இந்தக் கல்வெட்டு கர்ணாடக மாநிலத்தின் ஹூப்ளி அருகிலுள்ள மாலம்பி என்னும் சிற்றூரில் உள்ள ஒரு கல்லிலிருந்து கண்டறியப்பெற்றது. இந்தக் கல்வெட்டு ஹளெ கன்னடத்தில் அமைந்தது. இது முதலாம் ராஜராஜசோழனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு மனீஜா என்பானுக்கு அந்தப் பகுதியைக் க்ஷத்ரிய சிகாமணி கொங்காள்வான் என்னும் பட்டப்பெயரளித்து அரசையும் அளிக்குமாறு ராஜராஜனின் ஆணைப்படி பஞ்சவன் மாராயன் அளித்த செய்தி இடம்பெற்றுள்ளது. பஞ்சவன் மாராயன் ராஜேந்த்ர சோழனே என்பது குறிப்பிடத்தக்கது. ஈண்டு ராஜராஜசோழன் சோழகுலமாகிய கற்பகமரத்தின் தண்டானவன் என்றும் சோழர்குலமாகிய ஆகாயத்தின் கதிரவன் என்றும் புகழப்பெற்றிருக்கிறான். அவன் மக்களின் அனைத்து பாவங்களையும் போக்குவதில் வல்லவனெனவும் கவேரனின் மகளாகிய காவேரிக்குச் சிறந்த நண்பனெனவும் குறிப்பிடப்பெற்றுள்ளான். அவன் போரில் மனீஜா காட்டிய வீரத்தைப் பாராட்டி கருணையினால் அந்தப்பகுதியை அளித்திருக்கிறான். இதற்கு காவுண்ட ராஜ்யம்மன வம்சத்தைச் சேர்ந்தோர் ஸாக்ஷியாகக் கூறப்பெற்றிருக்கின்றனர்.
இந்தக் கல்வெட்டின் காலத்தை பொயு 1004 என்று போர் நிகழ்ந்த காலத்தை வைத்துக் கணித்துள்ளனர். இந்தப் போர் பனஸோகெ என்னுமிடத்தில் நிகழ்ந்தது. இதை சங்காள்வார் என்போர் ஆண்டு வந்தனர். இவர்கள் பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றியவர்கள். இவர்கள் மீண்டும் சோழர்களின் இப்பகுதியாட்சி வீழ்ந்த பின்னர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தம்முடைய ஆட்சியை மீட்டெடுத்தனர். இவர்களின் இருப்பு 17 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. சோழர்களால் பட்டம் சூட்டப்பெற்ற கொங்காள்வார்கள் 150 ஆண்டுகள் ராஜேந்த சோழ கொங்காள்வார், ராஜாதிராஜகொங்காள்வார் என்று சோழர்களின் பெயர்களைச் சூடி ஆண்டு வந்தனர். அவர்கள் ஸூர்ய வம்சத்தைச் சேர்ந்தோர் எனவும் உறையூரை ஆண்டவர்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர்.
இந்தக் கல்வெட்டு கூர்க் கல்வெட்டுக்கள் தொகுதி ஒன்றில் 46 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றது.
Line 1. | ಸ್ವಸ್ತಿ ಸೂರ್ಯ್ಯಾನ್ವಯ ಸುರತರುಸ್ತಂಭಾಯಮಾನ ಚೋ |
Line 2. | ಳಕುಲಗಗನ ಗಭಸ್ತಿಮಾಲಿ ಸಕಲಜನದುರಿತಹರಣ ನಿ |
Line 3. | ಪುಣ ಕವೇರಕನ್ಯಕಾ ಸಖೀಯಮಾನ ಚೋಳ ಮಹಾಮಹೀ |
Line 4. | ಪತಿ ಶ್ರೀಮನ್ ರಾಜಕೇಸರಿವರ್ಮ್ಮ ಪೆರ್ಮ್ಮಾನಡಿಗಳ್ ಜಂಗೇ |
Line 5. | ಪನಸೋಗಯೆ ಕಾಲೇಗದಲ್ ಒಟ್ಟಿ ಕೆಯ್ದಂ ನೆಱಿದಿಕ್ಕು |
Line 6. | ಬರೇನೆನ್ದು ಆತನನ್ ಡಹಿದರ್ ಸ್ಸತ್ತಾರ್ ಎನ್ದು ಪಿರಿದುಂ ಕಾರು |
Line 7. | ಣ್ಯದಿಂದ ಪಟ್ಟವ ಕಟ್ಟಿ ನಾದ ಕುಡುಗ ಎಂದು ಪಞ್ಚವನ್ |
Line 8. | ಮಾರಾಯರ್ಗ್ಗಟ್ಟಲ್ ಆತಂ ಕ್ಷತ್ರಿಯಶಿಖಾಮಣಿ |
Line 9. | ಕೌಙ್ಗಾಳ್ವಾನ್ ಎನ್ದು ಪಟ್ಟವಂ ಕಟ್ಟಿ ಮಾಲವ್ವಿಯನತ್ತರ್ |
Line 10. | ಇದರ್ಕ್ಕೆ ಗಾವುಣ್ಡ ರಾಚ್ಚಮ್ಮನ ವಂಶಮೇ ಸಾಕ್ಷಿ ಕಣ್ಣವಂಗಲ |
Line 11. | ದ ಆದಿತ್ಯ ಗಾವುಣ್ಡನುಂ ಗಳನಿಯ ನನ್ನಿಯಮೇರುಯುಂ |
Line 12. | ಕೆಳನೆ……….. ಚ ಗಾವುಣ್ಡನುಂ ನಲ್ಲೂರ್ ಎಱೆಯಂಗಗಾವುಣ್ಡ |
Line 13. | ….ಳ್ಳೂರ್ ನಾಡೆ ರೆಳ್ನಾಡೆ ಪೊಱಗೆನ್ದು ನುಡಿಯಲ್ ಕಾ……… |
ಸ್ವಸ್ತಿ ಸೂರ್ಯ್ಯಾನ್ವಯ ಸುರತರುಸ್ತಂಭಾಯಮಾನ ಚೋಳಕುಲಗಗನ ಗಭಸ್ತಿಮಾಲಿ ಸಕಲಜನದುರಿತಹರಣ ನಿಪುಣ ಕವೇರಕನ್ಯಕಾ ಸಖೀಯಮಾನ ಚೋಳ ಮಹಾಮಹೀಪತಿ ಶ್ರೀಮನ್ ರಾಜಕೇಸರಿವರ್ಮ್ಮ ಪೆರ್ಮ್ಮಾನಡಿಗಳ್ ಜಂಗೇ ಪನಸೋಗಯೆ ಕಾಲೇಗದಲ್ ಒಟ್ಟಿ ಕೆಯ್ದಂ ನೆಱಿದಿಕ್ಕು ಬರೇನೆನ್ದು ಆತನನ್ ಡಹಿದರ್ ಸ್ಸತ್ತಾರ್ ಎನ್ದು ಪಿರಿದುಂ ಕಾರು ಣ್ಯದಿಂದ ಪಟ್ಟವ ಕಟ್ಟಿ ನಾದ ಕುಡುಗ ಎಂದು ಪಞ್ಚವನ್ ಮಾರಾಯರ್ಗ್ಗಟ್ಟಲ್ ಆತಂ ಕ್ಷತ್ರಿಯಶಿಖಾಮಣಿ ಕೌಙ್ಗಾಳ್ವಾನ್ ಎನ್ದು ಪಟ್ಟವಂ ಕಟ್ಟಿ ಮಾಲವ್ವಿಯನತ್ತರ್ ಇದರ್ಕ್ಕೆ ಗಾವುಣ್ಡ ರಾಚ್ಚಮ್ಮನ ವಂಶಮೇ ಸಾಕ್ಷಿ ಕಣ್ಣವಂಗಲದ ಆದಿತ್ಯ ಗಾವುಣ್ಡನುಂ ಗಳನಿಯ ನನ್ನಿಯಮೇರುಯುಂ ಕೆಳನೆ……….. ಚ ಗಾವುಣ್ಡನುಂ ನಲ್ಲೂರ್ ಎಱೆಯಂಗಗಾವುಣ್ಡ ….ಳ್ಳೂರ್ ನಾಡೆ ರೆಳ್ನಾಡೆ ಪೊಱಗೆನ್ದು ನುಡಿಯಲ್ ಕಾ………
மங்கலம். ஸூர்ய வம்சமாகிய கற்பக மரத்திற்கு தண்டானவனும் சோழர்குலமாகிய ஆகாயத்திற்கு கதிரவனானவனும் எல்லா மக்களின் பாவங்களைப் போக்குவதில் தேர்ந்தவனும் கவேரனின் மகளான காவேரியின் நண்பனும் சோழ சக்ரவர்த்தியுமான ஸ்ரீமான் ராஜகேஸரிவர்ம பெருமானடிகள் பனஸோகையில் நிகழ்ந்த போரில் எதிரிகளை ஓட்டி இறுதியில் வீழ்த்தும்வரையில் இருந்த அவனுக்கு கருணையினால் பட்டமும் கட்டி பகுதியும் கொடுக்கச்சொல்லி பஞ்சவன் மாராயனுக்குச் சேதி வர, அவனும் க்ஷத்ரியசிகாமணி கொங்காள்வான் என்ற பட்டமும் கட்டி மாலவ்வியென்னும் இடத்தையும் கொடுத்தான். இதற்கு காவுண்டராஜ்ஜம்மன வம்சத்தைச் சேர்ந்தவர்களே ஸாக்ஷி. கண்டவங்கலத்து ஆதித்ய காவுண்டன், களனி நன்னிய மேரு, கெளன….. காவுண்டன் நல்லூர் எறியெங்க காவுண்டன்,,, ள்ளூர்.
மனீஜா என்னும் அரசனின் பெயர் இந்தக் கல்வெட்டில் கிடையாவிடினும் மற்றைய கல்வெட்டுக்களில் கிடைத்துள்ளது. பெருமானடிகள் என்னும் பெயர் கங்கரை வென்றதால் சூடியது போலும். கவேரகன்யகா ஸகீயமானன் என்பது பொன்னியின் செல்வன் என்னும் பெயர்தானே…………..
காவுண்டராசம்மனர்கள் கவுண்டர்களோ? பட்டம் கட்டி முடிசூடியோரின் வம்சத்தினர் இன்னும் அங்கு இருப்பார்கள் அல்லவா? தம்மைக்கன்னடர்களாக உணர்வர்!