இடைக்கால வரலாற்றுப் பகுதியில் திறமை எப்பகுதியில் இருந்தாலம் மெச்சிப் போற்றப்பெற்றது. இதை அக்காலத்திய கல்வெட்டுக்களை ஆராய்வதன் மூலம் தெள்ளென அறியவியலும். அத்தகைய இருவர் சோழர்தம் தளபதிகளாகப் பணியாற்றியமையைக் காண்போம்.
வெள்ளன் குமரன்
இவன் கேரளத்தின் நந்திக்கரைப் புத்தூரைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தகனின் இளவரசனாகிய ராஜாதித்யனுக்கு வலதுகரமாகத் திகழ்ந்தவன். அவனுடைய சரிதம் கிராமம் என்னுமூரிலுள்ள கல்வெட்டின் வாயிலாகத் தெரியவருகிறது. அங்கு அவன் எந்தைக்கு ஒரு கற்றளி எடுப்பித்த செய்தியை அந்தக் கல்வெட்டு சுட்டுகிறது. அந்தக் கல்வெட்டின் வடமொழிப்பகுதியைக் காண்போம்.
வரி 1 : मौलिः पुत्तूरजन्माकली
வரி 2 : बलजयिनामुत्तमः केरलानाम्
வரி 3 : राजादित्यस्य साक्षादविचलितच
வரி 4 : मूनायको माधुरान्तेः। मौलिग्रामे
வரி 5 : धिपेण्णातटे धरणिशिलामन्दिरं
வரி 6 : मन्दराभं माहादेवं महाश्रीस्थिर
வரி 7 : तरमकरोदत्र वेळ्ळंकुमारः।।
வரி 8 : नदीस्थलीकृतनिरतेश्शिवास्पदम्
வரி 9 : शिलास्थलीमभिरतये पुरद्विषः।
வரி 10 : निजामिमान्धियमिव सुप्रतिष्ठिताम्
வரி 11 : कुमार इत्यकृत नवाग्रहारजः।
வரி 12 : विश्वशर्म्माव्याप्रतिचारात् त्रितयात्
வரி 13 : भस्मीचक्रे दैत्यपुरान् येन निमेषा
வரி 14 : त्। मारारातेर्धाम कुमारेदमधन्ते बो
வரி 15 : भूषितादायुषामन्तःकरणञ्च।।
வரி 1 : மௌலி: புத்தூரஜன்மாகலீ
வரி 2 : ப³லஜயினாமுத்தம: கேரலானாம்
வரி 3 : ராஜாதி³த்யஸ்ய ஸாக்ஷாத³விசலிதச
வரி 4 : மூனாயகோ மாது⁴ராந்தே:| மௌலிக்³ராமே
வரி 5 : தி⁴பேண்ணாதடே த⁴ரணிஸி²லாமந்தி³ரம்ʼ
வரி 6 : மந்த³ராப⁴ம்ʼ மாஹாதே³வம்ʼ மஹாஸ்ரீஸ்தி²ர
வரி 7 : தரமகரோத³த்ர வேள்ளங்குமார:||
வரி 8 : நதீ³ஸ்த²லீக்ருʼதனிரதேஸ்²ஸி²வாஸ்பத³ம்
வரி 9 : ஸி²லாஸ்த²லீமபி⁴ரதயே புரத்³விஷ:|
வரி 10 : நிஜாமிமாந்தி⁴யமிவ ஸுப்ரதிஷ்டி²தாம்
வரி 11 : குமார இத்யக்ருʼத நவாக்³ரஹாரஜ:|
வரி 12 : விஸ்²வஸ²ர்ம்மாவ்யாப்ரதிசாராத் த்ரிதயாத்
வரி 13 : ப⁴ஸ்மீசக்ரே தை³த்யபுரான் யேன நிமேஷா
வரி 14 : த்| மாராராதேர்தா⁴ம குமாரேத³மத⁴ந்தே போ³
வரி 15 : பூ⁴ஷிதாதா³யுஷாமந்த:கரணஞ்ச||
இந்தக் கல்வெட்டின் தமிழ்ப்பகுதி கலி வருடம் 4044 என்றும் கலிதுவங்கியதிலிருந்து நாட்களின் எண்ணிக்கை 1477037 என்றும் தருகிறது. மேலும் இந்தக் கற்றளி ரேவதி நக்ஷத்ரமும் சனிக்கிழமையும் கூடிய நன்னாளில் எடுப்பிக்கப்பெற்றதாகவும் கூறுகிறது. மேற்கண்ட தகவல்கள் பொயு 943 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குச் சரியாகப் பொருந்தி வருகின்றன.
இந்த வடமொழிப்பகுதியின் பொருளாவது – வெள்ளன் குமரன் என்பவன் புத்தூரின் அணிகலனானவன். கேரளர்களில் சிறந்தவன். அவன் ராஜாதித்யனின் நம்பிக்கைக்குப் பாத்ரமான தளபதியானான். அவன் மந்தரமலையையொத்த ஒரு கற்றளியை சம்புவிற்கு எழுப்பினான். அந்தக் கற்றளி பெண்ணை நதியின் கரையிலமைந்தது. நவாக்ரஹாரத்தில் பிறந்த அந்த வெள்ளன் குமரன் புரமெரித்த பரமனை மகிழ்விக்கத் தன் மனத்தைப் போல ஒரு ஆலயத்தை எடுப்பித்தான்.
அவனுடைய இறுதிக்கால வரலாறு மிகவும் சுவையானது. ஏதோ காரணத்தால் அவனால் ராஜாதித்யன் மறைந்த தக்கோலப் போரில் பங்குகொள்ளமுடியாமல் போனது. அந்த சலிப்பினால் துறவறம் மேற்கொண்டு திருவொற்றியூர் கோயிலில் பல திருப்பணிகளைச் செய்தான் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது.
அம்பலவன் பழுவூர் நக்கன்
இவன் குவளாலபுரத்தைச் சேர்ந்தவன். அது தற்போதைய கர்ணாடகமாநிலத்தைச் சேர்ந்த கோலார் ஆகும். இவன் உத்தமசோழனின் அவையில் படைத்தலைவனாகப் பணிபுரிந்தவன். உத்தமசோழனின் பட்டப்பெயரால் இவனுக்கு விக்ரமசோழமஹாராயன் என்னும் விருதுப்பெயர் வாய்த்தது. இவன் ராஜராஜனின் காலத்தில் ராஜராஜபேரரையன் என்னும் பெயரோடு திகழ்ந்தான். இவன் விசையமங்கலம் என்று வழங்கப்பெற்ற ஊரில் எந்தைக்கு ஓர் கற்றளி எடுப்பித்தான். அவ்வூர் தற்போது கோவிந்தபுத்தூர் என்று வழங்கப்பெறுகிறது. அந்தக் கோயிலிலுள்ள கல்வெட்டு அவன் புகழ்பாடுகிறது. அதன் வடமொழிப்பகுதியைக் காண்போம்.
வரி 1 : कुवलालसमुद्भवः सुकीर्त्तिः
வரி 2 : பழுவூர் நக்க इति प्रथितनामा मुरवैरि व..
வரி 3 : ख्यः जातवर्ण्णप्रवरो वंशकरः समाविरासीत्।
வரி 4 : यदर्थिनः त्यागमुपात्तविग्रहं द्विषज्जनाः शौ
வரி 5 : गुणं शरीरिणम्। अनङ्गमङ्गान्वयिनम् मृगेक्षणाः
வரி 5 : विदन्ति धर्मं सतनुं विपश्चितः। सोयं स्वविक्रमाप्त
வரி 6 : खलार्ण्णवाम्बराकारग्रहाद्वीर्यं तोषिताद्विक्रमचोळ नृपाल्ल
வரி 7 : ब्धविक्रमचोळमहाराजाभिधोस्य राज्ञः चतुर्द्दशवर्षे मह
வரி 8 : श्रीवानवन् महादेव्यग्रहारे श्रीविजयमंगले वसतः श
வரி 9 : म्भोः मन्दिरं शिलामयं विधायास्यैव ग्रामस्य स्वभृतां नॆ
வரி 10 : टुवायिलनामग्रामटिकाम्महापार्षः क्रीत्वा स्वविक्ततदानादक
வரி 11 : रञ्च कृत्वा तस्यैव शम्भोराशशाङ्कस्थिते अर्चनोत्सवाद्यर्त्थ
வரி 12 : म् प्रादात्।
வரி 1 : குவலாலஸமுத்³ப⁴வ: ஸுகீர்த்தி:
வரி 2 : பழுவூர் நக்க இதி ப்ரதி²தனாமா முரவைரி வ..
வரி 3 : க்²ய: ஜாதவர்ண்ணப்ரவரோ வம்ʼஸ²கர: ஸமாவிராஸீத்|
வரி 4 : யத³ர்தி²ன: த்யாக³முபாத்தவிக்³ரஹம்ʼ த்³விஷஜ்ஜனா: ஸௌ²
வரி 5 : கு³ணம்ʼ ஸ²ரீரிணம்| அனங்க³மங்கா³ன்வயினம் ம்ருʼகே³க்ஷணா:
வரி 5 : வித³ந்தி த⁴ர்மம்ʼ ஸதனும்ʼ விபஸ்²சித:| ஸோயம்ʼ ஸ்வவிக்ரமாப்த
வரி 6 : க²லார்ண்ணவாம்ப³ராகாரக்³ரஹாத்³வீர்யம்ʼ தோஷிதாத்³விக்ரமசோள ந்ருʼபால்ல
வரி 7 : ப்³த⁴விக்ரமசோளமஹாராஜாபி⁴தோ⁴ஸ்ய ராஜ்ஞ: சதுர்த்³த³ஸ²வர்ஷே மஹ
வரி 8 : ஸ்ரீவானவன் மஹாதே³வ்யக்³ரஹாரே ஸ்ரீவிஜயமங்க³லே வஸத: ஸ²
வரி 9 : ம்போ⁴: மந்தி³ரம்ʼ ஸி²லாமயம்ʼ விதா⁴யாஸ்யைவ க்³ராமஸ்ய ஸ்வப்⁴ருʼதாம்ʼ நெ
வரி 10 : டுவாயிலனாமக்³ராமடிகாம்மஹாபார்ஷ: க்ரீத்வா ஸ்வவிக்தததா³னாத³க
வரி 11 : ரஞ்ச க்ருʼத்வா தஸ்யைவ ஸ²ம்போ⁴ராஸ²ஸா²ங்கஸ்தி²தே அர்சனோத்ஸவாத்³யர்த்த²
வரி 12 : ம் ப்ராதா³த்|
இந்த வடமொழிப்பகுதி அம்பலவன் பழுவூர் நக்கன் குவளாலபுரத்தில் உயர்குலத்தில் தோன்றியவன். அவன் வள்ளற்றன்மையே வடிவெடுத்தவன். வீரமே உருவானவன். அழகிய மங்கையர் அவனைக் காமவேளாகக் கண்டனர். அறிஞர்களோ அறமே உருவெடுத்தவனென்று அறுதிசெய்தனர். அவன் தன் தோள்வலிகொண்டு விக்ரமசோழமஹாராஜன் என்னும் பட்டமெய்தினன். அவன் தன் அரசனின் 14 ஆம் ஆட்சியாண்டில் விசையமங்கலத்திலுள்ள சம்புவின் கோயிலைக் கற்றளியாக்கினான். அது வானவன் மாதேவி அக்ரஹாரத்தில் அமைந்தது. அதே அக்ரஹாரத்தைச் சேர்ந்த நெடுவாயில் என்னும் சிற்றூரை அக்கோயிலுக்கு அர்ச்சனை, உத்ஸவம் முதலியவற்றை மேற்கொள்ள வரியிலாத் தானமாக வழங்கினன்.
இவ்விதம் வேறுமாநிலத்தைச் சேர்ந்த இருவர் சோழர்தம் படைத்தளபதிகளாகி எந்தைக்குக் கோயிலும் எடுப்பித்த செய்தியைக் காணவியல்கிறது. இருவருமே பரகேஸரி என்னும் பட்டமுடைய மன்னர்தம் கீழ் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆற்றலைப்போற்றியதால் தான் சோழப்பேரரசு தென்கிழக்கு ஆசியாவை ஆளமுடிந்தது.அளவில்லாத வராரலாற்றுப்பணியைத் தமிழ் உலகிற்கு வழங்கிவருகிறீர்கள் தங்கள் பாதம் பணிகிறேன்.
dear
As per famous historian Mr.K.A.Neela kanda sastri Book written by him {The Illustrated History of south india} Chozha disappeared aftr some time only pallavas,salukkias dominated entire south india and Pandians in deep south. can any body confirm this.
Annual Report on Indian Epigraphy (A.R.E. No.164 of 1928 – 29, Brief page No.74) states that, Ambalavan Paluvurnakkan, a native of Kuvalalam (Kolar) mentioned in the 14th year of Vikrama Chola (Sundara Chola) in the Sanskrit portion and in the 14th year of Parakesarivarman in the Tamil portion. It states that Ambalavan Paluvurnakkan was a Sudra by caste.