தேய்ந்து போன தினகரன்

sharpening of the Sun god

நிலவு மாதந்தோறும் தேயும், வளரும். ஆனால் பகலவன் தேய்வதுண்டா. தேய்ந்ததுண்டு என்கின்றன புராணங்கள். அந்தக் கதையைக் கேட்போமா.. கச்யப முனிவருக்குக் கண்ணான புதல்வனானவன் கதிரவன். அவன் உலகுக்கெல்லாம் கண்ணானான். அந்த தூயப்பெருவொளிக்குத் தன் புதல்வியான ஸம்ஜ்ஞா(உஷா) தேவியைத் திருமணம் செய்து கொடுத்தார் விச்வகர்மா. அவர்களுக்கு மூன்று புதல்வர்கள் தோன்றினர். முதலாமவர் வைவஸ்வத மனு. இரண்டாவது புதல்வன் கூற்றுத் தெய்வமான யம தர்மன். அடுத்து யமுனை நதி மகளாகப் பிறந்தாள். ஆயின் ஸம்ஜ்ஞா தேவிக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை….

தொடர்ந்து வாசிப்பு

ஆதித்யசோழனின் தக்கோலக் கல்வெட்டு – மீள் பார்வை

Takkolam inscription of Āditya Coḹa I

சோழப்பரம்பரையின் சுடர்விளக்காம் ஆதித்யனின் தக்கோலக் கல்வெட்டு மிகவும் புகழ் வாய்ந்தது. இந்தக் கல்வெட்டு காலஞ்சென்ற திரு. கே.வி. ஸுப்ரஹ்மண்ய ஐயர் அவர்களால் எபிகிராஃபியா இண்டிகாவின் 19 ஆம் தொகுதியில் 81-88 பக்கங்களில் விரிந்த ஆய்வுரையுடன் பதிப்பிக்கப்பெற்றது. ஐயரவர்கள் அவர்தம் முன்னுரையில் முதலாம் பராந்தகன் மற்றும் முதலாம் ஆதித்யனின் காலத்தை நிர்ணயிக்கும் விரிவான அலசல்களைத் தந்திருக்கிறார். அதன் பிறகு கல்வெட்டின் மொழியியல் மற்றும் எழுத்தியல் கூறுகளை விளக்கியுள்ளார். இந்தக் கல்வெட்டு ஆதித்யனின் 24-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த்து. இந்தக்கல்வெட்டில் மாரமரையனாரின்…

தொடர்ந்து வாசிப்பு

கௌசிகீச்வரர் கோயில், காஞ்சிபுரம்

KAUŚIKĪŚVARA TEMPLE

கோயிலின் தற்போதைய பெயர் : கௌசிகீச்வரர், சொ(தொ)க்கீச்வரர் கல்வெட்டிலுள்ள பெயர் : தெற்கிருந்த நக்கர் கோயிலின் அமைவிடம் : நகரத்திற்கு நடுவில் காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு தென் மேற்கில்அமைந்துள்ளது. கோயிலின் காலம் : இந்தக் கோயிலில் அமைந்துள்ள பரகேஸரிவர்மனின் கல்வெட்டு பண்டைய அறிஞர்கள் உத்தமசோழனுடையதாகக் கணித்தனர். அதனையொட்டி கோயிலின் காலத்தை திரு. எஸ்.ஆர்.பாலஸுப்ரமண்யம் அவர்கள் முதலாம் பராந்தகனுடைய காலமாகவும் கணித்தார். ஆனால் பிறகு திரு.கே.ஆர்.ஸ்ரீனிவாஸன் அவர்கள் இந்தக் கோயில் சோழர்கட்டிடக்கலையின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்ததாகவும் பரகேஸரிவர்மன் முதலாம்…

தொடர்ந்து வாசிப்பு

காஞ்சி கைலாயநாதர் கோயிலிலிருந்து இரு புதிய கல்வெட்டுக்கள்

New inscription from Kailāsanātha temple

காஞ்சிபுரத்திற்கே கவினழகாய் திகழும் கைலாயநாதர் கோயிலில் பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பெற்றுள்ளன. ஆயினும் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஒன்றில் பதிப்பிக்கப்பெறாத இரண்டு கல்வெட்டுக்கள் இன்னமும் அங்கே கண்சிமிட்டாமல் இல்லை. கல்வெட்டு -1 இந்தக் கல்வெட்டு கருவறை நோக்கும்போது வலதுபுற மூலையில் அமைந்துள்ள தேவகுளிகையில் அமைந்துள்ளது. அந்த தேவகுளிகையின் உட்புற சுவரில் செதுக்கப்பெற்றுள்ளதால் இதை எவரும் கவனிக்கவில்லையென்று கருதுகிறேன். இந்தக் கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டைய பல்லவ க்ரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது. இது இக்கோயிலைக்…

தொடர்ந்து வாசிப்பு