சுவடியியலைப் பயிலும்போது சுவடிகளை எழுதப்பயன்படும் பொருட்களும் கூட முக்கியமான இடத்தை வகிக்கின்றன. சுவடிகளுக்கான எழுதுபடுபொருட்களைத் தேர்ந்தெடுப்பது அதன் பயனைப் பொறுத்தே அமைகிறது. இன்றும் கூட நாம் தரமுயர்ந்த தாளில் தினசரிகளை அச்சிடுவதில்லை. தரமுயர்ந்த நூல்களை சாணித்தாள்களில் அச்சிடுவதுமில்லை. எழுதப்போகும் நூலுக்கான நோக்கமும் இயல்புமே சுவடிக்கான எழுதுபடு பொருளைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன.
பண்டைய காலத்திலும் அவர்களுக்கு எளிமையாக கிடைத்த கையாளத்தக்கபடியான பொருட்களையே பயன்படுத்தினர். சிலநேரங்களில் அதிசயமாக நாம் எதிர்பாராத சில பொருட்களிலும் சுவடிகளுக்கான பிரதிகள் காணப்பெறுகின்றன.
இத்தகைய நூல்களை எழுதப்பயன்படுத்தப்பெற்ற (ஆவணங்களுக்கானவை அல்ல, இதனால் கல்வெட்டு முதலியவை முக்கியமற்றவை என்று கூறுவது நிறுவப்பெறுகிறது.) எழுதுபடுபொருட்களை இருவிதமாகப் பிரிக்கலாம்.
- முக்கிய பொருட்கள்
- மற்றைய பொருட்கள்
முக்கிய பொருட்களாவன – பனையோலை, வடநாட்டில் கிடைக்கும் ஒருவித மரப்பட்டையான பூர்ஜ பத்ரம் மற்றும் காகிதம்.
மற்றைய பொருட்களை உலோஹத்தாலானவை, உலோஹமற்றவை என இருவிதமாகப் பிரிக்கலாம். உலோஹங்களில் பின்வருபவை பயன்படுத்தப்பெற்றுள்ளன.
- தங்கம்
- வெள்ளி
- தாமிரம்
- பித்தளை
- வெண்கலம்
- ஈயம் மற்றும்
- தங்கம்
உலோஹமற்ற எழுதுபடுபொருட்களாவன
- கல்
- செங்கல்
- தோல்
- துணி
- ஸ்படிகம்
- தந்தம்
- சங்கு முதலியன
- மரம்
மேற்கண்ட பொருட்களில் எழுதப் பலவிதமான எழுதுகருவிகளும் பயன்படுத்தப்பெற்றுள்ளன. மேற்கண்டவற்றுள் பெரும்பாலும் எல்லா/வற்றுக்குமான எடுத்துக்காட்டாக அமையும் சுவடிகள் கிடைத்துள்ளன. அழியும் பொருட்களான துணி, காகிதம் மற்றும் மரத்திலான சுவடிகளும் பழைய காலத்திலிருந்து கிடைத்துள்ளன. இவற்றை பதப்படுத்தும் முறையைப் பற்றியும் பயன்பாட்டைப் பற்றியும் பின்வரும் பதிவுகளில் காண்போம்.
ஓலைச்சுவடிகள் தயாரிப்பு கடினம் என உணர முடிகிறது. நன்றி….