காளஹஸ்தி கல்வெட்டில் கண்ணப்ப நாயனார்

     ஒரு சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து குருதி பெருக அதனைப் போக்குவதற்காக பக்தி மேலிட்டு தன் கண்ணையே அப்பிய கண்ணப்ப நாயனாரின் கதையை நாமறிவோம். இந்த நிகழ்வு ஆந்திரத்திலுள்ள காளஹஸ்தியில் நிகழ்ந்தேறியது. அதே ஊரில் இருக்கும் மணிகண்டீச்வரர் ஆலயத்தில் இருக்கும் கல்வெட்டொன்று எந்தையைப் போற்றும் முகமாக கண்ணப்பரின் வாழ்வை குறியாநிற்கிறது. இந்தக் கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு 12 ஆம் நூற்றாண்டாகக் கணக்கிடப் பெற்றிருக்கிறது. இந்தக் கல்வெட்டு சோழர் காலத்திய க்ரந்த லிபியில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு தொல்லியல்துறையின் 1892 ஆம் ஆண்டறிக்கையில் 202 ஆம் எண்ணாகக் குறிப்பிடப் பெற்றிருந்தது. பிறகு தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 650 ஆம் எண்ணோடு மூலம் மட்டும் பதிப்பிக்கப் பெற்றது.

     இந்தக் கல்வெட்டின் வரிகள் கீழே கொடுக்கப்பெற்றுள்ளன. இதில் பத்து வடமொழிச் செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன. இதன் துவக்கப்பகுதி சற்றே தேய்ந்துள்ளது. இந்தச் செய்யுட்களின் கவிவளம் சிறந்தமைந்துள்ளது.

1. ….नाम्। पुण्येन केनापि पुरा कृतेन अदृष्ट
2. पूर्वानु…. पुमर्थान् सिद्धाञ्जनः श्याममिदं वपुस्ते।।(1) अभिलषितक
3. लानामर्प्पको दर्प्पकारिर्भवतिमिरनिरासी भक्तपाथोधिवासी। अचल
4. दुहितुरर्द्धेनेन्द्रनीलायमानस्स भवतु मणिगङ्गातीरचिन्तामणिर्न्नः।(2) भक्ता
5. म्भोजैर्मदनविजयिन्माननीयञ्चतुर्भिर्म्मध्ये कृत्वा गिरिदुहिताज्ञा….
6. त्तपाङ्गम्। अङ्गैरङ्गान्यधिकमधुराण्यादरात्स्पृष्टमक्ष्णोर्भाग्याम्…
7. प्रथमघटने विग्रहे निस्पृहस्य।(3) पूर्व्वं किरातपतिकेशसमाहृतानि पुष्पा
8. णि भूतपतिभुक्तसमुत्थितानि। पिण्डः प्रभातसमये पुरतो गणानां
9. सोद्वेगभक्तिभयमातनुते स्वमौलौ।(4) भक्तेषु साभिभयधानधुर
10. न्धरेषु नेत्रार्प्पणात् कमपि धन्यतरन्तपितः। उच्छिष्टाम्बु कथयन्ति यदस्य शम्
11. भोर्द्देवस्य नित्यमभिषेकविशुद्धिहेतु (5) कमलभवकरोटीसर्प्पचन्द्रस्स्रव
12. न्तीवनचरपतिपादोपानदारग्वधेभ्यः। अनितरसुलभेभ्यो भू
13. षणेभ्यः पुरारेरतनुम नम उक्तिं काळहस्तीश्वरस्य। (6) भवति भुवने धन्य
14. न्धन्यस्स एव वटद्रुमः कनकमुखरीमूलं यस्यावसिश्चातिवारणा। अपि च शिखर
15. ञ्चूडासिन्धुस्तरंगपरम्परासलिलविसरैश्शम्भोः। श्रीकालहस्तिगिरिस्थि
16. तेः। (7) अंगे शैलप्रतिहतगतेश्शंकराद्रेर्मुखर्याश्शंभोरात्मप्रतिफल
17. नतो भूषणञ्चाम्बरञ्च। काळो हस्ती द्वयमपि भवत्पूजने कल्प्यमाने नि
18. त्यं सम्पादयत इति मे निश्चिता बुद्धिरासीत्।(8) आदायेक्षणप्यर्प्पितवतः पू
19. र्वन्ततोन्यज्जवादुद्धर्तुम् व्यवसायिस् सविमुखं हस्तन्निषादप्रभो। कामप्लो
20. षण कालहस्तिवसतेः। कान्ताविमिश्रात्मनो वामस्ते नयनं रुरोध वल
21. यी पाणिस्तदा वत्सलः।(9) अपासृजत् दहनमुखं शिलीमुखं प्रलम्भयत् सु
22. गिरिकार्म्मुकं करम्। पुरत्रये त्रिदशदृशामगोचरे समुत्थमपि स महान्महे
23. श्वरः।। (10)

பொருள்

பாவகை – இந்த்ர வஜ்ரா

….नाम्।

पुण्येन केनापि पुरा कृतेन

अदृष्टपूर्वानु…. पुमर्थान्

सिद्धाञ्जनः श्याममिदं वपुस्ते।।(1)

          முற்பிறவியில் செய் பலவிதமான புண்யங்களால்…. அதிர்ஷ்டத்தால்….. புருஷார்த்தங்களை….. மாந்த்ரிக மை போன்று தங்கள் வடிவம் கருமையாயிருக்கிறது.

பாவகை – மாலினீ

अभिलषितकलानामर्प्पको दर्प्पकारि

र्भवतिमिरनिरासी भक्तपाथोधिवासी।

अचलदुहितुरर्द्धेनेन्द्रनीलायमान

स्स भवतु मणिगङ्गातीरचिन्तामणिर्न्नः।(2)

          மணி கங்கையில் அமைந்த சிந்தாமணி நமக்கு எல்லாவற்றையும் வழங்கட்டும். அது விரும்பிய கலைகளையெல்லாம் வழங்குவதி. ஆணவத்தை அழிப்பது. ஸம்ஸாரமாகிய இருளைப் போக்கவது. அடியார்களாகிய கடலில் உறைவது. இடப்புறம் மலைமகளையுடையதால் இந்த்ரநீலத்தைப் போலத் திகழ்வது.

பாவகை – மந்தாக்ராந்தா

भक्ताम्भोजैर्मदनविजयिन्माननीयञ्चतुर्भि

र्म्मध्ये कृत्वा गिरिदुहिताज्ञा….त्तमाङ्गम्।

अङ्गैरङ्गान्यधिकमधुराण्यादरात्स्पृष्टमक्ष्णो

र्भाग्याम्…प्रथमघटने विग्रहे निस्पृहस्य।(3)

காமனையெரித்த பரமனே உன் உடலழகு கண்ணுக்கு விருந்தாகிறது. இது நான்கு பக்தர்களாகிய தாமரைகளால் போற்றப்பெற்றது. இடையில் மலைமகளின் …. தலையை வைத்த்து. அழகிய அங்கங்கள் அங்களால் தீண்டப்பெற்ற கவினுடையது.

பாவகை – வஸந்த திலகா

पूर्व्वं किरातपतिकेशसमाहृतानि पुष्पाणि भूतपतिभुक्तसमुत्थितानि।

पिण्डः प्रभातसमये पुरतो गणानां सोद्वेगभक्तिभयमातनुते स्वमौलौ।(4)

          முன்பு வேடர் தலைவன் பெரும் அன்பினால் தன் தலையால் கொணர்ந்த பூக்களையும் உண்டு மீந்த இறைச்சிப் பிண்டத்தையும் வைத்தானே அதைக் கண்டு சிவகணங்கள் பயமும் பக்தியும் மறுநாட்காலை கொண்டனவே..

भक्तेषु साभिभयधानधुरन्धरेषु नेत्रार्प्पणात् कमपि धन्यतरन्तपितः।

उच्छिष्टाम्बु कथयन्ति यदस्य शम्भोर्द्देवस्य नित्यमभिषेकविशुद्धिहेतु (5)

          அனைவற்றையும் அளிப்பதில் தேர்ந்த பக்தர்களுக்கு மத்தியில் தனது கண்களையே அளித்து பெருந்தவமியற்றினான். அவனுடைய வாயினுடைய உமிழ்நீரே தேவரான எந்தைக்கு தினமும் புனிமாக்கும் அபிஷேகமாகும்.

பாவகை – மாலினீ

कमलभवकरोटीसर्प्पचन्द्रस्स्रवन्ती

वनचरपतिपादोपानदारग्वधेभ्यः।

अनितरसुलभेभ्यो भूषणेभ्यः पुरारे

रतनुम नम उक्तिं काळहस्तीश्वरस्य। (6)

          நாம் காளஹஸ்தியில் உறையும் எந்தைக்கு வணக்கங்களைக் கூறுவோம். புரமெரித்த அந்தப் பரமன் எவராலும் அணியமுடியாத அணிகலன்களை அணிந்துள்ளார். நான்முகனின் மண்டையோடு, நாகம், சந்திரன், நதி இவற்றோடு வேடர்தலைவன் செருப்பையும் கொன்றையையும் அல்லவா அவன் அணிந்துள்ளான்.

 

भवति भुवने धन्यन्धन्यस्स एव वटद्रुः

कनकमुखरीमूलं यस्यावसिश्चातिवारणा।

अपि च शिखरञ्चूडासिन्धुस्तरंगपरम्परा

सलिलविसरैश्शम्भोः श्रीकालहस्तिगिरिस्थितेः। (7)

          ஸ்வர்ணமுகரி கரையிலிருக்கும் அந்த ஆலமரம் அல்லவா பேறு பெற்றது. அதன் மேற்பகுதி காளஹஸ்தியிலுறையும் எந்தை தலையிருக்கும் நதியின் அலைகளின் தொகுதியோடு நெருக்கத்தைப் பெற்றுள்ளனவே.

பாவகை – மந்தாக்ராந்தா

अंगे शैलप्रतिहतगतेश्शंकराद्रेर्मुखर्या

श्शंभोरात्मप्रतिफलनतो भूषणञ्चाम्बरञ्च।

काळो हस्ती द्वयमपि भवत्पूजने कल्प्यमाने

नित्यं सम्पादयत इति मे निश्चिता बुद्धिरासीत्।(8)

          முகரியின் பாதையைப் பிரிக்கும் சங்கர மலையில் எந்தையின் ஆத்மா ப்ரதிபலிக்கிறது. அது ஆகாயத்திற்கே அணிகலனாகத் திகழ்கிறது. ஆகவேதான் இங்கே காளனென்னும் நாகமும் ஹஸ்தியான யானையும் பூசித்தன, இப்போதும் போற்றுகின்றன.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

आदायेक्षणमप्यर्प्पितवतः पूर्वन्ततोन्यज्जवा

दुद्धर्तुम् व्यवसायिस्स विमुखं हस्तन्निषादप्रभोः।

कामप्लोषण कालहस्तिवसतेः कान्ताविमिश्रात्मनो

वामस्ते नयनं रुरोध वलयी पाणिस्तदा वत्सलः।(9)

          வேடர் தலைவன் தனது ஒரு கண்ணை அப்பிய பின்னர் மற்றொரு கண்ணையும் வேகமாக எடுக்க முற்பட்ட போது காளஹஸ்தியில் வாழும் காதலியை இடம் கொண்ட காமனையெரித்த பிரானின் கை கருணையோடு அவனைத் தடுத்தாட் கொண்டதே.

பாவகை – அதிருசிரா

अपासृजत् दहनमुखं शिलीमुखं प्रलम्भयत् सुगिरिकार्म्मुकं करम्।

पुरत्रये त्रिदशदृशामगोचरे समुत्थमपि स महान्महेश्वरः।। (10)

          அவர்தாம் மஹேச்வரர். முப்புரங்களைமா  எரிக்க வேண்டி பெருமலையையே வில்லாக எடுத்து நெருப்பு பொழியும் அம்பை விடுத்தாரல்லவா. அந்த முப்புரங்களோ தேவர்கள் தம் கண்ணாலும் காணவொண்ணாதவை.

      இவ்விதம் சற்றேறக்குறைய பெரியபுராணத்திற்கு ஸமகாலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு கண்ணப்பநாயனாரின் வாழ்வை விளக்குகிறது. சில அறிஞர்கள் கண்ணப்பர் கண்களைப் பெயர்க்கும் செயல் சேக்கிழாரின் கற்பனையே என்றும் அதற்கு முன்பேயே ஈசன் அருளியதாகவும் அதற்கு முந்தையதான பல சிற்பத் தொகுதிகளைக் காட்டிக் கருதுகின்றனர். ஆனால் இந்தக் கல்வெட்டு சேக்கிழாரின் கூற்றுக்கே வலு சேர்க்கிறது.

Please follow and like us:

One thought on “காளஹஸ்தி கல்வெட்டில் கண்ணப்ப நாயனார்

  1. எம்மையாளும் எம்பிரான் கண்ணப்பரின் காவியம் தந்தமைக்கு கோடானகோடி நன்றி ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *