மகதைப்பெருமாளின் திருவண்ணாமலைக் கல்வெட்டு

பின்வரும் கல்வெட்டு திருவண்ணாமலை கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் என்று வழங்கப்பெறும் கோபுரத்தில் அமைந்குள்ளது. இந்தக் கல்வெட்டு பொன் வேய்ந்தானான ராஜராஜ வாணகோவரையனின் பெருமையைப் பாடுகிறது. பெரும் வடமொழிக்கவியான கவிராஜன் என்பான் இந்தக் கல்வெட்டுப்பாவை யாத்துள்ளான்.

இந்தக் கல்வெட்டின் காலத்தை அதே கோயிலிலுள்ள மற்றொரு கல்வெட்டினால் அறியவியல்கிறது. அந்தக் கல்வெட்டு பொன்வேய்ந்தானான ராஜராஜவாணகோவரையன் அங்கு வந்து எந்தையை வணங்கி சில நிவந்தங்களுக்காக நிலங்களைத் தானமாக வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது. அந்தக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பத்தைந்தாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. அந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி எட்டில் 148 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

Line 1 :         திரிபுவுன வீரதேவற்கு யாண்டு ௩௰௫ ஆவது ஆறகளூருடைய இராசராசதேவன் பொன்பரப்பினான வாணகோவரையனேந்

Line 2 :         மிதுன நாயற்று எட்டாந்தியதியும் அனுழமும் பெற்ற திருநாயற்றுக்கிழமை நாள் உடையார் திருவண்ணாமலை உ

Line 3 :         டைய னாயனாரை வந்து கும்பிட்டு இற்றை னாளிலே திருக்கோயில் பொன்மேய்ந்து இந்நாயனார்க்கு திருமடை

Line 4 :         ப்பள்ளிப்புறமாகவும்….

            இந்தக் கல்வெட்டைக் கொண்டு பொன்வேய்ந்த நாளை பொயு 1213, ஜூன் 2-ஆம் தேதி (அனுஷம் 0.13 இல் துவங்குகிறது.) என்பதை உய்த்துணரவியல்கிறது. ஆகவே அந்த வடமொழிக் கல்வெட்டு இந்தத் தேதிக்கு சற்றுப் பின்னாதல் வேண்டும்.

            இந்த வடமொழிக்கல்வெட்டு 1902 ஆம் ஆண்டுக்கான இந்திய தொல்லியல் ஆண்டறிக்கையில் 544 ஆம் எண்ணாகக் குறிப்பிடப்பெற்றிருந்தது. பின்னர் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி எட்டில் 135 ஆம் எண்ணாகப் பதிப்பிக்கப் பெற்றது. ஆனால் அங்கு கல்வெட்டின் விளக்கமோ மொழிமாற்றமோ தரப்படவில்லை.  இதன் வரிகளாவன

Line 1 :         लिखतु भुजसहस्रं कार्त्तवीर्यार्ज्जु

Line 2 :         नीयम् पठतु मुखसमूहः काद्रवेयाधिपस्य। कव

Line 3 :         यति कविराजः कामधेनुः कवीनां सपदि सकल

Line 4 :         विद्याचक्रवर्ती कवीन्द्रः। पूर्वं पञ्चकमद्य चैक

Line 5 :         ममरक्ष्मापालगर्व्वद्रुहः पाण्ड्यान् संयति संहृतानि

Line 6 :         मकुटान्येतेषु बाणेश्वर। एकञ्चोलकृते वितीर्ण्णमपराण्यद्यारुणाख्याय ते शैलेन्द्राय समर्प्पिता

Line 7 :         नि भवता किं वार्त्थिने दास्यते।। जित्वा बाहुबलेन बा

Line 8 :         हुजबलान्याच्छिद्य नीवीधनन्तेन स्वर्ण्णमयेश्वराय र

Line 9 :         चिते बाणारुणाद्रौ त्वया। सम्भ्रान्त्या भुवनस्य किं

Line 10 :        त्रिभुवनभ्रान्तिप्रतिक्षेपकः पूषा भ्राम्यति मेरुभूधर

Line 11 :        धिया सव्यप्रयाणोद्यतः।।  ௳

Line 1 : லிக²து பு⁴ஜஸஹஸ்ரம்ʼ கார்த்தவீர்யார்ஜ்ஜு

Line 2 : நீயம் பட²து முக²ஸமூஹ​: காத்³ரவேயாதி⁴பஸ்ய| கவ

Line 3 : யதி கவிராஜ​: காமதே⁴னு​: கவீனாம்ʼ ஸபதி³ ஸகல

Line 4 : வித்³யாசக்ரவர்தீ கவீந்த்³ர​:| பூர்வம்ʼ பஞ்சகமத்³ய சைக

Line 5 : மமரக்ஷ்மாபாலக³ர்வ்வத்³ருஹ​: பாண்ட்³யான் ஸம்ʼயதி ஸம்ʼஹ்ருʼதானி

Line 6 : மகுடான்யேதேஷு பா³ணேஸ்²வர| ஏகஞ்சோலக்ருʼதே விதீர்ண்ணமபராண்யத்³யாருணாக்²யாய தே ஸை²லேந்த்³ராய ஸமர்ப்பிதா

Line 7 : நி ப⁴வதா கிம்ʼ வார்த்தி²னே தா³ஸ்யதே|| ஜித்வா பா³ஹுப³லேன பா³

Line 8 : ஹுஜப³லான்யாச்சி²த்³ய நீவீத⁴னந்தேன ஸ்வர்ண்ணமயேஸ்²வராய ர

Line 9 : சிதே பா³ணாருணாத்³ரௌ த்வயா| ஸம்ப்⁴ராந்த்யா பு⁴வனஸ்ய கிம்ʼ

Line 10 : த்ரிபு⁴வனப்⁴ராந்திப்ரதிக்ஷேபக​: பூஷா ப்⁴ராம்யதி மேருபூ⁴த⁴ர

Line 11 : தி⁴யா ஸவ்யப்ரயாணோத்³யத​:|| ௳

முதல் பா:

பாவகை : மாலினி

लिखतु भुजसहस्रं कार्त्तवीर्यार्ज्जुनीयम्

पठतु मुखसमूहः काद्रवेयाधिपस्य।

कवयति कविराजः कामधेनुः कवीनां

सपदि सकलविद्याचक्रवर्ती कवीन्द्रः।

லிக²து பு⁴ஜஸஹஸ்ரம்ʼ கார்த்தவீர்யார்ஜ்ஜுனீயம்

பட²து முக²ஸமூஹ​: காத்³ரவேயாதி⁴பஸ்ய|

கவயதி கவிராஜ​: காமதே⁴னு​: கவீனாம்ʼ

ஸபதி³ ஸகலவித்³யாசக்ரவர்தீ கவீந்த்³ர​:|

          கார்த்தவீர்யனின் ஆயிரம் கரங்களும் எழுதட்டும். அதனை அரவுகளின் தலைவனான ஆதிசேஷனின் வாய்த்தொகுதிகள் படிக்கட்டும். கவிகளுக்குக் காமதேனுவானவனும் எல்லா கலைகளுக்கும் சக்ரவர்த்தியானவனும் கவிகளில் இந்த்ரனைப் போன்றவனுமான கவிராஜன் உடனேயே இந்தக் கவிதையை யாத்துள்ளான்.

இரண்டாம் பா :

பாவகை : சார்தூலவிக்ரீடிதம்

पूर्वं पञ्चकमद्य चैकममरक्ष्मापालगर्व्वद्रुहः

पाण्ड्यान् संयति संहृतानि मकुटान्येतेषु बाणेश्वर।

एकञ्चोलकृते वितीर्ण्णमपराण्यद्यारुणाख्याय ते

शैलेन्द्राय समर्प्पिता नि भवता किं वार्त्थिने दास्यते।।

பூர்வம்ʼ பஞ்சகமத்³ய சைகமமரக்ஷ்மாபாலக³ர்வ்வத்³ருஹ​:

பாண்ட்³யான் ஸம்ʼயதி ஸம்ʼஹ்ருʼதானி மகுடான்யேதேஷு பா³ணேஸ்²வர|

ஏகஞ்சோலக்ருʼதே விதீர்ண்ணமபராண்யத்³யாருணாக்²யாய தே

ஸை²லேந்த்³ராய ஸமர்ப்பிதா நி ப⁴வதா கிம்ʼ வார்த்தி²னே தா³ஸ்யதே||

     பாணர்களின் தலைவனே நீ முன்பு ஐந்து மகுடங்களையும் இன்று ஒரு மகுடத்தையும் பாண்டியர்களிடமிருந்து கைக்கொண்டாய். அவர்கள் போரில் வானுலகின் தலைவனின் பெருமையையும் மழுங்கடிப்பவர்கள். அந்த மகுடங்களுள் ஒன்றை சோழனுக்கு அளித்தாய். மீதியுள்ளவற்றை அருணாசலம் என்ற பெயர் கொண்ட மலைக்களித்தாய். இதற்கு மேல் உன்னிடம் இரப்பவர்களுக்கு என்ன கொடுப்பாய்.

மூன்றாம் பா

பாவகை சார்தூலவிக்ரீடிதம்

जित्वा बाहुबलेन बाहुजबलान्याच्छिद्य नीवीधन

न्तेन स्वर्ण्णमयेश्वराय रचिते बाणारुणाद्रौ त्वया।

सम्भ्रान्त्या भुवनस्य किं त्रिभुवनभ्रान्तिप्रतिक्षेपकः

पूषा भ्राम्यति मेरुभूधरधिया सव्यप्रयाणोद्यतः।।

ஜித்வா பா³ஹுப³லேன பா³ஹுஜப³லான்யாச்சி²த்³ய நீவீத⁴ன

ந்தேன ஸ்வர்ண்ணமயேஸ்²வராய ரசிதே பா³ணாருணாத்³ரௌ த்வயா|

ஸம்ப்⁴ராந்த்யா பு⁴வனஸ்ய கிம்ʼ த்ரிபு⁴வனப்⁴ராந்திப்ரதிக்ஷேபக​:

பூஷா ப்⁴ராம்யதி மேருபூ⁴த⁴ரதி⁴யா ஸவ்யப்ரயாணோத்³யத​:||

பாணனே நீ தோள்வலியால் பெரும் நிதிக்குவையை வென்றெடுத்து தங்க வடிவான அருணாசல நாதரான ஈசனுக்கு வழங்கிவிட்டான். அதனால் மூவுலகிற்கும் குழப்பத்தைப் போக்கக் கூடிய கதிரவன் அதனை மேருமலையென்று மயங்கி அதனை வலம்வர முயற்சி செய்தவனாய் சுழல்கிறானே…

     இந்தக் கல்வெட்டுப்பாக்களின் மூலம் இதனை யாத்த கவியின் கவித்துவத்தை உணரவியல்கிறது அல்லவா.

Please follow and like us:

3 thoughts on “மகதைப்பெருமாளின் திருவண்ணாமலைக் கல்வெட்டு

  1. வடமொழிக்கவிஞரின் கற்பனை மிக அரிுமை! மயக்கம் நீக்கும் சூரியனே மயங்குகிறானாம்.ஆனால் ஒரு மயக்கம் எனக்கு, பாணன் எப்படிச் சோழனுக்கு மகுடம் தரமுடியும்?உண்மையில் பாணன் சிவனா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *