கதிரவன் விச்வகர்மாவின் மகளான ஸம்ஜ்ஞா தேவியை மணந்திருந்தான். அவனுடைய வெம்மையைத் தாளவொண்ணாத அவள் தனது சாயையை – நிழலை விடுத்து விட்டு தந்தைவீடு சென்றாள். அங்கும் இருக்க முடியாததால் குதிரையின் வடிவெடுத்து உத்தர குருதேசத்திற்குச் சென்று கடுந்தவமியற்றினாள். மாற்றாந்தாய் செயலினால் மனமுடைந்த கூற்றுவன் தாயை இகழ சாயை அவனைச் சபித்தாள். அதன் பிறகு தந்தையிடம் முறையிட்டான் கூற்றுவன். கதிரவனின் மிரட்டலால் உண்மையைக் கூறினாள் சாயா. உண்மையை அறிந்த கதிரவன் தனது மாமனார் வீடு சென்று தேடினான். அவனது வெம்மையைக் குறைக்க அவனைச் சாணைக்கல்லிலிட்டு தேய்க்கும் வழியை மேற்கொண்டார் விச்வகர்மா. தேய்த்த பிறகு அழகிய வடிவமும் வெம்மை தணிந்த நிலையும் கொண்ட கதிரவன் தன் மனைவி குதிரை வடிவெடுத்து உத்தரகுரு தேசத்தில் திரிவதைக் கேட்டு அங்கே சென்றான். தானும் புரவி வடிவெடுத்து அவள் முகத்தில் அடித்தான். அவளோடு கூடினான். அவனைக் கண்ட ஸம்ஜ்ஞா தேவி அது வேறொரு ஆடவனோ என்று அஞ்சினாள். அவனுடைய வீர்யத்தை மூக்கின் வழியாகக் கக்கினாள். குதிரை வசிவில் கூடியதால் குதிரை முகத்தோடு இரட்டையர் பிறந்தனர். அவர்களே தேவர்களின் மருத்துவர்களான அச்வினி தேவர்கள் என்னும் இக்கதை பத்மபுராணத்தின் ஸ்வர்க கண்டத்தின் பதினோராம் அத்யாயத்திலுள்ளது.
त्वष्टोवाच।
तवातितेजसो भीता प्राप्योत्तरकुरून् वने।
वडवारूपमास्थाय संज्ञा चरति शाद्वले।
द्रष्टा हि तां भवानद्य स्वभार्य्यां तात मा रुष॥
लब्धानुज्ञोऽथ सविता गत्वोत्तरकुरूनथ।
स हरिर्हरिरूपेण मुखेन समताडयत्॥
त्वरमाणा च सवितुः परपुरुषशङ्कया।
सा तन्निरवमत् शुक्रं नासिकाभ्यां विवस्वतः।
देवौ तस्मादजायेतामश्विनौ भिषजां वरौ॥”
इति पाद्मे स्वर्गखण्डे ११ अध्यायः॥
இந்தக் கதையின் சிற்ப வடிவான வெளிப்பாடு பாதாமியிலுள்ள மாலேகித்தியிலுள்ள சிவாலயத்தின் அந்தராளத்தின் தெற்குச்சுவரில் அமைந்துள்ளது. அந்தச் சிற்பத்தொகுதியாவது
இந்தச் சிற்பத்தொகுதியில் ஸூர்யதேவன் ஆயுதமேந்திய கையோடு ஸம்ஜ்ஞா தேவியின் தலையைப் பிடித்து நஅவளோடு உறவுகொள்ள முயலும் வண்ணம் அமைக்கப் பெற்றிருக்கிறது. குதிரை வடிவான ஸம்ஜ்ஞா தேவி தனது மேலாடையை பிடித்தவளாய் கலக்கமடைந்தபடி அமைக்கப்பெற்றிருக்கிறாள்.
புகைப்பட உதவி – சிர. அரவிந்த் வெங்கட்ராமன்
I still don’t understand. She has horse legs, and is holding what? Doesn’t seem to be part of either of them???
she took the form of a horse and holding her cloths.