மூன்றாம் நந்திவர்மனின் குமரடி மங்கலச்செப்பேட்டின் வடமொழிப்பகுதி

கிடைத்தவிடம்

     இந்தச் செப்பேடு தஞ்சைக்கருகிலுள்ள கருந்தட்டான்குடியிலிருந்த தமிழ்ப்பேராசிரியரான ஸ்ரீ கோவிந்தராஜன் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றது. இதை ஹைதராபாத்திலுள்ள பிர்லா தொல்லியல் மற்றும் பண்பாட்டு ஆய்வகம் விலைக்குப் பெற்றது.

செப்பேட்டு விவரங்கள்

     இந்தச் செப்பேட்டில் ஐந்து செப்பிதழ்களுள்ளன. அவை 23 செமீ நீளமும் 9 செமீ அகலமும் உடையன. இவற்றின் கனம் 2 செமீ ஆகும். இதன் வளையமும் இலச்சினையும் கிடைக்கவில்லை. இவை நல்ல நிலையில் கிடைத்துள்ளன. இந்தச் செப்பேடு 69 வரிகளைக் கொண்டுள்ளது. இதன் வடமொழிப்பகுதி க்ரந்த லிபியிலும் தமிழ்ப்பகுதி தமிழிலுமாக எழுதப்பெற்றுள்ளன. அங்கீரஸ என்பதை அங்கி என்றும் ப்ரவசன என்பதை ப்ரவ என்றும் குறிக்கும சுருக்கெழுத்துக்களும் தமிழ்ப்பகுதியில் கையாளப்பெற்றுள்ளன. முதல் பதினாறு வரிகள் வடமொழியிலும் மற்றவை தமிழிலுமாக அமைந்துள்ளன. கடைசிப்பகுதியில் அமைந்துள்ள ஒம்படைக்கிளவியும் செதுக்கியவர் பெயரும் வடமொழியில் இடம்பெற்றுள்ளன.

 

பதிப்பு வரலாறு

     முனைவர். என் ரமேசன் அவர்கள் இந்தச் செப்பேட்டை ஆந்திர மாநில தொல்லியத்துறையின் ஆய்வேட்டில் பதிப்பித்தார்.

நோக்கம்

     மூன்றாம் நந்திவர்மன் குமரடிமங்கலம் என்னும் சிற்றூரை இருபத்துநான்கு அந்தணர்களுக்குத் தானமாக வழங்கினான். அதற்கான ஆவணமாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது.

காலம்

     இந்தச் செப்பேடு மூன்றாம் நந்திவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்றுள்ளது. பல்லவர்தம் ஆட்சிக்காலத்தை நான் மீட்டு வரையறை செய்தபடி மூன்றாம் நந்தி வர்மனின் பத்தாம் ஆட்சியாண்டு பொயு 832 ஆகும்.

 

வரிகள்

plate

முதல் ஏடு முதல் பக்கம்

Line 1. स्वस्तिश्री। लोकोत्पत्तिस्थितिलयविधेरीश ते यस्य लीला यत्रायत्य(त्तं) परम
Line 2. मधुरं शर्म लोगे(के)श्वराश्च दुर्विज्ञातश्चरसि महिमा यस्य वेधोह
Line 3. रिभ्यान्तद्वः पायामलमतुलन्धाम चन्द्रार्धमौलेः। धातुः पङ्कजनाभ
Line 4. नाभिनलिनध्यानासनाध्यासिनो जातश्शंयुबृहस्पतिप्रभृतिथिर्यो जन्म
Line 5. ना स्वीकृतः तस्मिन्पल(ल्ल)वकाण्डभ(प)त्रस्कन्दादिजन्मोर्जिते वंशे वास(व)
Line 6. विक्रमस्समजनि श्रीनंदिवर्म्मा नृपः। अभवदवनिपालादद्भुतश्रीरमुष्मात्सकल
Line 7. जनशरण्यो दंतिवर्म्मा सुकर्म्मा भयविनतसमस्तक्षत्रसङ्घातचूडामणि
Line 8. मधुकरवृन्दाघ्रातपादारविन्दः। देवी यस्य शचीव कर्बुररिपोः पद्मेव प

முதல் ஏடு இரண்டாம் பக்கம்

Line 9. द्मापतेश्शर्वाणीव पुरद्विषश्चलदृशामग्रेसरी सद्गुणैः आसीदग्गलिनिम्मडीति
Line 10. जगति प्रख्यातशुद्धाह्वया कादम्बी महितस्य पल्लवमहाराजस्य राज्ञः सुता।।
Line 11. हरचरणसरोरुहावतंसो भुजयुगविक्रमलब्धवीरशब्दः नरपतिरज
Line 12. निष्ट नन्दिवर्म्मा प्रियतनयो नयधाम तस्य तस्य। स पुनरवनतनरप
Line 13. तिशतावतंसीकृतचरणारविंदो नरपतिर्महामात्रकुलगगनग
Line 14. भस्तिमालिना नयभरमङ्गलमहाराजेन विज्ञापितो वेदविद्भ्यो ब्राह्मणे
Line 15. भ्यश्चतुर्विंशतये निलनूरन्तः। (पाति भुजणापावेन) धवलिका चतुष्टय
Line 16. म् कृतं कुमरडिमंगलनामधेयं प्रादात्।

स्वस्तिश्री।

மங்களம்

பாவகை – மந்தாக்ராந்தா

लोकोत्पत्तिस्थितिलयविधेरीशते यस्य लीला

यत्रायत्य(त्तं) परममधुरं शर्म लोगे(के)श्वराश्च

दुर्विज्ञातश्चरसि महिमा यस्य वेधोहरिभ्या

न्तद्वः पायादमलमतुलन्धाम चन्द्रार्धमौलेः।1

          பிறைசூடிய பெருமான் உங்களைக் காக்கட்டும். அவருடைய லீலையே படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலாகிய முத்தொழிலுக்கும் மூலவிதியாய் அமைகிறது. அவரிடம்தான் இனிமையான மங்கலமும் எல்லா தேவர்களும் நிலைகொண்டுள்ளனர். அவருடைய மஹிமை ப்ரஹ்மனாலும் விஷ்ணுவினாலும் அறியவொண்ணாதது.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

धातुः पङ्कजनाभनाभिनलिनध्यानासनाध्यासिनो

जातश्शंयुबृहस्पतिप्रभृतिभिर्यो जन्मना स्वीकृतः

तस्मिन्पल(ल्ल)वकाण्डभ(प)त्रस्कन्दादिजन्मोर्जिते

वंशे वास(व)विक्रमस्समजनि श्रीनंदिवर्म्मा नृपः।

          பத்மநாபனான திருமாலின் உந்தித் தாமரையில் த்யானத்தில் அமர்ந்த நான்முகனிடமிருந்து சம்யு ப்ரஹ்மாவிடமிருந்து தோன்றினார். ப்ருஹஸ்பதி முதலியோர் அந்தக் குலத்தில் பிறவியெடுத்தனர். இலை, கிளை, தண்டு முதலியவை செழித்த அந்த பல்லவ குலத்தில் இந்திரனுக்கு சமானமான வீரமுடைய ஸ்ரீநந்திவர்மன் என்னும் அரசன் தோன்றினான்.

பாவகை – மாலினீ

अभवदवनिपालादद्भुतश्रीरमुष्मा

त्सकलजनशरण्यो दंतिवर्म्मा सुकर्म्मा

भयविनतसमस्तक्षत्रसङ्घातचूडा

मणिमधुकरवृन्दाघ्रातपादारविन्दः।

          அந்த அரசனிடமிருந்து தந்தி வர்மன் தோன்றினான். அவன் அதிசயிக்கத்தக்க செல்வத்தையுடையவன். எல்லா மக்களுக்கும் புகலானவன். நற்செயல்களையுடையவன். அச்சத்தினால் வணங்கும் எல்லாம மன்னர்களின் குழுவின் தலையணியிலுள்ள மணிகளாகிய வண்டுகளால் நுகரப்பெறும் பாதத்தாமரையையுடையவன்.

பாவகை – சார்தூலவிக்ரீடிதம்

देवी यस्य शचीव कर्बुररिपोः पद्मेव पद्मापते

श्शर्वाणीव पुरद्विषश्चलदृशामग्रेसरी सद्गुणैः

आसीदग्गलिनिम्मडीति जगति प्रख्यातशुद्धाह्वया

कादम्बी महितस्य पल्लवमहाराजस्य राज्ञः सुता।।

          அந்தப் பல்லவப் பேரரசனுக்கு கதம்பவரசனின் மகளான அக்களநிம்மடி மனைவியானாள். அவள் நற்குணமுடைய பெண்களின் முதலாகத் திகழ்ந்தவள். இந்த்ரனுக்கு இந்த்ராணியைப் போலவும் திருமாலுக்குத் திருமகளைப் போலவும் புரமெரித்த பரமனுக்கு பார்வதியைப் போலவும் திகழ்ந்தவள். அவள் உலகில் புகழ்பெற்ற குலத்தைச் சேர்ந்தவள்.

பாவகை – ஆர்யா

हरचरणसरोरुहावतंसो भुजयुगविक्रमलब्धवीरशब्दः

नरपतिरजनिष्ट नन्दिवर्म्मा प्रियतनयो नयधाम तस्य तस्य।

          அவர்களுக்கு நந்திவர்மா என்னும் விருப்பமான மகன் தோன்றினான். அவன் சிவனின் பாதத்தாமரையைத் தலையணியாகச் சூடியவன். தன் தோளிணையின் வலிமையால் வீரனென்னும் புகழை அடைந்தவன். நீதியின் உறைவிடம்.

உரைநடை

स पुनरवनतनरपतिशतावतंसीकृतचरणारविंदो नरपतिर्महामात्रकुलगगनगभस्तिमालिना नयभरमङ्गलमहाराजेन विज्ञापितो वेदविद्भ्यो ब्राह्मणेभ्यश्चतुर्विंशतये निलनूरन्तः। (पाति भुजणापावेन) धवलिका चतुष्टयम् कृतं कुमरडिमंगलनामधेयं प्रादात्।

     வணங்கிநிற்கும் மன்னர்களின் நூற்றுக்கணக்கான தொகுதியால் அலங்கரிக்கப்பெற்ற பாதத்தாமரையையுடைய அந்த அரசன் மஹாமாத்ர குலமாகிய ஆகாயத்திற்குக் கதிரவனைப் போன்றவனான நயபரமங்கலமஹாராஜனால் வேண்டப்பெற்றவனாய் வேதமறிந்த அந்தணர்கள் இருபத்து நால்வருக்கு நிலநூரின் நடுவில் நான்கு தவலிகை அளவுள்ள நிலத்தை குமரடிமங்கலம் என்னும் பெயரோடு வழங்கினான்.

சில கருத்துக்கள்

  1. இந்தச் செப்பேடு மூன்றாம் நந்திவர்மனின் தாய் அக்களநிம்மடி என்னும் வேலூர்பாளையச்செப்பேடு கூறிய கருத்தை மீண்டும் நிறுவுகிறது.
  2. இந்தச் செப்பேட்டின் தமிழ்ப்பகுதி ஆணத்தியாகக் குறிப்பிடும் பலியபதி அரையனை குமாராங்குசன் என்னும் பெயருடைய பல்லிய சோழனாக திரு.ரமேசன் அடையாளம் கண்டுள்ளார். குமராங்குசனே வேலூர்பாளையச் செப்பேட்டிலும் விண்ணப்பம் செய்தவன். சில அறிஞர்கள் விஜயாலயசோழனின் தந்தை இந்த குமாராங்குசனே என்று அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் கே.வி.ஸௌந்தர ராஜன் அவர்கள் குறிப்பிட்ட படி இந்த குமாராங்குசன் பல்லைய சோழனேயாவான்.
  3. என்.ரமேசம் அவர்கள் இதில் குறிப்பிடப்பெற்ற குமரடிமங்கலத்தைத் தஞ்சாவூருக்கருகிலுள்ள குமாரமங்கலமாக இருக்கலாம் என்று அடையாளம் கண்டுள்ளார். இந்த அடையாளம் சரியானால் மூன்றாம் நந்திவர்மனின் ஆட்சி தஞ்சாவூர் வரை பரவியிருந்தது நிறுவப்பெறுகிறது. இதனால் திருவிந்தளூர் செப்பேடு குறிப்பிடுவதைப் போல பல்லவரிடமிருந்து விஜயாலயன் தஞ்சையைக் கொண்டதும் ஓரளவு தெளிவாகிறது.
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *