ஏரியைப் பழுதுபார்த்த இகல்வேந்தன் கோப்பெருஞ்சிங்கன்

ஏரிகளையும் குளங்களையும் பாதுகாத்து அவற்றைப் பராமரித்து கரைகளைப் பழுதுபார்க்க வேண்டும். அப்போதுதான் நீரைச் சேகரிக்கவும் மழைக்காலங்களில் வெள்ளபாதிப்பின்றி மக்களைக் காக்கவும் முடியும். இத்தகையதோர் பழுதுபார்ப்பு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவனான கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இந்தக் கல்வெட்டு பாண்டிச்சேரியை அடுத்த த்ரிபுவனியிலுள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அமைந்துள்ளது.

இந்தக் கல்வெட்டு பதிமூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியைச் சேர்ந்த அவனி ஆளப்பிறந்தானான கோப்பெருஞ்சிங்கனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு அரசனை கர்ணாடக ஆந்த்ர மன்னர்களை வென்றமையைக் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு அரசன் த்ரிபுவனமஹாதேவி சிற்றூரிலுள்ள ஏரியின் கரையில் ஹேரம்ப கணபதிக்கு ஒரு கோயிலை எடுப்பித்து ஏரியின் கரைகளையும், மதகுகளையும் கலிங்குககளையும் பழுதுபார்த்ததைக் குறிப்பிடுகிறது. முதலிலுள்ள தமிழ்ச்செய்தியும் இந்தத் தகவலைத் தருகிறது. இந்தக் கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 12-இல் 126 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றுள்ளது.,

Line 1 ஸ்வஸ்திஸ்ரீ. சகலபுவனசக்ரவர்த்தி காடவன் அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கன்
Line 2 திரிபுவனமாதேவி ஏரிகரை பல இடங்களிலும் உடைந்து ஏரியும் துகுந்து மதகுகளும் முறிந்
Line 3 து கலிங்குகளும் அழிந்து கிடக்கையில் உடைந்த மடைகளும் அடைத்து ஏரியும் கல்லி கரையு
Line 4 ம் கற்கட்டி மதகுகளுமட்டுவித்து கலிங்குகளும் செய்தபடி ग्रामराजतटागस्य तीरे हेरम्बदन्तिनः शिला
Line 5 भिरकरोच्छालां राजा भूपालनोद्भवः। त्रिभुवनमहादेवीग्रामे तटाकमनेकतश्शिथिलिततटं राजा भूलोक
Line 6 पालनसम्भवः फणिपतिफणश्रेणिमाणिक्यदर्शमखानयत् सुविहिततटाभोगं भूयस्तमेनमकल्पयत्, राजा काटवंश
Line 7 मौक्तिकमणिर्भूलोकरक्षोद्भवो वित्तैर्निर्ज्जितचोळमध्यममही तुण्डीरदेशाहृतैः ग्रामेस्मिन् समबन्धयत् गिरित
Line 8 टास्फारैश्शिलापट्टकैः सेतुं राम इवापरो जलनिधौ कूलन्तटाकोत्तमे। खड्गे केलिविजितान्ध्रकर्णटो भूप
Line 9 तिर्धरणिपालनोत्भवः ग्रावबन्धनदृढानतल्पयद्वारिनिर्ग्गमपथान् जलाशये। प्रवर्त्तयन्नेव दिगन्तभित्तिकूलंक
Line 10 षान् कीर्त्तिनदीप्रवाहान् भूभोगजातः परिवाहबन्धं व्यधात् शिलास्तम्भशतैस्तटाके। स्वस्तिश्रीः

ஸ்வஸ்திஸ்ரீ. சகலபுவனசக்ரவர்த்தி காடவன் அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கன் திரிபுவனமாதேவி ஏரிகரை பல இடங்களிலும் உடைந்து ஏரியும் துகுந்து மதகுகளும் முறிந்து கலிங்குகளும் அழிந்து கிடக்கையில் உடைந்த மடைகளும் அடைத்து ஏரியும் கல்லி கரையும் கற்கட்டி மதகுகளுமட்டுவித்து கலிங்குகளும் செய்தபடி

பாவகை  – அனுஷ்டுப்

ग्रामराजतटागस्य तीरे हेरम्बदन्तिनः

शिलाभिरकरोच्छालां राजा भूपालनोद्भवः।

          பூபாலனுக்குத் தோன்றிய அரசன் சிற்றூர்களுக்கே அரசனைப் போன்ற சிற்றூரில் ஏரிக்கரையில் ஹேரம்ப கணபதிக்கு கற்களால் சாலையை – ஆலயத்தை எடுப்பித்தான்.

பாவகை – ஹரிணீ

त्रिभुवनमहादेवीग्रामे तटाकमनेकत

श्शिथिलिततटं राजा भूलोकपालनसम्भवः

फणिपतिफणश्रेणिमाणिक्यदर्शमखानयत्

सुविहिततटाभोगं भूयस्तमेनमकल्पयत्।।

          பூபாலனின் மகனான அரசன் த்ரிபுவனமஹாதேவி க்ராமத்தில் பலவிடங்களிலும் சிதிலமாகிக் கிடந்த கரையையுடைய ஏரியைக் கல்லி, நாகர்களின் அரசனின் தலையிலிருக்கும் மாணிக்கத்தைப் போல ஒளியுடையதாக்கி கரைகளை அட்டி மீண்டும் பொலிவுற்றதாகச் செய்தான்.

பாவகை- சார்தூலவிக்ரீடிதம்

राजा काटवंशमौक्तिकमणिर्भूलोकरक्षोद्भवो

वित्तैर्निर्ज्जितचोळमध्यममहीतुण्डीरदेशाहृतैः

ग्रामेस्मिन् समबन्धयत् गिरितटास्फारैश्शिलापट्टकैः

सेतुं राम इवापरो जलनिधौ कूलन्तटाकोत्तमे।

          காடகுலத்தின் முத்தனையோனும் உலகைக் காப்பதற்காகத் தோன்றியவனுமான மன்னன் சோழ, நடு, தொண்டை நாடுகளை வென்றமையாற் கிடைத்த செல்வத்தைக் கொண்டு இந்த க்ராமத்தில் மலையினின்று கிடைத்த விரிந்த கற்பலகைகளைக் கொண்டு கடலில் பாலத்தைக் கட்டிய ராமபிரானைப் போல ஏரியில் அணையைக் கட்டினான்.

खड्गे केलिविजितान्ध्रकर्णटो भूपतिर्धरणिपालनोत्भवः

ग्रावबन्धनदृढानकल्पयद्वारिनिर्ग्गमपथान् जलाशये।

प्रवर्त्तयन्नेव दिगन्तभित्तिकूलंकषान् कीर्त्तिनदीप्रवाहान्

भूभोगजातः परिवाहबन्धं व्यधात् शिलास्तम्भशतैस्तटाके।

          தரணிபாலனின் மகனான அரசன் தன் வாளால் ஆந்த்ரனையும் கர்ணாடனையும் வென்றவனாய் கற்களின் கட்டமைப்பினால் உறுதியாக ஏரியிலிருந்து வெளியேறும் கால்வாய்களை அமைத்தான். இவ்விதம் கற்றூண்களால் ஏரியில் கட்டியதனால் திசைகளின் எல்லைகளையே கரைகளாக உடையதாகத் தன்னுடைய புகழ்நதியை உருவாக்கி உலகில் அதன் பெருக்கைப் பெருக்கவிட்டான்.

स्वस्तिश्रीः

மங்கலம்.

     இவ்விதம் நீர்மேலாண்மையை கோப்பெருஞ்சிங்கன் மேற்கொண்ட விதம் விளங்குகிறது. இப்போதும் நிகழுமா………

Please follow and like us:

One thought on “ஏரியைப் பழுதுபார்த்த இகல்வேந்தன் கோப்பெருஞ்சிங்கன்

  1. அதுபோல்இப்போதுள்ள மகாராணிகள் மகாராசாக்களுக்கு மக்களுக்குத் தொண்டு செய்ய ஏதுநேரம்?நல்லநேரம்பார்த்து வந்த கட்டுருக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *