தேய்ந்து போன தினகரன்

நிலவு மாதந்தோறும் தேயும், வளரும். ஆனால் பகலவன் தேய்வதுண்டா. தேய்ந்ததுண்டு என்கின்றன புராணங்கள். அந்தக் கதையைக் கேட்போமா..

கச்யப முனிவருக்குக் கண்ணான புதல்வனானவன் கதிரவன். அவன் உலகுக்கெல்லாம் கண்ணானான். அந்த தூயப்பெருவொளிக்குத் தன் புதல்வியான ஸம்ஜ்ஞா(உஷா) தேவியைத் திருமணம் செய்து கொடுத்தார் விச்வகர்மா. அவர்களுக்கு மூன்று புதல்வர்கள் தோன்றினர். முதலாமவர் வைவஸ்வத மனு. இரண்டாவது புதல்வன் கூற்றுத் தெய்வமான யம தர்மன். அடுத்து யமுனை நதி மகளாகப் பிறந்தாள். ஆயின் ஸம்ஜ்ஞா தேவிக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை. அவள் தன்னுடைய சாயையை – நிழலைப் பார்த்துக் கூறினாள்

சாயையே, நான் என் பிறந்தவீட்டிற்குச் செல்கிறேன். நீ இங்கேயிருந்து என்னிரு புதல்வர்களையும் மகளையும் பார்த்துக் கொள். ஒருபோதும் இதனை ப்ரபுவிடம் கூறாதே என்று கூறினாள்.

அதற்கு சாயையும் தேவி, அவ்வாறே ஆகட்டும். ஆனால் என் தலைமுடியை இழுக்காத வரையிலும் சூளுரைத்துக் கேட்காத வரையிலும்தான் நான் உண்மையைக் கூறாமலிருப்பேன். நீ எங்கே செல்ல விழைகிறாயோ அங்கு செல் என்று பதிலிறுத்தாள்.

அதன் பிறகு ஸம்ஜ்ஞா தேவி தன் பிறந்தவீட்டிற்குச் சென்றாள். தந்தை பலமுறை கணவனிடம் செல்ல வற்புறுத்தியதால் குதிரை வடிவெடுத்து குருதேசத்திற்குச் சென்று ஆஹாரமின்றி பெருந்தவம் புரிந்து வந்தாள்.

     சாயையை ஸம்ஜ்ஞை என்று நினைத்த கதிரவன் அவளோடிணைந்து மூன்று புதல்வர்களைப் பெற்றெடுத்தான். ஸாவர்ணி என்னும் மனு முதலாவது மகன். சனிதேவன் இரண்டாம் புதல்வன். ஸம்வரணனை மணந்த தபதி மூன்றாவது மகளானாள். சாயாதேவி தன் மக்களிடம் அன்போடொழுகியவாறு தன் மூத்தாள் மக்களிடம் அன்பு பாராட்டவில்லை. இதனை மூத்த மகனான வைவஸ்வத மனு பொறுத்துக் கொண்டான். இரண்டாவது மகனான யமனோ பொறுக்கமாட்டாமல் அவனுடைய குழந்தைப்பருவத்தின் உந்துதலால் தாயென்றும் பாராமல் காலால் மிரட்டினான். அதைப் பார்த்த சாயா தேவி அவனுக்கு சாபமளித்தாள். தாயைக் காலால் மிரட்டிய உன் கால் வீழ்ந்து படட்டும் என்று அவள் அளித்தசாபத்தால் யமனுக்குக் கால் வீழ்ந்து பட்டது. அதனால் வெகுண்ட யமன் மனுவோட கூட தன் தந்தையிடம் சென்று மாற்றாந்தாய் செயல்பாட்டைக் கூறி அவளளித்த சாபத்தையும் கூறினாள். அதற்கு பதிலளித்த கதிரவன் மகனே, தர்மாத்மாவான நீ கூறியது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் உன் காலை மீட்க முடியாது. எல்லா சாபங்களுக்கும் விமோசனம் உண்டு. ஆனால் தாயின் சாபத்திற்கு விமோசனமே கிடையாது. ஆகவே உன் காலின் சதையைக் க்ருமிகள் பூமிக்குக் கொண்டு செல்லட்டும் என்று கூறிவிட்டு அதன் பிறகு சாயா தேவியைக் கடிந்து கொண்டான். எந்தத் தாயும் தன் மகனை சபிக்கமாட்டாள். மகனை சபித்த நீயார் உண்மையைச் சொல் அல்லது சபிப்பேன் என்று சூளுரைத்துக் கேட்டான். சாயாதேவி நடுங்கியவளாய் நிகழ்ந்தவை அனைத்தையும் கூறினாள். அதைக் கேட்ட கதிரவன் தன் மாமனாரின் வீட்டுக்குச் சென்றான், அங்கு விச்வகர்மா அவனைத் தேற்றினார். உன்னுடைய வடிவத்தாலும் வெம்மையினாலுமே என் மகளால் நெருங்கமுடியவில்லை. நீ அனுமதி கொடுத்தால் அவற்றை மாற்றி விடுகிறேன் என்று கூறினார். அதற்குக் கதிரவன் ஒப்புக் கொண்டமையால் கதிரவனை சகத்வீகபத்தில் பூமியில் வைத்து தீட்ட ஆரம்பித்தார். கதிரவன் தேயந்து முன்னைக் காட்டிலும் அழகாக வெம்மை குறைந்தவராக ஆனார்., அவரைத் தேய்க்கும் போது சிதறிய துகள்களை வைத்து சிவபெருமானுக்கு சூலம், திருமாலுக்கு சக்ரம் போன்ற ஆயுதங்களையும் செய்து கொடுத்தார் என்று இந்தக் கதை மார்க்கண்டேய புராணத்தில் இருக்கிறது.

மார்கண்டே³ய உவாச|

“அத² தஸ்மை த³தௌ³ கன்யாம்ʼ ஸஞ்ஜ்ஞாம்ʼ நாம விவஸ்வதே|

ப்ரஸாத்³ய ப்ரணதோ பூ⁴த்வா விஸ்²வகர்மா ப்ரஜாபதி​:||

விவஸ்வதஸ்து ஸம்பூ⁴தௌ மனூ த்³வௌ சரிதம்ʼ தயோ​:|

பூர்வமேவ தவாக்²யாதம்ʼ மயைதத³கி²லம்ʼ த்³விஜ​:||

த்ரீண்யபத்யான்யஸௌ தஸ்யாம்ʼ ஜனயாமாஸ கோ³பதி​:|

த்³வௌ புத்த்ரௌ ஸுமஹாபா⁴கௌ³ கன்யாஞ்ச யமுனாம்ʼ நதீ³ம்||

மனுர்வைவஸ்வதோ ஜ்யேஷ்ட²​: ஸ்²ராத்³த⁴தே³வ​: ப்ரஜாபதி​:|

தேஷாம்ʼ யமோ யமீ சைவ யமலௌ ஸம்ப³பூ⁴வது​:||

தத்தேஜோ(அ)ப்⁴யதி⁴கம்ʼ சைவ மார்தண்ட³ஸ்ய விவஸ்வத​:|

அஸஹந்தீ து தத்தேஜ​: ஸ்வாம்ʼ சா²யாம்ʼ வீக்ஷ்ய ஸாப்³ரவதீத்||

ஸஞ்ஜ்ஞோவாச|

அஹம்ʼ யாஸ்யாஸி ப⁴த்³ரம்ʼ தே ஸ்வகஞ்ச ப⁴வனம்ʼ பிது​:|

நிர்விகாரம்ʼ த்வயாப்யத்ர ஸ்தே²யம்ʼ மச்சா²ஸனாத் ஸு²பே⁴||

இமௌ ச பா³லகௌ மஹ்யம்ʼ கன்யா ச வரவர்ணினி|

ஸம்பா⁴வ்யா நைவ சாக்²யேயமிமம்ʼ ப⁴க³வதே த்வயா||

சா²யோவாச|

ஆகேஸ²க்³ரஹணாத்³தே³வி ஆஸா²பான்னைவ கர்ஹிசித்|

ஆக்²யாஸ்யாமி மதம்ʼ துப்⁴யம்ʼ க³ம்யதாம்ʼ யத்ர வாஞ்சி²தம்||

இத்யுக்தா சா²யயா ஸஞ்ஜ்ஞா ஜகா³ஸ பித்ருʼமந்தி³ரம்|

தத்ராவஸத் பித்ருʼக்³ருʼஹே கஞ்சித் காலம்ʼ ஸு²பே⁴க்ஷணா||

ப⁴ர்த்து​: ஸமீபம்ʼ யாஹீதி பித்ரோக்தா ஸா புன​: புன​:|

அக³ச்ச²த்³வட³வா பூ⁴த்வா குரூன் விப்ரோத்தராம்ʼஸ்தத​:||

தத்ர தேபே தப​: ஸாத்⁴வீ நிராஹாரா மஹாமுனே|

பிது​: ஸமீபம்ʼ யாதாயா​: ஸஞ்ஜ்ஞாயா வாக்யதத்பரா||

தத்³ரூபதா⁴ரிணீ ச்சா²யா பா⁴ஸ்கரம்ʼ ஸமுபஸ்தி²தா|

தஸ்யாஞ்ச ப⁴க³வான் ஸூர்ய​: ஸஞ்ஜ்ஞேயமிதி சிந்தயன்||

ததை²வ ஜனயாமாஸ புத்த்ரௌ த்³வௌ கன்யகாம்ʼ ததா²|

பூர்வஜஸ்ய மனோஸ்துல்ய​: ஸாவர்ணிஸ்தேன ஸோ(அ)ப⁴வத்||

யஸ்தயோ​: ப்ரத²மம்ʼ ஜாத​: புத்த்ரயோர்த்³விஜஸத்தம|

த்³விதீயோ யோ(அ)ப⁴வச்சான்ய​: ஸ க்³ரஹோ(அ)பூ⁴த் ஸ²னைஸ்²சர​:||

கன்யாபூ⁴த்தபதீ யா தாம்ʼ வவ்ரே ஸம்ʼவரணோ ந்ருʼப​:|

ஸஞ்ஜ்ஞா து பார்தி²வீ தேஷாமாத்மஜானாம்ʼ யதா²கரோத்||

ஸ்னேஹம்ʼ ந பூர்வம்ʼ ஜாதானாம்ʼ ததா² க்ருʼதவதீ ஸதீ|

மனுஸ்தத் க்ஷந்தவாம்ʼஸ்தஸ்யா யமஸ்²சாஸ்யா ந சக்ஷமே||

ப³ஹுஸ²​: பீட்³யமானஸ்து பிது​: பத்ன்யா ஸுது³​:கி²த​:|

ஸ வை கோபாச்ச பா³ல்யாச்ச பா⁴வினோ(அ)ர்த²ஸ்ய வை ப³லாத்||

பதா³ ஸந்தர்ஜயாமாஸ ச்சா²யாம்ʼ ஸஞ்ஜ்ஞாஸுதோ யம​:|

தம்ʼ ஸ²ஸா²ப தத​: க்ருத்³தா⁴ ஸஞ்ஜ்ஞா ஸா பார்பிவீ ப்⁴ருʼஸ²ம்||

சா²யோவாச|

பதா³ தர்ஜயஸே யன்மாம்ʼ பித்ருʼபா⁴ர்யாம்ʼ க³ரீயஸீம்|

தஸ்மாத்தவைஷ சரண​: பதிஷ்யதி ந ஸம்ʼஸ²ய​:||

யமஸ்து தேன ஸா²பேன ப்⁴ருʼஸ²ம்ʼ பீடி³தமானஸ​:|

மனுனா ஸஹ த⁴ர்மாத்மா ஸர்வம்ʼ பித்ரே ந்யவேத³யத்||

யம உவாச|

ஸ்னேஹேன துல்யமஸ்மாஸு மாதா தே³வ ந வர்ததே|

விஸ்ருʼஜ்ய ஜ்யாயஸோ(அ)ப்யஸ்மான் கனீயாம்ʼஸோ பு³பூ⁴ஷதி||

தஸ்யா மயோத்³யத​: பாதோ³ ந து தே³ஹே நிபாதித​:|

பா³ல்யாத்³வா யதி³ வா மோஹாத் தத்³ப⁴வான் க்ஷந்துமர்ஹஸி||

ஸ²ப்தோ(அ)ஹம்ʼ தாத கோபேன ஜனன்யா தனயோ யத​:|

ததோ ந மன்யே ஜனனீ மமைஷா தபதாம்ʼ வர||

நிர்கு³ணேஷ்வபி புத்த்ரேஷு ந மாதா நிர்கு³ணா ப⁴வேத்|

பாத³ஸ்தே பததாம்ʼ புத்த்ர கத²மேதத்தயோதி³தம்||

தவ ப்ரஸாதா³சரணௌ ந பதேத் ப⁴க³வன் யதா²|

மாத்ருʼஸா²பாத³யம்ʼ மே(அ)த்³ய ததா² சிந்தய கோ³பதே||

ரவிருவாச|

அஸம்ʼஸ²யமித³ம்ʼ புத்த்ர ப⁴விஷ்யத்யத்ர காரணம்|

யேன த்வாமாவிஸ²த் க்ரோதோ⁴ த⁴ர்மஜ்ஞ​: ஸத்யவாதி³னம்||

ஸர்வேஷாமேவ ஸா²பானாம்ʼ ப்ரதிகா⁴தோ ஹி வித்³யதே|

ந து மாத்ராபி⁴ஸ²ப்தானாம்ʼ க்வசிச்சா²பனிவர்தனம்||

ந ஸ²க்யமேதன்மித்²யா து கர்த்தும்ʼ மாதுர்வசஸ்தவ|

கிம்ʼ சித்தே ஸம்ʼவிதா⁴ஸ்யாமி புத்த்ரஸ்னேஹாத³னுக்³ரஹம்|

க்ருʼமயோ மாம்ʼஸமாதா³ய ப்ரயாஸ்யந்தி மஹீதலம்|

க்ருʼதம்ʼ தஸ்யா வச​: த்வஞ்ச த்ராதா ப⁴விஷ்யஸி||

மார்கண்டே³ய உவாச|

ஆதி³த்யஸ்த்வப்³ரவீச்சா²யாம்ʼ கிமர்த²ம்ʼ தனயேஷு வை|

துல்யேஷ்வப்யதி⁴கஸ்னேஹ ஏகத்ர க்ரியதே த்வயா||

நூனம்ʼ ந சைஷாம்ʼ ஜனனீ ஸஞ்ஜ்ஞா க்வாபி த்வமாக³தா|

விகு³ணேஷ்வப்யபத்யேஷு மாதா ஸா²பம்ʼ ந தா³ஸ்யதி||

ஸா தத் பரிஹரந்தீவ நாசசக்ஷே விவஸ்வத​:|

ஸ சாத்மானம்ʼ ஸமாதா⁴ய யுக்தஸ்தத்த்வமவைக்ஷத||

தம்ʼ ஸ²ப்துமுத்³யதம்ʼ த்³ருʼஷ்ட்வா சா²யாஸஞ்ஜ்ஞா தி³னாதி⁴பம்|

ப⁴யேன கம்பிதா ப்³ரஹ்மன் யதா²வ்ருʼத்தம்ʼ ந்யவேத³யத்||

விவஸ்வாம்ʼஸ்து ததா³ க்ருத்³த⁴​: ஸ்²ருத்வா ஸ்²வஸு²ரமப்⁴யகா³த்|

ஸ சாபி தம்ʼ யதா²ன்யாயமர்சயித்வா தி³வாகரம்|

நிர்த³க்³து⁴காமம்ʼ ரோஷேண ஸா²ந்தயாமாஸ ஸுவ்ரத​:||

விஸ்²வகர்மா உவாச|

தவாதிதேஜஸா வ்யாப்தமித³ம்ʼ ரூபம்ʼ ஸுது³​:ஸஹம்|

அஸஹந்தீ தத​: ஸஞ்ஜ்ஞா வனே சரதி வை தப​:||

த்³ரக்ஷ்யதே தாம்ʼ ப⁴வானத்³ய ஸ்வாம்ʼ பா⁴ர்யாம்ʼ ஸு²ப⁴சாரிணீம்|

ரூபார்த²ம்ʼ ப⁴வதோ(அ)ரண்யே சரந்தீ ஸுமஹத்தப​:||

மதம்ʼ மே ப்³ரஹ்மணோ வாக்யாத் யதி³ தே தே³வ ரோசதே|

ரூபம்ʼ நிவர்தயாம்யத்³ய தவ காந்தம்ʼ தி³வஸ்பதே||

மார்கண்டே³ய உவாச|

யதோ ஹி பா⁴ஸ்வதோ ரூபம்ʼ ப்ராகா³ஸீத் பரிமண்ட³லம்|

ததஸ்ததே²தி தம்ʼ ப்ராஹ த்வஷ்டாரம்ʼ ப⁴க³வான் ரவி​:||

விஸ்²வகர்மா த்வனுஜ்ஞாத​: ஸ²கத்³வீபே விவஸ்வத​:|

ப்⁴ரமிமாரோப்ய தத்தேஜ​: ஸா²தனாயோபசக்ரமே||

தே³வாஸ்²ச ப்³ரஹ்யணா ஸார்த்³த⁴ம்ʼ பா⁴ஸ்வந்தமபி⁴துஷ்டுவ​:|

லிக்²யமானம்ʼ ஸஹஸ்ராம்ʼஸு²ம்ʼ ப்ரணேமு​: ஸர்வதே³வதா​:||

தத​: கோலாஹலே தஸ்மின் ஸர்வதே³வஸமாக³மே|

தேஜஸ​: ஸா²தனம்ʼ சக்ரே விஸ்²வகர்மா ஸ²னை​: ஸ²னை​:|| “

இதி மார்கண்டே³யபுராணே ஸூர்யதேஜ​:ஸா²தனம்||

“ஸா²திதம்ʼ சாஸ்ய யத்தேஜஸ்தேன சக்ரம்ʼ வினிர்மிதம்|

விஷ்ணோ​: ஸூ²லஞ்ச ஸர்வஸ்ய ஸி²விகா த⁴னத³ஸ்ய ச||

த³ண்ட³​: ப்ரேதபதே​: ஸ²க்திர்தே³வஸேனாபதேஸ்ததா²|

அன்யேஷாஞ்சைவ தே³வானாமாயுதா⁴னி ஸ விஸ்²வக்ருʼத்|

சகார தேஜஸா பா⁴னோர்பா⁴ஸுராண்யரிஸா²ந்தயே||

இந்தக் கதை பாத்மபுராணத்தின் ஸ்வர்க கண்டத்தின் பதினோராம் அத்யாயத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கதையின் சிற்ப வடிவ வெளிப்பாடு கச்சியேகம்பனின் திருக்கோயிலின் முன்னுள்ள பதினாறுகால் மண்டபத்தில் காணப்பெறுகிறது. இந்த மண்டபம் 1822 ஆம் ஆண்டு ஈங்கோல் சங்கரபத்தர் என்பவரால் கட்டப் பெற்று அக்டோபர் 25 ஆம் தேதி திறக்கப்பெற்றது. இதன் தூண்களில் மிக அபூர்வமான பல சிற்பச் செல்வங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் ஒரு சிற்பம் மேற்சொன்ன கதையை உள்ளடக்கியிருக்கிறது. அந்தச் சிற்பத்தில் விச்வகர்மா தன்னிரு கைகளாலும் கதிரவனைப் பிடித்து சாணைச் சக்கரத்தில் வைத்து தேய்க்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. கீழே உஷா அமர்ந்து பார்ப்பது போலவும் சிற்பம் அமைக்கப் பெற்றுள்ளது.

கதிரவனைச் சாணைக்கல்லில் தேய்த்தல்.

கதிரவனைச் சாணைக்கல்லில் தேய்த்தல்.

இந்தக் கதையின் சிறப்பு செய்தி என்னவென்றால் புராணத்தின்படி கதிரவன் எட்டில் ஒருபங்காகக் குறைக்கப்பெற்றான் என்பதுதான். காரணம் தற்போதைய விஜ்ஞானமும் கூட கதிரவன் முன்னிருந்த அளவில் எட்டில் ஒரு பங்காகச் சுருங்கியிருப்பதாகக் கூறுகிறது. இவ்விரு செய்திகளுக்கும் தொடர்புண்டா என்பதை யாமறியோம் பராபரமே…

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *