சுந்தரபாண்ட்யனின் ஸ்ரீரங்கக் கல்வெட்டு

     பின்வரும் கல்வெட்டு ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதரின் ஆலயத்தில் கருவறை முன்னுள்ள மண்டபத்திலுள்ள நான்கு தூண்களிலும் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு 1892 ஆமாண்டு தொல்லியில் அறிக்கையில் 60 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது. பின்னர் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 507 ஆம் எண்ணோடு மூலம் மட்டுமாகப் பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு ஜடாவர்மன் சுந்தர பாண்ட்யன் (பொயு 1251-1268) ஸ்ரீரங்கநாதர் ஆலயத்துக்கு செய்வித்த தங்கத்தினாலான கைங்கர்யங்களைக் குறிப்பிடுகிறது. முதல்வரி மெய்கீர்த்தியின் துவக்கமானாலும் ஒற்றைச் சொல்லுடன நின்றுவிட்டது.

வரி 1. स्वस्तिश्री। சூழ்ந்தக…
வரி 2. जेता सुन्दरपाण्ड्यदे
வரி 3. वनृपतिर्भूपो द्वितीया
வரி 4. न्तुलामारुह्य प्रददौ
வரி 5. हिरण्य निचयं श्रीरंगि
வரி 6. णे शार्ङ्गिणे। येना
வரி 7. शेषहिरण्मयस्स भग
வரி 8. वान्हैमे विमा
வரி 9. ने वसन् भासन्म
வரி 10. ण्डलमध्यवासजनितां ल
வரி 11. क्ष्मीन्निजां पुष्यति।
வரி 12. आजौ सिंहणमुन्मद
வரி 13. स्य करिणो दत्वा परा
வரி 14. र्त्थन्ततो दृष्ट्वा राममही
வரி 15. पतेः प्रशमितक्षेमा
வரி 16. भिषंगो भुवः। वीर
வரி 17. स्सुन्दरपाण्ड्यभूपतिरसौ भूयस्तुलारो
வரி 18. हणाद्रंगेन्द्रं गिरि
வரி 19. मैन्द्रनीलमकरोद्धन्यः
வரி 20. सुवर्णाचलम्।।
வரி 21. मकुटाचयैर्विजि
வரி 22. त्य यदुकेरलचो
வரி 23. लनृपांस्तदुपहृ
வரி 24. तैर्बलाद्विरधिरू
வரி 25. ढतुलाभरितैः।
வரி 26. कनकमयं विमानमखि
வரி 27. लं शयनञ्च हरेरि
வரி 28. ह सुकृतादरादकृ
வரி 29. त सुन्दरपाण्ड्यनृपः।।
வரி 30. आरूढस्सकला वि
வரி 31. जित्य  ककुभो रं
வரி 32. गे द्वितीयान्तुला
வரி 33. मर्त्थैः केरळचो
வரி 34. ळहोय्सलकुल
வரி 35. क्षोणीभृतामाहृ
வரி 36. तैः। शय्यावेश्म भुजं
வரி 37. गराजशयनद्वारं विता
வரி 38. नम् बहिस्सालं सुन्दर
வரி 39. पाण्ड्यदेवनृपति
வரி 40. र्हैमान्निचक्रे हरेः।।

स्वस्तिश्री।

மங்களம்

जेता सुन्दरपाण्ड्यदेवनृपतिर्भूपो द्वितीयान्तुला

मारुह्य प्रददौ हिरण्यनिचयं श्रीरंगिणे शार्ङ्गिणे।

येनाशेषहिरण्मयस्स भगवान्हैमे विमाने वसन्

भासन्मण्डलमध्यवासजनितां लक्ष्मीन्निजां पुष्यति।

            வெற்றித்திருவுடைய சுந்தர பாண்ட்யன் இரண்டாம் முறையும் துலாபாரம் ஏறி ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் சார்ங்கமுடைய திருமாலுக்கு பொற்குவியலை வாரியளித்தான். அந்தப் பொற்குவியலால் இறைவன் பொன்மயமான விமானத்தில் வீற்றிருந்து ஒளிரும் மண்டலத்தின் நடுவில் திகழும் தனது திருமகளைப் புரக்கிறான்.

आजौ सिंहणमुन्मदस्य करिणो दत्वा परार्त्थन्ततो

दृष्ट्वा राममहीपतेः प्रशमितक्षेमाभिषंगो भुवः।

वीरस्सुन्दरपाण्ड्यभूपतिरसौ भूयस्तुलारोहणा

द्रंगेन्द्रं गिरिमैन्द्रनीलमकरोद्धन्यः सुवर्णाचलम्।।

       வீரனான சுந்தர பாண்ட்யன் போரில் ஸிம்ஹணனை எண்ணற்ற யானைகளைக் கொண்டும் பார்வையினால் ராம(நாத) மன்னனின் நலன்களையெல்லாம் நீக்கியும் அதில் கொணர்ந்த செல்வத்தைக் கொண்டுப் பொன்மலையாய்த் திகழ்ந்த கோயிலை இந்த்ர நீல மலையாக்கினான்.

मकुटचयैर्विजित्य यदुकेरलचोलनृपां

स्तदुपहृतैर्बलाद्विरधिरूढतुलाभरितैः।

कनकमयं विमानमखिलं शयनञ्च हरे

रिह सुकृतादरादकृत सुन्दरपाण्ड्यनृपः।।

            யது, கேரள, சோழ மன்னர்களை வென்று அவர்தம் முடியோடு அவர்தம் செல்வத்தை வலிய கவர்ந்து அதனைக் கொண்டு துலாபாரம் ஏறினான். அதனால் திருமாலின் விமானம் முழுமையும் பள்ளியறையையும் புண்யத்தின் மேல் ஆவல் கொண்டவனாய் பொன்னால் வேய்ந்தான்.

आरूढस्सकला विजित्य  ककुभो रंगे द्वितीयान्तुला

मर्त्थैः केरळचोळहोय्सलकुलक्षोणीभृतामाहृतैः।

शय्यावेश्म भुजंगराजशयनद्वारं वितानम् बहि

स्सालं सुन्दरपाण्ड्यदेवनृपतिर्हैमान्निचक्रे हरेः।।

            சுந்தர பாண்ட்ய தேவ மன்னன்   எல்லாத் திசைகளையும் வென்று கேரள, சோழ, ஹோய்ஸள மன்னர்களிடமிருந்து கவர்ந்த செல்வத்தைக் கொண்டு இரண்டாம் முறை துலாபாரம் ஏறி திருமாலின் பள்ளியறை, அரவணை மேல் பள்ளிகொண்ட அறையின் கதவு, மேற்கூரை, திருமாளிகை என அனைத்தையும் பொன்மயமாக்கினான்.

            இவ்விதம் இந்தக் கல்வெட்டு சுந்தரபாண்டியன் துலாபாரமேறி ஸ்ரீரங்கத்துக்கு வழங்கிய பொற்கொடையை விளக்குகிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *