மனையாளோடாயினும் சூது விளையாடலாமா

மனையாளோடாயினும் சூது விளையாடலாமா

ஸ்காந்தபுராணத்திலுள்ள ஒரு ச்வாரஸ்யமான கதையொன்று ப்ரபஞ்சத்தின் ஆதி தம்பதியர் விளையாடிய சூதாட்டத்தைத் தகவலாகத் தருகிறது. ஸ்காந்தபுராணத்தின் மாஹேச்வர கண்டத்திலுள்ள கேதாரகண்டத்தில் இந்தக் கதை அமைந்துள்ளது.

ஒருமுறை நாரதர் கைலாயம் போந்து ஆதிதம்பதியரை வணங்கிநின்றார். எந்தை அவர் வந்த காரணத்தை வினவினார். நாரதரோ ஆதிதம்பதியரைக் கண்டு அவர்தம் விளையாட்டையும் கண்டுசெல்ல வேண்டி வந்ததாகக் கூறினார். அப்போது மலைமகள் குறுக்கிட்டு எந்த விளையாட்டைக் காண விழைவதாக வினவினாள். அப்போது நாரதர் பலவகையான விளையாட்டுக்கள் இருந்த போதும் சூதாட்டமான தாயவிளையாட்டைக் காணவிழைவதாகக் கூறினார். அதனைக் கேட்டு சற்றே வெகுண்ட மலைமகள் நீயோ நான்முகனின் மைந்தன். முனிவர்களுக்கும் உபதேசம் செய்யும் வலிமை கொண்டவன். நீ தாயக்கட்டம் விளையாடுவதை அறியக்கூடாயோவென்றாள். அப்போது நாரதர் மலையரசன் மகளே, நானோ முனிவன். பரமேச்வரனின் பதம் பற்றுபவன். நான் எங்ஙனம் சூதாட்டத்தை அறிவேனென்றார். அதனைக் கேட்ட மலைமகள், தாயக்கட்டைகளை எடுத்துக் கொண்டு எந்தையோடு முனிவரின் முன்னாக விளையாடத் தயாரானாள். அவளுடைய விளையாட்டைக் கண்டு வியந்த நாரதர், மிக்க மகிழ்ச்சியோடிருந்து விளையாட்டைக் காணலானார். சேடியரால் சூழப்பெற்ற அன்னை மிகுந்த திறமையோடு விளையாடத் துவங்கினாள். ஆயினும் அவள் எந்தையிடம் தோற்றனள். அந்த ஆட்டத்திற்குப் பணயமாக அவளுடைய அணிகலன்கள் வைக்கப்பெற்றிருந்தன. அவள் தான் சூடியிருந்த பிறைநிலவையும் தனது காது குழைகளையும் கொடுத்தாள். அதனைக் கண்ட நாரதர் அவளை ஏளனம் செய்வது போலப் பேசினார். அதனைக் கேட்டு வெகுண்ட அன்னை மீண்டும் விளையாடத் துவங்கினாள். இரண்டாம் ஆட்டத்திற்குப் பணயம் என்னவென்று ஐயனை வினவினாள். ஐயனும் எனது பிறைநிலவும், காதணிகளும் மற்றைய ஆடையணிகளையும் நீ வென்றால் கைக்கொள்ளலாமென்றார். அழகிய பவானி ஆட்டத்தில் வென்றனள்.

அவள் பணயம் வைக்கப்பெற்ற பொருட்களை வினவினள். ஆனால் ஐயனோ தான் தோற்றதை ஒப்புக்கொள்ளவில்லை. உலகுக்கெல்லாம் தலைவனான நான் தோற்பதாவது என்றார் எந்தை. அவளோ, திசை திருப்பவேண்டாம். தோல்வியை ஒப்புக்கொண்டு என் பணயப்பொருளைத் திருப்பித் தாருங்கள் என்றாள். ஐயனோ மீண்டும் தன்னை எவராலும் வெல்லவியலாது, ஆகவே தான் தோற்கவேயில்லையென்றார். நாரதர் இடைபுகுந்து ஐயனின் சார்பாக, அவரே உலகின் பெருந்தலைவராதலால் அவரை வெல்லமுடியாது என்று எடுத்தியம்பினார். அன்னை அவரைக் கடிந்துகொண்டு வாயை மூடியிருக்க ஆணையிட்டாள். தன் ஆற்றலைக் கொண்டே சிவம் உலகாள்வதையும் குறிப்பிட்டாள்.

இடையில் புகுந்த ப்ருங்கி தன் பங்கிற்கு ஐயனின் சார்பாகப் பேசினார். பெண்களின் சஞ்சலத்தன்மையாலேயே அன்னை இவ்விதம் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். வெகுண்டெழுந்த அன்னையோ, ஒருதலைசார்பின் காரணமாகவே ப்ருங்கி இவ்விதம் கூறுவதாகவும் ஐயனுக்கும் அன்னைக்கும் பேதமேயில்லையெனவும் வாதிட்டாள். ப்ருங்கியோ அதனை ஒப்புக்கொள்ளாமல் ஐயனே மாபெரும் சக்தியென்றும் அதனை முன்னிட்டே அன்னையும் தவமியற்றி ஐயனை அடைந்ததையும் குறிப்பிட்டார். ஆனால் பிறகு மாறி ஐயனையே குற்றம் சாட்டும் குணத்தையும் கண்டித்தார்.

அன்னை சினத்தின் எல்லை கடந்து நின்றனள். ப்ருங்கியை சதையற்றுப் போகும்படி சபித்தனள். அதன் பிறகு பொறமுடியாத அவள் எந்தையின் கையைப் பற்றி அவருடைய அணிகலன்களைக் கழற்றத் துவங்கினாள். அவருடைய அணிகலன்களான வாஸுகி முதலிய பாம்பணிகளைக் கைக்கொண்டாள். அவருடைய பிறைநிலவை எடுத்துக் கொண்டாள். காதணிகளான இரு பாம்புகளையும் பிடுங்கினாள். இறுதியாக ஐயனின் கோவணத்தையும் விட்டாளில்லை. ஒரு குரூர புன்னகையோடு கோவணத்தையும் உருவத் துவங்கினாள். எல்லா கணங்களும் சேடியரும் வெட்கி தலைகுனிந்தனர். ப்ருங்கி, சண்டன், முண்டன், மஹாலோமன், மஹோதரன் துவங்கி எல்லா கணங்களும் குழம்பி நாணினர். அவர்களைக் கண்டு வெட்கிய எந்தை, மலைமகளே, நான்முகன், மாலவன் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் காண்கின்றனர். அவர்கள் நம்மைக் கண்டு நகைப்பர். நீ இவ்விதம் செய்வது தகாது. எனது கோவணத்தையேனும் விட்டுவிடு என்றார். அவளோ, நீங்களோ முனிவர், ஆத்மாவில் நிலைகொண்டவர். உமக்கெதற்கு உள்ளாடை, நீங்கள் தாருகாவனத்தில் ரிஷி பத்னிகளை மயக்கச் சென்றீரே, அப்போது உமது கோவணமும் அவிழ, நிர்வாணமாக அல்லவா சென்றீர், எவரென்ன சொன்னார், ஆகவே நான் வென்ற இதனையும் நீர் விட்டுத்தான் ஆகவேண்டும் என்றாள்.

இதனைக் கேட்டு சினத்தால் வெகுண்ட ஐயன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து நோக்கினார். அனைவரும் பயந்தொடுங்கி, இன்னமும் சிறிது நேரத்தில் அன்னை காமவேளைப் போல சாம்பலாவதுறுதியென்று எண்ணினர். ஆனால் சிறிதும் அசையாத மலைமகளோ, சிறு புன்னகையோடு, நீர் எரிப்பதற்கு நான் காலனுமில்லை, காமனுமில்லை. முப்புரமுமில்லை, அந்தகனும் இல்லை. எனது முன்னர் உமது பார்வை வீணாய்ப் போகும் என்றனள்.

இதனைக் கேட்டு வெறுப்படைந்தார் எந்தை. கைலை விடுத்து செல்லவும் திருவுளம் பூண்டார். எவன் அனைத்தையும் துறக்கின்றானோ அவனே மகிழ்ச்சியோடிருப்பான் என்று அவருக்குத் தோன்றியது. அவர் துறவியர் வாழும் ஸித்த வனத்திற்குச் செல்லத் திருவுளம் பூண்டார். வீரபத்ரர் முதலிய கணங்களும் அவரைப் பின் தொடர்ந்தன. ப்ருங்கி குடையோடும், கங்கையும் யமுனையும் சாமரங்களோடும், நந்தியும் தொடர அவர்கள் சென்றனர். அவர் சென்ற பின்னர் அன்னை தோழியரோடு கவலையில் மூழ்கினாள்.

எந்தையோ தம்மைத் தனியாக விட்டுச் செல்லும்படி கணங்களுக்குக் கூறினார். வீரபத்ரர், கணேசர், குமரக்கடவுள் என்று அனைவரும் அவரை விட்டு நீங்கினர். அவர் பத்மாஸனத்தில் அமர்ந்து தம்மையே நினைந்து கண்களை மூடித் தவமியற்றத் துவங்கினார்.

பிறகு பார்வதி அவரைத் தேடத் துவங்கினாள். தேடித்தேடி ஸித்த வனத்தில் தவமியற்றும் கோலத்தில் எந்தையைக் கண்டாள். அவரை ஆறுதல் செய்ய அவள் ஒரு உபாயத்தை மேற்கொண்டாள். அவள் ஒரு வேடர்மகளாக உருவெடுத்து அவரை மயக்கினாள். அவள் அழகில் மயங்கிய எந்தை தன்னிலை மறந்து கிராமம், கிராமமாக அவளைப் பின்தொடர்ந்தார். அதன் பிறகே அவள் வேடர் பெண்ணில்லை, தன் மனைவியே என்னும் உண்மை தெரியவந்தது. வெகுண்ட அவரை நான்முகன் முதலிய தேவர்கள் ஆறுதல் செய்தனர்.

இறுதியாகத் தன்னிடம் போந்த எந்தை மீண்டும் வழக்கப்படியே உலகைக் காக்கும் கடமையைச் செய்யத் துவங்கினார்.

|| நாரத³ உவாச||

நதோஸ்ம்யஹம்ʼ தே³வவரௌ யுவாப்⁴யாம்ʼ பராத்பராப்⁴யாம்ʼ கலயா ததா²பி||

த்³ருʼஷ்டௌ மயா த³ம்பதீ ராஜமானௌ யௌ வீஜபூ⁴தௌ ஸசராசரஸ்ய ||  34.53 ||

பிதரௌ ஸர்வலலோகஸ்ய ஜ்ஞாதௌ சாத்³யைவ தத்த்வத​:||

மயா நாஸ்த்யத்ர ஸந்தே³ஹோ ப⁴வதோ​: க்ருʼபயா ததா²||  34.54 ||

ஏவம்ʼ ஸ்துதௌ ததா³ தேன நாரதே³ன மஹாத்மனா||

துதோஷ ப⁴க³வாஞ்ச²ம்பு⁴​: பார்வத்யா ஸஹிதஸ்ததா³||  34.55 ||

|| மஹாதே³வ உவாச||

ஸுகே²ன ஸ்தீ²யதே ப்³ரஹ்மன்கிம்ʼ கார்யம்ʼ கரவாணி தே||

தச்ச்²ருத்வா வசனம்ʼ ஸ²ம்போ⁴ர்னாரதோ³ வாக்யமப்³ரவீத்||  34.56 ||

த³ர்ஸ²னம்ʼ ஜாதமத்³யைவ தேன துஷ்டோ(அ)ஸ்ம்யஹம்ʼ விபோ⁴||

த³ர்ஸ²னாத்ஸர்வமேவாத்³ய ஸ²ம்போ⁴ மம ந ஸம்ʼஸ²ய​:||  34.57 ||

க்ரீட³னார்த²மிஹாயாத​: கைலாஸம்ʼ பர்வதோத்தமம்||

ஹ்ருʼதி³ஸ்தோ² ஹி ஸதா³ ந்ரூʼணாமாஸ்தி²தோ ப⁴க³வன்ப்ரபோ⁴||  34.58 ||

ததா²பி த³ர்ஸ²னம்ʼ பா⁴வ்யம்ʼ ஸததம்ʼ ப்ராணினாமிஹ||  34.59 ||

|| கி³ரிஜோவாச||

கா க்ரீடா³ ஹி த்வயா பா⁴வ்யா வத³ ஸீ²க்⁴ரம்ʼ மமாக்³ரத​:||

தஸ்யாஸ்தத்³வசனம்ʼ ஸ்²ருத்வா உவாச ப்ரஹஸன்னிவ||  34.60 ||

த்³யூதக்ரீடா³ மஹாதே³வ த்³ருʼஸ்²யதே விவிதா⁴த்ர ச||

ப⁴வேத்³த்³வாப்⁴யாம்ʼ ச த்³யூதே ஹி ரமணான்மஹத்ஸுக²ம்||  34.61 ||

இத்யேவமுக்த்வோபரதம்ʼ ஸதீ ப்⁴ருʼஸ²முவாச வாக்யம்ʼ குபிதா ருʼஷிம்ʼ ப்ரதி||

கத²ம்ʼ விஜானாஸி பரம்ʼ ப்ரஸித்³த⁴ம்ʼ த்³யூதம்ʼ ச து³ஷ்டோத³ரகம்ʼ மனஸ்வினாம்||  34.62 ||

த்வம்ʼ ப்³ரஹ்மபுத்ரோ(அ)ஸி முனிர்மனீஷிணாம்ʼ ஸா²ஸ்தா ஹி வாக்யம்ʼ விவிதை⁴​: ப்ரஸித்³தை⁴​:||

சரிஷ்யமாணோ பு⁴வனத்ரயே ந ஹி த்வத³ன்யோ ஹ்யபரோ மனஸ்வீ||  34.63 ||

ஏவமுக்தஸ்ததா³ தே³வ்யா நாரதோ³ தே³வத³ர்ஸ²ன​:||

உவாச வாக்யம்ʼ ப்ரஹஸன்கி³ரிஜாம்ʼ ஸி²வஸன்னிதௌ⁴||  34.64 ||

|| நாரத³ உவாச||

த்³யூதம்ʼ ந ஜானாமி ந சாஸ்²ரயாமி ஹ்யஹம்ʼ தபஸ்வீ ஸி²வகிங்கரஸ்²ச கத²ம்ʼ ச மாம்ʼ ப்ருʼச்ச²ஸி ராஜகன்யகே யோகீ³ஸ்²வராணாம்ʼ பரமம்ʼ பவித்ரே||  34.65 ||

நிஸ²ம்ய வாக்யம்ʼ கி³ரிஜா ஸதீ ததா³ ஹ்யுவாச வாக்யம்ʼ ச விஹஸ்ய தம்ʼ ப்ரதி||

ஜானாஸி ஸர்வம்ʼ ச ப³டோ(அ)த்³ய பஸ்²ய மே த்³யூதம்ʼ மஹேஸே²ன கரோமி தே(அ)க்³ரத​:||  34.66 ||

இத்யேவமுக்த்வா கி³ரிராஜகன்யகா ஜக்³ராஹ சாக்ஷான்பு⁴வனைகஸுந்த³ரீ||

க்ரீடா³ம்ʼ சகாராத² மஹர்ஷிஸாக்ஷ்யகே தத்ராஸ்தி²தா ஸா ஹி ப⁴வேன ஸம்ʼயுதா||  34.67 ||

தௌ த³ம்பதீ க்ரீட³யா ஸஜ்ஜமானௌ த்³ருʼஷ்டௌ ததா³ ருʼஷிணா நாரதே³ன||

ஸவிஸ்மயோத்பு²ல்லமனா மனஸ்வீ விலோகமானோ(அ)திதராம்ʼ துதோஷ||  34.68 ||

ஸகீ²ஜனேன ஸம்ʼவீதா ததா³ த்³யூதபரா ஸதீ||

ஸி²வேன ஸஹ ஸங்க³த்ய ச்ச²லாத்³த்³யூதமகாரயத்||  34.69 ||

ஸ பணம்ʼ ச ததா³ சக்ரே ச²லேன மஹதா வ்ருʼத​:||

ஜிதா ப⁴வானீ ச ததா³ ஸி²வேன ப்ரஹஸன்னிவ||  34.70 ||

நாரதோ³(அ)ஸ்யா​: ஸி²வேனாத² உபஹாஸகரோ(அ)ப⁴வத்||

நிஸ²ம்ய ஹாரிதம்ʼ த்³யூதமுபஹாஸம்ʼ நிஸ²ம்ய ச||  34.71 ||

நாரத³ஸ்ய து³ருக்தைஸ்²ச குபிதா பார்வதீ ப்⁴ருʼஸ²ம்||

உவாச த்வரிதா சைவ த³த்த்வா சைவார்த்³த⁴சந்த்³ரகம்||  34.72 ||

ததா² ஸி²ரோமணீ சைவ தரலே ச மனோஹரே||

முக²ம்ʼ ஸுகோ²ப⁴னம்ʼ சைவ ததா² குபிதஸுந்த³ரம்||

த்³ருʼஷ்டம்ʼ ஹரேண ச புன​: புனர்த்³யூதமகாரயத்||  34.73 ||

ததா² கி³ரிஜயா ப்ரோக்த​: ஸ²ங்கரோ லோகஸ²ங்கர​:||

ஹாரிதம்ʼ ச மயா த³த்த​: பண ஏவ ச நான்யதா²||  34.74 ||

க்ரியதே ச த்வயா ஸ²ம்போ⁴ க​: பணோ ஹி தது³ச்யதாம்||

தத​: ப்ரஹஸ்ய சோவாச பார்வதீம்ʼ ச த்ரிலோசன​:||  34.75 ||

மயா பணோ(அ)யம்ʼ க்ரியதே ப⁴வானி த்வத³ர்த²மேதச்ச விபூ⁴ஷணம்ʼ மஹத்||

ஸா சந்த்³ரலேகா² ஹி மஹான்ஹி ஹாரஸ்ததை²வ கர்ணோத்பலபூ⁴ஷணத்³வயம்||  34.76 ||

இத³மேவ த்வயா தன்வி மாம்ʼ ஜித்வா க்³ருʼஹ்யதாம்ʼ ஸுக²ம்||

தத​: ப்ரவர்திதம்ʼ த்³யூதம்ʼ ஸ²ங்கரேண ஸஹைவ ச||  34.77 ||

ஏவம்ʼ விக்ரீட³மானௌ தாவக்ஷவித்³யாவிஸா²ரதௌ³||

ததா³ ஜிதோ ப⁴வான்யாத² ஸ²ங்கரோ ப³ஹுபூ⁴ஷண​:||  34.78 ||

ப்ரஹஸ்ய கௌ³ரீ ப்ரோவாச ஸ²ங்கரம்ʼ த்வதிஸுந்த³ரீ||

ஹாரிதம்ʼ ச பணம்ʼ தே³ஹி மம சாத்³யைவ ஸ²ங்கர||  34.79 ||

ததா³ மஹேஸ²​: ப்ரஹஸன்ஸத்யம்ʼ வாக்யமுவாச ஹ||

ந ஜிதோ(அ)ஹம்ʼ த்வயா தன்வி தத்த்வதோ ஹி விம்ருʼஸ்²யதாம்||  34.80 ||

அஜேயோ(அ)ஹம்ʼ ப்ராணினாம்ʼ ஸர்வதை²வ தஸ்மான்ன வாச்யம்ʼ தூவோச ஹி ஸாத்⁴வி||

த்³யூதம்ʼ குருஷ்வாத்³ய யதே²ஷ்டமேவ ஜேஷ்யாமி சாஹஞ்ச புன​: ப்ரபஸ்²யா||  34.81 ||

ததா³ம்பி³காஹ ஸ்வபதிம்ʼ மஹேஸ²ம்ʼ மயா ஜிதோ(அ)ஸ்யத்³ய ந விஸ்மயோ(அ)த்ர||

ஏவமுக்த்வா ததா³ ஸ²ம்பு⁴ம்ʼ கரே க்³ருʼஹ்ய வரானனா||

ஜிதோ(அ)ஸி த்வம்ʼ ந ஸந்தே³ஹஸ்த்வம்ʼ ந ஜானாஸி ஸ²ங்கர||  34.82 ||

ஏவம்ʼ ப்ரஹஸ்ய ருசிரம்ʼ கி³ரிஜா து ஸ²ம்பு⁴ம்ʼ ஸா ப்ரேக்ஷ்யா நர்மவசஸா ஸ தயாபி⁴பூ⁴த​:||

தே³ஹீதி ம ஸகலமங்க³லமங்க³லேஸ² யத்³தா⁴ரிதம்ʼ ஸ்மரரிபோ வசஸானுமோதி³தம்||  34.83 ||

|| ஸி²வ உவாச||

அஜேயோ(அ)ஹம்ʼ விஸா²லாக்ஷி தவ நாஸ்த்யத்ர ஸம்ʼஸ²ய​:||

அஹங்காரேண யத்ப்ரோக்தம்ʼ தத்த்வதஸ்தத்³விம்ருʼஸ்²யதாம்||  34.84 ||

தஸ்ய தத்³வசனம்ʼ ஸ்²ருத்வா ப்ரோவாச ச விஹஸ்ய ஸா||

அஜேயோ ஹி மஹாதே³வ​: ஸர்வேஷாமபி வை ப்ரபோ⁴||  34.85 ||

மயைகயா ஜிதோ(அ)ஸி த்வம்ʼ த்³யூதேன விமலேன ஹி||

ந ஜானாஸி ச கிஞ்சிச்ச கார்யாகார்யம்ʼ விவக்ஷிதம்|| ||  34.86 ||

ஏவம்ʼ விவத³மானௌ தௌ த³ம்பதீ பரமேஸ்²வரௌ||

நாரத³​: ப்ரஹஸன்வாக்யமுவாச ருʼஷிஸத்தம​:||  34.87 ||

|| நாரத³ உவாச||

ஆகர்ணயா(அ)(அ)கர்ணவிஸா²லனேத்ரே வாக்யம்ʼ ததே³கம்ʼ ஜக³தே³கமங்க³லம்||

அஸௌ மஹாபா⁴க்³யவதாம்ʼ வரேண்யஸ்த்வயா ஜித​: கிம்ʼ ச ம்ருʼஷா ப்³ரவீஷி||  34.88 ||

அஜிதோ ஹி மஹாதே³வோ தே³வானாம்ʼ பரமோ கு³ரு​:||

அரூபோ(அ)யம்ʼ ஸுரூபோயம்ʼ ரூபாதீதோ(அ)யமுச்யதே||  34.89 ||

ஏக ஏவ பரம்ʼ ஜ்யோதிஸ்தேஷாமபி ச யன்மஹ​:||

த்ரைலோக்யனாதோ² விஸ்²வாத்மா ஸ²ங்கரோ லோகஸ²ங்கர​:||  34.90 ||

கத²ம்ʼ த்வயா ஜிதோ தே³வி ஹ்யஜேயோ பு⁴வனத்ரயே||

ஸி²வமேனம்ʼ ந ஜானாஸி ஸ்த்ரீபா⁴வாச்ச வரானனே||  34.91 ||

நாரதே³னைவமுக்தா ஸா குபிதா பார்வதீ ப்⁴ருʼஸ²ம்||

ப³பா⁴ஷே மத்ஸரக்³ரஸ்தா ஸாக்ஷேபம்ʼ வசனம்ʼ ஸதீ||  34.92 ||

|| பார்வத்யுவாச||

சாபல்யாச்ச ந வக்த்வ்யம்ʼ ப்³ரஹ்மபுத்ர நமோஸ்து தே ||

தவ பீ⁴தாஸ்மி ப⁴த்³ரம்ʼ தே தே³வர்ஷே மௌனமாவஹ||  34.93 ||

கத²ம்ʼ ஸி²வோ ஹி தே³வர்ஷே உக்தோ(அ)தோ ஹி த்வயா ப³ஹு||

மத்ப்ரஸாதா³ச்சி²வோ ஜாத ஈஸ்²வரோ யோ ஹி பட்²யதே||  34.94 ||

மயா லப்³த⁴ப்ரதிஷ்டோ²(அ)யம்ʼ ஜாதோ நாஸ்த்யத்ர ஸம்ʼஸ²ய​:||  34.95 ||

ஏவம்ʼ ப³ஹுவித⁴ம்ʼ ஸ்²ருத்வா நாரதோ³ மௌனமாஸ்²ரயத்||

உபஸ்தி²தம்ʼ ச தத்³த்³ருʼஷ்ட்வா ப்⁴ருʼங்கீ³ வாக்யமதா²ப்³ரவீத்||  34.96 ||

|| ப்⁴ருʼங்க்³யுவாச||

த்வயா ப³ஹு ந வக்தவ்யம்ʼ புனரேவ ச பா⁴மினி||

அஜேயோ நிர்விகாரோ ஹி ஸ்வாமீ மம ஸுமத்⁴யமே||  34.97 ||

ஸ்த்ரீபா⁴வயுக்தாஸி வரானனே த்வம்ʼ தே³வம்ʼ ந ஜானாஸி பரம்ʼ பராணாம்||

காமம்ʼ புரஸ்க்ருʼத்ய புரா ப⁴வானி ஸமாக³தாஸ்யேவ மஹேஸ²முக்³ரம||  34.98 ||

யதா² க்ருʼதம்ʼ தேன பினாகினா புரா ஏதத்ஸ்ம்ருʼதம்ʼ கிம்ʼ ஸுப⁴கே³ வத³ஸ்வ ந​:||

க்ருʼதோ ஹ்யனங்கோ³ ஹி ததா³ ஹ்யனேன த³க்³த⁴ம்ʼ வனம்ʼ தஸ்ய கி³ரே​: பிதுஸ்தே||  34.99 ||

……வாத்த்வயாராதி⁴த ஏவ ஏஷ ஸி²வ​: பராணாம்ʼ பரம​: பராத்மா||  34.100 ||

ப்⁴ருʼங்கி³ணேத்யேவமுக்தா ஸா ஹ்யுவாச கிபிதா ப்⁴ருʼஸ²ம்||

ஸ்²ர்ருʼண்வதோ ஹி மஹேஸ²ஸ்ய வாக்யம்ʼ ப்ருʼஷ்டா ச ப்⁴ருʼங்கி³ணம்||  34.101 ||

|| பார்வத்யுவாச||

ஹம்ʼ ப்⁴ருʼங்கி³ன்பக்ஷபாதித்வாத்³யது³க்தம்ʼ வசனம்ʼ மம||

ஸி²வப்ரியோ(அ)ஸி ரே மந்த³ பே⁴த³பு³த்³தி⁴ரதோ ஹ்யஸி||  34.102 ||

அஹம்ʼ ஸி²வாத்மிகா மூட⁴ ஸி²வோ நித்யம்ʼ மயி ஸ்தி²த​:||

கத²ம்ʼ ஸி²வாப்⁴யாம்ʼ பி⁴ன்னத்வம்ʼ த்வயோக்தம்ʼ வாக்³ப³லேன ஹி||  34.103 ||

ஸ்²ருதம்ʼ ச வாக்யம்ʼ ஸு²ப⁴த³ம்ʼ பார்வத்யா ப்⁴ருʼங்கி³ணா ததா³||

உவாச பார்வதீம்ʼ ப்⁴ருʼங்கீ³ ருஷித​: ஸி²வஸன்னிதௌ⁴||  34.104 ||

புதுர்யஜ்ஞே ச த³க்ஷஸ்ய ஸி²வனிந்தா³ த்வயா ஸ்²ருதா||

அப்ரியக்ஷவணாத்ஸத்³யஸ்த்வயா த்யக்தம்ʼ கலேவரம்||  34.105 ||

தத்க்ஷணாதே³வ நன்வங்கி³ ஹ்யது⁴னா கிம்ʼ க்ருʼதம்ʼ த்வயா||

ஸம்ப்⁴ரமாத்கிம்ʼ ந ஜானாஸி ஸி²வனிந்த³கமேவ ச||  34.106

கத²ம்ʼ வா பர்வதஸ்²ரேஷ்டா²ஜ்ஜாதா ஸே வரவர்ணினி||

கத²ம்ʼ வா தபஸோக்³ரேண ஸந்தப்தாஸி ஸுமத்⁴யமே||  34.107 ||

ஸப்ரேமா ச ஸி²வே ப⁴க்திஸ்தவ நாஸ்தீஹ ஸம்ப்ராதம்||

ஸி²வப்ரியாஸி தன்வங்கி³ தஸ்னாதே³வம்ʼ ப்³ரவீமி தே||  34.108 ||

ஸி²வாத்பரதரம்ʼ நான்யத்த்ரிஷு லோகேஷு வித்³யதே||

ஸி²வே ப⁴க்திஸ்த்வயா கார்யா ஸப்ரேமா வரவர்ணினி||  34.109 ||

ப⁴க்தாஸி த்வம்ʼ மஹாதே³வி மஹாபா⁴க்³யவதாம்ʼ வரே||

ஸம்ʼஸேவ்யதாம்ʼ ப்ரயத்னேன தபஸோபார்ஜிதஸ்த்வயா||  34.110 ||

ஸி²வோ வரேண்ய​: ஸர்வேஸோ² நான்யதா² கர்துமர்ஹஸி||

ப்⁴ருʼங்கி³ணோ வசனம்ʼ ஸ்²ருத்வா கி³ரிஜா தமுவாசஹ||  34.111 ||

|| கி³ரிஜோவாச||

ரே ப்⁴ருʼங்கி³ன்மௌனமாலம்ப்³ய ஸ்தி²ரோ ப⁴வாத² வா வ்ரஜ||

வாச்யாவாச்யம்ʼ ந ஜானாஸி கிம்ʼ ப்³ரவீஷி பிஸா²சவத்||  34.112 ||

தபஸா கேன சானீத​: கயா சாபி ஸி²வோ ஹ்யயம்||

காஹம்ʼ கோ(அ)ஸௌ த்வயா ஜ்ஞாதோ பே⁴த³பு³த்³த்⁴யா ப்³ரவீஷி மே||  34.113 ||

கோ(அ)ஸி த்வம்ʼ கேன யுக்தோ(அ)ஸி கஸ்மாச்ச ப³ஹு பா⁴ஷஸே||

ஸா²பம்ʼ தவ ப்ரதா³ஸ்யாமி ஸி²வ​: கிம்ʼ குருதே(அ)து⁴னா||  34.114 ||

ப்⁴ருʼங்கி³ணோக்தா திரஸ்க்ருʼத்ய ததா³ ஸா²பம்ʼ த³தௌ³ ஸதீ||

நிமாம்ʼஸோ ப⁴வ ரே மந்த³ ரே ப்⁴ருʼங்கி³ஞ்சி²ங்கரப்ரிய||  34.115 ||

ஏவமுக்த்வா ததா³ தே³வீ பார்வதீ ஸ²ங்கரப்ரியா||

அத² கோபேன ஸம்ʼயுக்தா பார்வதீ ஸ²ங்கரம்ʼ ததா³||  34.116 ||

கரே க்³ருʼஹ்ய ச தன்வங்கீ³ பு⁴ஜங்க³ம்ʼ வாஸுகிம்ʼ ததா²||

உத³தாரயத்கண்டா²த்ஸா ததா²ன்யானி ப³ஹூனி ச||  34.117 ||

ஸ²ம்போ⁴ர்ஜக்³ராஹ குபிதா பூ⁴ஷணானி த்வரான்விதா||

ஹ்ருʼதா சந்த்³ரகலா தஸ்ய க³ஜாஜினமனுத்தமம்||  34.118 ||

கம்ப³லாஸ்²வதரௌ நாகௌ³ மஹேஸ²க்ருʼதபூ⁴ஷணௌ||

ஹ்ருʼதௌ தயா மஹாதே³வ்யா ச²லோக்த்யாம்ʼ ச ப்ரஹஸ்ய வை||  34.119 ||

கௌபீனாச்சா²த³னம்ʼ தஸ்யா ச்ச²லோக்த்யா ச ப்ரஹஸ்ய வை||

ததா³ க³ணாஸ்²ச ஸக்²யஸ்²ச த்ரபயா பீடி³தா ப⁴வன்||  34.120 ||

பராங்க³முகா²ஸ்²ச ஸஞ்ஜாதா ப்⁴ருʼங்கீ³ சைவ மஹாதபா​:||

ததா² சண்டோ³ ஹி முண்ட³ஸ்²ச மஹாலோமா மஹோத³ர​:||  34.121 ||

ஏதே சான்யே ச ப³ஹவோ க³ணாஸ்தே து³​:கி²னோ(அ)ப⁴வன்||

தாம்ʼஸ்²ச த்³ருʼஷ்ட்வா ததா²பூ⁴தன்மஹேஸோ² லஜ்ஜிதோ(அ)ப⁴வத்||  34.122 ||

உவாச வாக்யம்ʼ ருஷித​: பார்வதீம்ʼ ப்ரதி ஸ²ங்கர​:||  34.123 ||

|| ருத்³ர உவாச||

உபஹாஸம்ʼ ப்ரகுர்வந்தி ஸர்வே ஹி ருʼஷயோ ப்⁴ருʼஸ²ம்||

ததா² ப்³ரஹ்மா ச விஷ்ணுஸ்²ச ததா² சேந்த்³ராத³யோ ஹ்யமீ||  34.124 ||

உபஹாஸபரா​: ஸர்வே கிம்ʼ த்வயாத்³ய க்ருʼதம்ʼ ஸு²பே⁴||

குலே ஜாதாஸி தன்வங்கி³ கத²மேவம்ʼ கரிஷ்யஸி||  34.125 ||

த்வயா ஜிதோ ஹ்யஹம்ʼ ஸுப்⁴ரு யதி³ ஜானாஸி தத்த்வத​:||

தர்ஹ்யேவம்ʼ குரு மே தே³ஹி கௌபீனாச்சா²த³னம்ʼ பரம்||

தே³ஹி கௌபீனமாத்ரம்ʼ மே நான்யதா² கர்துமர்ஹஸி||  34.126 ||

ஏவமுக்தா ஸதீ தேன ஸ²ம்பு⁴னா யோகி³னா ததா³||

ப்ரஹஸ்ய வாக்யம்ʼ ப்ரோவாச பார்வதீ ருசிரானனா||  34.127 ||

கிம்ʼ கௌபீனேன தே கார்யம்ʼ முனினா பா⁴விதாத்மனா||

தி³க³ம்ப³ரேணைவ ததா³ க்ருʼதம்ʼ தா³ருவனம்ʼ ததா²||  34.128 ||

பி⁴க்ஷாடனமிஷேணைவ ருʼஷிபத்ன்யோ விரோஹிதா​:||

க³ச்ச²தஸ்தே ததா³ ஸ²ம்போ⁴ பூஜனம்ʼ தைர்மஹத்க்ருʼதம்||  34.129 ||

கௌபீனம்ʼ பதிதம்ʼ தத்ர முனிபி⁴ர்னான்யதோ²தி³தம்||

தஸ்மாத்த்வயா ப்ரஹாதவ்யம்ʼ த்³யூதோஹாரிதமேவ தத்||  34.130 ||

தச்ச்²ருத்வா குபிதோ ருத்³ர​: பார்வதீம்ʼ பரமேஸ்²வர​:||

நிரீக்ஷமாணோ(அ)திருஷா த்ருʼதீயேனைவ சக்ஷுஷா||  34.131 ||

குபிதம்ʼ ஸ²ங்கரம்ʼ த்³ருʼஷ்ட்வா ஸர்வ தே³வக³ணாஸ்ததா³||

ப⁴யேன மஹதாவிஷ்டாஸ்ததா² க³ணகுமாரகா​:||  34.132 ||

ஊசு​: ஸர்வே ஸ²னைஸ்தத்ர ஸ²ங்கிதேன பரஸ்பரம்||

அத்³யாயம்ʼ குபிதோ ருத்³ரோ கி³ரிஜாம்ʼ ப்ரதி ஸம்ப்ரதி||  34.133 ||

யதா² ஹி மத³னோ த³க்³த⁴ஸ்ததே²யம்ʼ நான்யதா² வச​:||

ஏவம்ʼ மீமாம்ʼஸமானாஸ்தே க³ணா தே³வர்ஷயஸ்ததா³||  34.134 ||

விலோகிதாஸ்தயா தே³வ்யா ஸர்வே ஸௌபா⁴க்³யமுத்³ரயா||

உவாச ப்ரஹஸன்னேவ ஸதீ ஸத்புருஷம்ʼ ததா³||  34.135 ||

கிமாலோகபரோ பூ⁴த்வா சக்ஷுஷா பரமேண ஹி||

நாஹம்ʼ காலோ ந காமோ(அ)ஹம்ʼ நாஹம்ʼ த³க்ஷஸ்ய வை மக²​:||  34.136 ||

த்ரிபுரோ நைவ வை ஸ²ம்போ⁴ நாந்த⁴கோ வ்ருʼஷப⁴த்⁴வஜ||

வீக்ஷிதேனைவ கிம்ʼ தேன தவ சாத்³ய ப⁴விஷ்யதி||

வ்ருʼதை²வ த்வம்ʼ விரூபாக்ஷோ ஜாதோ(அ)ஸி மம சாக்³ரத​:||  34.137 ||

ஏவமாதீ³ன்யனேகானி ஹயுவாச பரமேஸ்²வரீ||

நிஸ²ம்ய தே³வோ வாக்யானி க³மனாய மனோ த³தே⁴||  34.138 ||

வனமேவ வரம்ʼ சாத்³ய விஜனம்ʼ பரமார்த²த​:||

ஏகாகீ யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்³ரஹ​:||  34.139 ||

ஸ ஸுகீ² பரமார்த²ஜ்ஞ​: ஸ வித்³வான்ஸ ச பண்டி³த​:||

யேன முக்தௌ காமராகௌ³ ஸ முக்த​: ஸ ஸுகீ² ப⁴வேத்||  34.140 ||

ஏவம்ʼ விம்ருʼஸ்²ய ச ததா³ கி³ரிஜாம்ʼ விஹாய ஸ்ரீஸ²ங்கர​: பரமகாருணிகஸ்ததா³னீம்||

யாத​: ப்ரியாவிரஹிதோ வனமத்³பு⁴தம்ʼ ச ஸித்³தா⁴டவீம்ʼ பரமஹம்ʼஸயுதாம்ʼ ததை²வ||  34.141 ||

நிர்க³தம்ʼ ஸ²ங்கரம்ʼ த்³ருʼஷ்ட்வா ஸர்வே கைலாஸவாஸின​:||

நிர்யயுஸ்²ச க³ணா​: ஸர்வே வீரப⁴த்³ராத³யோ(அ)நு தம்||  34.142 ||

ச²த்ரம்ʼ ப்⁴ருʼங்கீ³ ஸமாதா³ய ஜகா³ம தஸ்ய ப்ருʼஷ்ட²த​:||

சாமரே வீஜ்யமானே ச க³ங்கா³யமுனஸன்னிபே⁴||  34.143 ||

தாப்⁴யாம்ʼ யுக்தஸ்ததா³ நந்தீ³ ப்ருʼஷ்ட²தோ(அ)ந்வக³மத்ஸுதீ⁴​:||

வ்ருʼஷபோ⁴ம்ʼ ஹ்யக்³ரதோ பூ⁴த்வா புஷ்பகேண விராஜித​:||  34.144 ||

ஸோ²ப⁴மானோ மஹாதே³வ ஏபி⁴​: ஸர்வை​: ஸுஸோ²ப⁴னை​:||

அந்த​:புரக³தா தே³வீ பார்வதீ ஸா ஹி து³ர்மனா​:||  34.145 ||

ஸகீ²பி⁴ர்ப³ஹுபி⁴ஸ்தத்ர ததா²ன்யாபி⁴​: ஸுஸம்ʼவ்ருʼதா||

கி³ரிஜா சிந்தயாமாஸ மனஸா பரமேஸ்²வரம்||  34.146 ||

ததோ தூ³ரம்ʼ க³த​: ஸ²ம்பு⁴ர்விஸ்ருʼஜ்ய ச க³ணாம்ʼஸ்ததா³||

க³ணேஸ²ம்ʼ ச குமாரம்ʼ ச வீரப⁴த்³ரம்ʼ ததா²(அ)பரான்||  34.147 ||

ப்⁴ருʼங்கி³ணம்ʼ நந்தி³னம்ʼ சண்ட³ம்ʼ ஸோமனந்தி³னமேவ ச||

ஏதானன்யாம்ʼஸ்²ச ஸர்வாம்ʼஸ்²ச கைலாஸபுரவாஸின​:||  34.148 ||

விஸ்ருʼஜ்ய ச மஹாதே³வ ஏக ஏவ மஹாதபா​:||

க³தோ தூ³ரம்ʼ வனஸ்யாந்தே ததா² ஸித்³த⁴வடம்ʼ ஸி²வ​:||  34.149 ||

காஸ்²மீரரத்னோபலஸித்³த⁴ரத்னவைதூ³ர்யசித்ரம்ʼ ஸுத⁴யா பரிஷ்க்ருʼதம்||

தி³வ்யாஸனம்ʼ தஸ்ய ச கல்பிதம்ʼ பு⁴வா தத்ராஸ்தி²தோ யோக³பதிர்மஹேஸ²​:||  34.150 ||

பத்³மாஸனே சோபவிஷ்டோ மஹேஸோ² யோக³வித்தம​:||

கேவலம்ʼ சாத்மனாத்மானம்ʼ த³த்⁴யௌ மீலிதலோசன​:||  34.151 ||

ஸு²ஸு²பே⁴ ஸ மஹாதே³வ​: ஸமாதௌ⁴ சந்த்³ரஸே²க²ர​:||

யோக³பட்ட​: க்ருʼதஸ்தேன ஸே²ஷஸ்ய ச மஹாத்மன​:||

வாஸுகி​: ஸர்பராஜஸ்²ச கடிப³த்³த⁴​: க்ருʼதோ மஹான்||  34.152 ||

ஆத்மானமாத்மாத்மதயா ச ஸம்ʼஸ்துதோ வேதா³ந்தவேத்³யோ ந ஹி விஸ்²வசேஷ்டித​:||

ஏகோ ஹ்யனேகோ ஹி து³ரந்தபாரஸ்ததா² ஹ்யர்க்யோ நிஜபோ³த⁴ரூப​:||

ஸ்தி²தஸ்ததா³னீம்ʼ பரமம்ʼ பராணாம்ʼ நிரீக்ஷமாணோ பு⁴வனைகப⁴ர்தா||  34.153 ||

இதி ஸ்ரீஸ்காந்தே³ மஹாபுராண ஏகாஸீ²திஸாஹஸ்ர்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ ப்ரத²மே மாஹேஸ்²வரக²ண்டே³ கேதா³ரக²ண்டே³ ஸி²வஸா²ஸ்த்ரே ஸி²வபார்வதீத்³யூதப்ரஸங்கே³ன பார்வதீஹாரிதஸர்வஸ்வஸ்ய ஸி²வஸ்ய கைலாஸம்ʼ விஹாய தபோவனக³மனவர்ணனம்ʼ நாம சதுஸ்த்ரிம்ʼஸோ²(அ)த்⁴யாய​:|| 34||

இந்த சூதாட்டம் எல்லோராவிலுள்ள ஒரு பெருஞ்சிற்பத் தொகுதியில் வடிக்கப்பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியின் நடுவில் ஆதி தம்பதியர் ஆடத் துவங்குகின்றனர். இருவருக்கும் இடையில் அமர்ந்த உருவம் ப்ருங்கியாகலாம். நந்தியும் மஹாகாளரும் இருமருங்கும் இறுதியில் அமைந்திருக்கின்றனர். ஆண்கள் வரிசையில் இறுதியாக நாரதர்  நின்றுள்ளார். அன்னையின் தோழியரும் அழகுற நிற்கிறார்கள்.

dyuta

ஜகன்மாதா – உலகுக்கெல்லாம் தாயான அன்னையே மனைவியாக இப்படித்தான் நடப்பாளென்றால், இந்தக் கதையின் நீதி என்னவாக இருக்கும்  – மனையாளோடாயினும் சூது விளையாடாதே என்பதைத் தவிர……

புகைப்பட உதவி ஸ்ரீ ராம்ஜீ நாகராஜன்

Please follow and like us:

One thought on “மனையாளோடாயினும் சூது விளையாடலாமா

 1. .
  .
  மனையாளோடாயினும்
  .
  சூது
  .
  விளையாடு
  .
  ..
  ஏனெனில்
  .

  காதலியின்
  .
  காதல்….
  .
  தேடலில்
  .
  ..
  தெய்வீகம்
  .
  தெரியும்
  .
  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *