முதலாம் ராஜராஜனின் கர்ணாடகத்து பல்முரிக் கல்வெட்டு

இந்தக் கல்வெட்டு கர்ணாடகத்திலுள்ள பல்முரியில் அமைந்துள்ள அகஸ்த்யேச்வரர் கோயிலின் மேற்புறத்திலுள்ள கல்லில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு ஹளெ(பழைய) கன்னடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா கர்ணாடகாவின் மூன்றாம் தொகுதியில் ஸ்ரீரங்கபட்ண தாலூகா கல்வெட்டுக்களில் 140 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்aறுள்ளது.

இந்தக் கல்வெட்டு முதலாம் ராஜராஜனின் 28-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இதில் சக வர்ஷம் 934 குறிப்பிடப்பெற்றிருப்பதால் இதன் காலம் 1012 ஆகும். ஆகவே ராஜராஜனின் 29-ஆம் ஆட்சியாண்டு 1012க்குச் சமமானதென்றாகிறது. இந்தக் கல்வெட்டிலுள்ள மற்றைய தகவல்கள் இது பரிதாபி வருடத்து உத்தராயண ஸங்க்ராந்தி என்பதாகும். நமது இந்திய வானியல் குறிப்புக்களை வைத்து இதற்கான பொதுயுக நாள் 1012 ஆம் ஆண்டு டிஸம்பர் 23, செவ்வாய்க்கிழமையாகும். திரு. கீல் ஹார்ன் அவர்களும் திரு.ஸேதுராமன் அவர்களும் கோனேரி ராஜபுரக்கல்வெட்டை (624 of 1909) அடிப்படையாக்க் கொண்டு ராஜராஜன் பட்டமேறிய நாள் ஜூன் 985க்கும் ஜூலை 985க்கும் இடைப்பட்டதெனத் தீர்மானித்திருக்கின்றனர். ஆயினும் அவர்கள் இந்தக் கல்வெட்டை ஆயவில்லை. இந்தக் கல்வெட்டின் படி 1012 இலேயே ராஜராஜனின் 28 ஆம் ஆண்டு நடப்பாண்டாக இருக்கிறது. ஆகவே இந்த முடிச்சை கீல் ஹார்ன் மற்றும் ஸேதுராமனின் தகவல்களைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. இதனை கத சகவர்ஷமாகவும் கொள்ளவியலாது. காரணம் பரிதாபி என்று வருடத்தின் பெயர் கொடுக்கப்பெற்றுள்ளது. ஆகவே இந்த முடிச்சை அவிழ்க்கமுடியவில்லை. ஆகவே இந்தக் கல்வெட்டுப் படியைப் பார்த்து இதன் ஆட்சியாண்டை மீண்டும் சரிபார்க்க வேண்டும். வெளியான பாடத்தில் யாண்டு இருபத்தெண்டு என்றுள்ளது. இதில் இருபத்தேழு என்பதின் பிழையாகலாமோ வென்பதை சரிபார்க்க வேண்டும். இதில் வெளியான கல்வெட்டின் பாடத்திலும் சில பிழைகளுள்ளன. மிக முக்யமாக சகவர்ஷம் 934 என்பது முன்னுரையில் சரியாகவும் கல்வெட்டு பாடத்தில் 834 என்று பிழையாகவும் தந்துள்ளனர்.

இந்தக் கல்வெட்டு மன்னனைக் கலிராஜராஜன் என்றே குறிப்பிடுகிறது. அவன் தெற்கிலும் கிழக்கிலும் வென்றெடுத்த நாடுகளைப் பட்டியலிடுகிறது. கங்கவாடி, இரட்டவாடி, மலெநாடு ஆகியவை மேல்மலையிலுள்ள நாடுகளாம். நொளம்பவாடி, ஆந்திரம், கொங்கு, கலிங்கம் மற்றும் பாண்டிய நாடுகளும் குறிப்பிடப்பெற்றுள்ளன. அதன் பிறகு கோவிராஜராஜகேஸரி வர்மன் மற்றும் மும்முடிச் சோழன் ஆகிய பெயர்களும் தரப்பெற்றுள்ளன. அந்த மன்னவன் பஞ்சவன் மஹாராயனுக்கு வேங்கி மண்டலத்திற்கும் கங்க மண்டலத்திற்கும் தண்டமஹாநாயகனாக நியமித்ததைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதன் பிறகு பஞ்சவன் மஹாராயன் மேற்கில் படைநடத்தில் துளுவம், கொங்கணம் ஆகியவற்றோடு பல்வல நாட்டையும் வென்றமையைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் பஞ்சவம் மஹாராயனே ராஜேந்த்ர சோழனாவான் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் மஹாதண்ட நாயகனாக நியமிக்கப்பெற்றுள்ளான். மேற்கொண்டு கல்வெட்டு பலமுரியிலுள்ள மஹாதேவர்க்கு தேவப மஹாராயன் என்பான் நைவேத்யத்திற்கு அளித்தமையைக் குறிப்பிடுகிறது.

Line 1. ಶ್ರೀಗಂಗಾವನಿ ರಟ್ಟವಾಡಿ ಮಲೆನಾಡೀಳಂ ನೊಳಮ್ಬಾನ್ಧ್ರದಿಗ್
Line 2. ಭಾಗಂ ಕೊಂಗು ಕಲಿಂಗಪಾಣ್ಡ್ಯವಿಷಯಾಳು ತರ್ಕ್ಕಳಂ ಕೊಣ್ಡು ಮುನ್ತಾ
Line 3. ಗಲ್ ಕೋಣ್ ಮುದಿಲಾನ ಲೋಕನಿತುವಂ ಚೋಳ್ನಾಡ ಎನಲ್ಕಾಳ್ದು ಭೂ
Line 4. ಭಾಗೇನ್ದ್ರಂ ಕಲಿರಾಜರಾಜಚೋಳಂ ಚಕ್ರೇಶ್ವರಂ ತಾಳ್ದಿದಂ
Line 5. ಶ್ರೀಕೋವಿರಾಜರಾಜಕೇಸರಿ ವರ್ಮರಾನ ಶ್ರೀರಾಜರಾಜಂ ಅತಿಬರೆ ಶ್ರೀಪಾದಪಙ್ಕಜಭ್ರಮರ ಪಞ್ಚವಮಹಾರಾಯರ್ ಅತ್ತ ಬೇಙ್ಗಿಮಣ್ಡಲಕ್ಕಂ ಮತ್ತ ಮಙ್ಗಮಣ್ಡಲಕ್ಕಂ ಮಹಾದಣ್ಡನಾಯಕಪದವಿಯ ಪದೆದು ಪ್ರವರ್ತ್ತಿಸಿದ ಭುಜಬಲಾಟೋಪಂ ಎನ್ತನೆ
Line 6. ತುಳವಂ ಕೊಂಕಣಂ ಎಯ್ದೆ ತಾಳ್ದಿ ಮಲೆಯಂ ವೇನ್ಕೊಣ್ಡು ಚೇರಮ್ಮನನ್
Line 7. ತೆಲುಗಂ ರಟ್ಟಿಗಂ ಒತ್ತಿ ಪಾಯಸಿದನನ್ತಾಟನ್ದು ಬೆಣಗೊಳಲಾ
Line 8. ಕಿಳಿದಂ ಪಳ್ವಲದೇಶಮಂ ಮೊಗಿಸಿದಂ ಮಾರಾಯನೇನ …ತ
Line 9. ಇಲಳಿಸಲ್ಕಪ್ಪುದು ಕುಙ್ಕುವುರ್ಬ್ಬವರೆಗಂ ಚಣ್ಡರ್ಬಲಂ ಮಾರ್ಬ್ಬಲಂ
Line 10. ಶ್ರೀರಮಣೀಯನೀತಿ ಜಯಮೂರ್ತ್ತಿ ಸುಲಕ್ಷಣಲಕ್ಷಿತಾಙ್ಗನ್ ಅ
Line 11. ಬ್ಜಾರಿಕರೋಪಮಂ ಬಲಿಯಳ್ ಅನ್ದ ಬರಂ ಮುಳಿದನ್ದರಾತಿಸಂ
Line 12. ಹಾರಲಯಾಗ್ನಿಯನ್ತಕನ ಕಾಯ್ಪ್ಪುಪಮಾ … ರಗಸಿಡಿಲಂ
Line 13. ಮಾರಿಯ ಮೂರಿಯನ್ತರಿಗೆ ಮುಮ್ಮಡಿಚೋಳನ ಗನ್ಧವಾರಣಂ
Line 14. ………………………………………………………………..
Line 15. ಚೋಳನ ಗನ್ಧವಾರಣಂ | ಗಜವನಕೃತ್ಯಬ್ಬಪವು………… ಚೋಳಮಾರ್ತ್ತಣ್ಡನ ಳನ್ಮಿಣದ…
Line 16. ಯೆ ತನ್ನ ಬಲಕ್ಕನುಸಾರಿಯಾಗಿ … ರವಣಕ್ಕೀಲ್ ಪೊಕ್ಕಿಹೆ ತಣ್ಡನಿಗ… ………..
Line 17. …………. ಮಹಾಟವೀಪ್ರಸರಂ ಅನ್ನದೆ ವಾಯ್ದಳಿ ………. ಸಿಪಗಂ ಭಟಮಾರಿಯವೂರಿಗನ್ ನಿಜೋತ್ಕಟ
Line 18. ರಣರಂಗಕೋಪಸಿ ……….. ಲಲದಾರ್ದ್ದುಸಿದ್ದು ಸತ್ಯೇಟ ವಟರಾಜಿಯಂ ಬಿಡದೆ ಮದದು ಚೋಳಗಂಧವಾರಣಂ. ಶಕ ವರಿಷ 934 ನೆಯ ಪರಿಧಾವಿಸಂವತ್ಸರಕೆ ಶ್ರೀರಾಜರಾಜ … ರ್ಗ್ಗೆ ಯಾಣ್ಡು ಇರುಪತ್ತೆ
Line 19. ಣ್ಟ ತುಟಮ್ಬ ನಾನ ಪ………… ರಾಯನ ಸಙ್ಕ್ರಾನ್ತಿಯೋಳ್ ಬಳ್ಳೆಗೋಳದ ಬಲಮ್ಬುರಿತೀರ್ತ್ಥವುಂ ಮನ್ದು ಮಹಾ
Line 20. …… ವರ್ಗ್ಗೆ ದಿವಸವಳಂ ನಾಲ್ಕು ಬಳ್ಳವಕ್ಕಿಯ ಇರಡು ಪೊತ್ತಿನ ನಿವೇದ್ಯವು ನನ್ದಾದ….ದೆನ
Line 21. ದೇವಪಮಹಾರಾಯರು ……… ಬಲಮ್ಬರಿಯ ಆದೇವ………….. ಲಳಮ್ಯ ಪಡುವಣ……..
Line 22. …ಕಾಳವ……… ವಾರಣಾಸಿಯನ್ ಅಳಿದುಣ್…

ஸ்ரீக³ங்கா³வனி ரட்டவாடி³ மலெனாடீ³ளம்ʼ நொளம்பா³ந்த்⁴ரதி³க்³ பா⁴க³ம்ʼ கொங்கு³ கலிங்க³பாண்ட்³யவிஷயாளு தர்க்களம்ʼ கொண்டு³ முந்தா க³ல் கோண் முதி³லான லோகனிதுவம்ʼ சோள்னாட³ எனல்காள்து³ பூ⁴ பா⁴கே³ந்த்³ரம்ʼ கலிராஜராஜசோளம்ʼ சக்ரேஸ்²வரம்ʼ தாள்தி³த³ம்ʼ ஸ்ரீகோவிராஜராஜகேஸரி வர்மரான ஸ்ரீராஜராஜம்ʼ அதிப³ரெ ஸ்ரீபாத³பங்கஜப்⁴ரமர பஞ்சவமஹாராயர் அத்த பே³ங்கி³மண்ட³லக்கம்ʼ மத்த மங்க³மண்ட³லக்கம்ʼ மஹாத³ண்ட³னாயகபத³விய பதெ³து³ ப்ரவர்த்திஸித³ பு⁴ஜப³லாடோபம்ʼ எந்தனெ துளவம்ʼ கொங்கணம்ʼ எய்தெ³ தாள்தி³ மலெயம்ʼ வேன்கொண்டு³ சேரம்மனன் தெலுக³ம்ʼ ரட்டிக³ம்ʼ ஒத்தி பாயஸித³னந்தாடந்து³ பெ³ணகொ³ளலா கிளித³ம்ʼ பள்வலதே³ஸ²மம்ʼ மொகி³ஸித³ம்ʼ மாராயனேன …த இலளிஸல்கப்புது³ குங்குவுர்ப்³ப³வரெக³ம்ʼ சண்ட³ர்ப³லம்ʼ மார்ப்³ப³லம்ʼ ஸ்ரீரமணீயனீதி ஜயமூர்த்தி ஸுலக்ஷணலக்ஷிதாங்க³ன் அப்³ஜாரிகரோபமம்ʼ ப³லியள் அந்த³ ப³ரம்ʼ முளித³ந்த³ராதிஸம்ʼ ஹாரலயாக்³னியந்தகன காய்ப்புபமா … ரக³ஸிடி³லம்ʼ மாரிய மூரியந்தரிகெ³ மும்மடி³சோளன க³ந்த⁴வாரணம்ʼ ………………………………………. சோளன க³ந்த⁴வாரணம்ʼ |  க³ஜவனக்ருʼத்யப்³ப³பவு………… சோளமார்த்தண்ட³ன ளன்மிணத³… யெ தன்ன ப³லக்கனுஸாரியாகி³ … ரவணக்கீல் பொக்கிஹெ தண்ட³னிக³… ……….. …………. மஹாடவீப்ரஸரம்ʼ அன்னதெ³ வாய்த³ளி ………. ஸிபக³ம்ʼ ப⁴டமாரியவூரிக³ன் நிஜோத்கட ரணரங்க³கோபஸி ……….. லலதா³ர்த்³து³ஸித்³து³ ஸத்யேட வடராஜியம்ʼ பி³ட³தெ³ மத³து³ சோளக³ந்த⁴வாரணம்ʼ. ஸ²க வரிஷ 934 நெய பரிதா⁴விஸம்ʼவத்ஸரகெ ஸ்ரீராஜராஜ … ர்க்³கெ³ யாண்டு³ இருபத்தெண்ட துடம்ப³ நான ப………… ராயன ஸங்க்ராந்தியோள் ப³ள்ளெகோ³ளத³ ப³லம்பு³ரிதீர்த்த²வும்ʼ மந்து³ மஹா …… வர்க்³கெ³ தி³வஸவளம்ʼ நால்கு ப³ள்ளவக்கிய இரடு³ பொத்தின நிவேத்³யவு நந்தா³த³….தெ³ன தே³வபமஹாராயரு ……… ப³லம்ப³ரிய ஆதே³வ………….. லளம்ய படு³வண…….. …காளவ……… வாரணாஸியன் அளிது³ண்…

கலிராஜராஜசோழன் (கலியில் குபேரன்) கங்கவாடி, இரட்டவாடி, மலெநாடு, ஈழம், நொளம்பவாடி, ஆந்திரம், ஆகிய திசைப்பகுதிகளை வென்று கொங்க, கலிங்க, பாண்டிய நாடுகளைச் சேர்த்து, பூமியில் இந்திரனாக சக்ரவர்த்தியாகத் திகழ்கின்ற போது

ஸ்ரீ கோவிராஜராஜகேஸரிவர்மரான ஸ்ரீராஜராஜனின் திருவடித்தாமரையில் வண்டானவனான பஞ்சவன் மஹாராயனுக்கு வேங்கி மண்டலம் மற்றும் கங்க மண்டலத்திற்கு தண்டமஹாநாயகனாக நியமித்தான். இதன் பிறகு அவனது தோள்வலியைக் கொண்டு துளவம், கொங்காணம் மற்றும் மலயம் ஆகிய நாடுகளை வென்று சேரனையும் தெலுங்கனையும் ரட்டிகனையும் தோற்கடித்து பள்வல தேசத்தையும் வென்றனன். இவற்றைத் தனது வலியைக் கொண்டும் படைவலியைக் கொண்டும் வென்றனன். அவன் அழகிய நீதியுடையவன், வெற்றியின் வடிவானவன். எல்லா இலக்கணங்களும் நிறைந்த அங்கங்களையுடையவன். சந்திரனின் கதிர்களையொத்தவன். எதிரிகளை அழிக்கும்போது ஊழித்தீயையும் கூற்றுவனையும் ஒத்தவன். அவன் மும்முடிச்சோழனின் கந்தகஜம் (ஒருவகைப் பெருயானை). சோழமார்த்தண்டனின் தன் வலிமைக்கொத்த….  கந்தயானை..

          சகவர்ஷம் 934 இல் பரிதாபி ஆண்டில் ஸ்ரீராஜராஜனின் இருபத்தெட்டாவது ஆட்சியாண்டில் (உத்த)ராயண ஸங்க்ராந்தியில் பலம்புரி தீர்த்தத்தின் மஹாதேவர்க்கு எல்லா நாளும் தூய நைவேத்யம் இருவேளையும் அளிக்க தேவப மஹாராயர் அளித்தார். இதற்கு தீங்கு நினைத்தார் காசியை அழித்த பாவத்தில் படுவர்.

     இதே வருடத்தில்தான் ராஜேந்த்ரன் இளவரசனாக அறிவிக்கப்பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

One thought on “முதலாம் ராஜராஜனின் கர்ணாடகத்து பல்முரிக் கல்வெட்டு

  1. எவ்வளவு தெளிவான ஆய்வு!நுண்ணிய பார்வை!ஆழ்ந்த அறிவு!தொண்டு தொடர்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *