைப் போன்று எல்லாச் செயல்களிலும் தேர்ந்தவன். ஹனுமனைப் போல முற்பிறவியை அறிந்தவன். நன்னடத்தையாளன். முன்பு அர்ஜுனனோடு நட்பு ஏற்பட்ட புண்யத்தினால் அவனுக்கு முற்பிறவி நினைவு வந்தது. அர்ஜுனன் பாசுபதம் பெற்ற இடமும் நினைவுக்கு வந்த்து. அவ்விடத்தின் தன் புகழ்த்தொகுதியைப் போன்றும் தன் குலம் வளரவும் ஒரு தூணை நிறுவினான். இந்தத் தூண் இந்த்ரகீலம் மலை இருக்கும் வரையிலும் மஹாநதி இருக்கும் வரையிலும் த்ரிகோடிபோயியின் இந்த தர்ம்ம் நிலைக்கட்டும்.   இது விஜயாசார்யரால் எழுதப்பெற்றது.

இவ்வாறு இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. அர்ஜுனனுக்கு வழி காட்டிய யக்ஷன் மறுபிறப்பு எடுத்து வந்து அதே இடத்தில் தூணை நிறுவியதாககக் கூறும் இந்தக் கல்வெட்டு ஆச்சர்யமானதல்லவா.

இதை உண்மையென்று நம்புவோர்க்கு மஹாபாரதத்திற்கு மீண்டுமோர் சான்று. நம்பாதவர்கள் பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டாக போற்றலாமல்லவா?

Please follow and like us:

One thought on “கல்வெட்டில் மறுஜென்ம கதை

  1. அருமை சார் நல்ல விளக்கங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *