ராஜேந்த்ர சோழனின் அமைச்சரின் பெயர்

காஞ்சியை அடுத்தமைந்த ஊரின் பெயர் காவாந்தண்டலம். இந்த ஊரில் அமைந்துள்ள இரண்டு கோயில்களின் கல்வெட்டுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றுள் லக்ஷ்மீநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள கம்பவர்மனின் கல்வெட்டு அவனுடைய 14-ஆம் ஆட்சியாண்டில் மானஸர்ப்பன் என்பான் மானஸர்ப்ப விஷ்ணுக்ருஹம் என்ற பெயரில் எடுப்பித்ததைக் குறிப்பிடுகிறது. மானஸர்ப்பனின் கல்வெட்டும் கோயிலை எடுப்பித்து நாராயணமுனி என்பாருக்கு நிலத்தைத் தானமாக வழங்கியதையும் குறிப்பிடுகிறது. இதில் அமைந்த ராஜேந்த்ர சோழனின் மற்றொரு கல்வெட்டு இன்றியமையாதது. இந்தக் கல்வெட்டு தமிழிலும் வடமொழியிலும் அமைந்தது. இந்தக் கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 7 இல் 423-ஆம் எண்ணோடு பதிப்பிக்கப் பெற்றது. தமிழகத் தொல்லியல் துறையும் காஞ்சிபுர மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 4-இல் மீண்டும் பதிப்பித்தது. ஆயினும் வடமொழிப்பகுதியை எவரும் ஊன்றிப்பார்க்காததால் இதிலுள்ள முக்கிய அமைச்சரின் பெயர் விடுபட்டு போய்விட்டது.

இந்தக் கல்வெட்டு வைக்கூருடையான் வல்லாளகண்டன் பிச்சன் என்பான் ராஜேந்த்ரசோழேச்வரம் என்னும் பெயரில் கோயில் எடுப்பித்ததைக் குறிப்பிடுகிறது. இவ்வூரில் சோழேச்வரம் என்னும் பெயரில் கோயில் இருந்தாலும் அதில் ராஜேந்த்ரனின் கல்வெட்டில்லை. இந்த திருமால் கோட்டத்தில்தான் அதற்கான கல்வெட்டு இடம் பெற்றுள்ளது. இது அங்கிருந்து இங்கே பெயர்த்து அமைக்கப்பட்டதா அல்லது அதற்கான செய்தியை இங்கே பதிவு செய்தனரா என்பது தெரியவில்லை. இந்தக் கல்வெட்டின் பொருளைப் பார்ப்போம்.

 

 

வரி 1 स्वस्तिश्री।। लक्ष्मीर्यावन्मुरारौ विहरति विकसत्पत(द्म)शुभ्राग्रहस्ता यावज्ज्योतींषि चन्द्रद्युमणिविरचितान्नयुच्च…. (।) यावत्प्रध्यादिभावा निजगुणसहिता न स्युरन्योन्ययोनौ तावद्राजेन्द्रचोळेश्वरकृतनिलयो धूर्ज्जटिः पातु युष्मान्(।।)
வரி 2 आकाशादापतन्तीं सुरसरिदमलां पूरिताशाञ्जलौघैरात्मीयोत्तुङ्गवीचिस्फुरितमकरनक्रोल्लसत्काञ्चनाब्जा(म्।) ञ्चूडा……. कवेण्या हिमलवसद्रि(दृ)शीं यो बभारातितन्व्या स स्याद्राजेन्द्रचोळेश्वरभवनरुचिश्शंकरो वो विभूत्यै(।।2) उत्तुङ्गभूपमकुट
வரி 3 स्फुरदंशुरत्नज्वालावलीढकपिशांघ्रिसरोजयुग्मः(।) राजेन्द्रचोळनृपतिश्शुभराशिभूतः पायादशेषभुवनानि चिरन्तनश्रीः(।।3) श्रीमद्राजेन्द्रचोळेश्वरमवनितले पिच्चिनामा विधाय ग्रामे वैकूरधीशो भवनममलधीः …. स्थण्डिलाख्ये(।) शम्भोः कैलासतु
வரி 4 ल्यं सकलविभवयुक् स्थानमाचन्द्रतारं कीर्तिं श्रद्धामवाप्नोदधिगतविभवश्चोळराजस्य मन्त्री(।।4))

 

பொருள்

 

स्वस्तिश्री।।

ஸ்வஸ்திஶ்ரீ॥

மங்களத்திரு உண்டாகட்டும்.

 

लक्ष्मीर्यावन्मुरारौ विहरति विकसत्पत(द्म)शुभ्राग्रहस्ता

यावज्ज्योतींषि चन्द्रद्युमणिविरचितान्नयुच्च…. (।)

यावत्प्रध्यादिभावा निजगुणसहिता न स्युरन्योन्ययोनौ

तावद्राजेन्द्रचोळेश्वरकृतनिलयो धूर्ज्जटिः पातु युष्मान्(।।)

லக்ஷ்மீர்யாவன்முராரௌ விஹரதி விகஸத்பத(த்³ம)ஶுப்⁴ராக்³ரஹஸ்தா

யாவஜ்ஜ்யோதீம்ʼஷி சந்த்³ரத்³யுமணிவிரசிதான்னயுச்ச……………………. (।)

யாவத்ப்ரத்யாதி³பா⁴வா நிஜகு³ணஸஹிதா ந ஸ்யுரன்யோன்யயோனௌ

தாவத்³ராஜேந்த்³ரசோளேஶ்வரக்ருʼதனிலயோ தூ⁴ர்ஜ்ஜடி꞉ பாது யுஷ்மான்(॥)

எதுவரையில் திருமகள் திகழும் தாமரைகளையுடைய கரங்களோடு திருமாலிடத்தில் உலவுவாளோ, எதுவரையில் நிலவு, கதிர் ஆகிய ஒளிகள்….(ஒளிருமோ) எதுவரையில் எதிரெதிரான பொருட்கள் தங்கள் குணங்களோடு ஒன்றுக்கொன்று தோற்றமாக அமையாவோ அதுவரையில் ராஜேந்த்ர சோளேச்வரத்தைத் தன் வாழிடமாகக் கொண்ட சடையுடைய பெருமான் உங்களைக் காக்கட்டும்.

 

आकाशादापतन्तीं सुरसरिदमलां पूरिताशाञ्जलौघै

रात्मीयोत्तुङ्गवीचिस्फुरितमकरनक्रोल्लसत्काञ्चनाब्जा(म्।)

ञ्चूडा……. कवेण्या हिमलवसद्रि(दृ)शीं यो बभारातितन्व्या

स स्याद्राजेन्द्रचोळेश्वरभवनरुचिश्शंकरो वो विभूत्यै(।।2)

ஆகாஶாதா³பதந்தீம்ʼ ஸுரஸரித³மலாம்ʼ பூரிதாஶாஞ்ஜலௌகை⁴

ராத்மீயோத்துங்க³வீசிஸ்பு²ரிதமகரனக்ரோல்லஸத்காஞ்சனாப்³ஜா(ம்।)

ஞ்சூடா³॥॥॥। கவேண்யா ஹிமலவஸத்³ரி(த்³ருʼ)ஶீம்ʼ யோ ப³பா⁴ராதிதன்வ்யா

ஸ ஸ்யாத்³ராஜேந்த்³ரசோளேஶ்வரப⁴வனருசிஶ்ஶங்கரோ வோ விபூ⁴த்யை(॥2)

ஆகாயத்திலிருந்து விழுபவளும் தேவநதியும் தூயவளும் திசைகளையெல்லாம் நீரால் நிரப்பியவளும் தன்னுடைய உயர்ந்த அலைகளில் திகழும் பெருமீன் முதலை ஆகியவற்றோடு தங்கத் தாமரைகளையும் சுமந்தவளுமாகிய கங்கையைத் தனது சடையில் ஒரு சிறு கற்றையில் பனித்துளி போன்று தாங்கியவரும் ராஜேந்த்ரசோளேச்வரமாகிய இருப்பிடத்தில் விருப்பம் கொண்டவருமான சிவபெருமான் உங்களுக்கு செல்வத்தை வழங்கட்டும்.

 

उत्तुङ्गभूपमकुटस्फुरदंशुरत्नज्वालावलीढकपिशांघ्रिसरोजयुग्मः(।)

राजेन्द्रचोळनृपतिश्शुभराशिभूतः पायादशेषभुवनानि चिरन्तनश्रीः(।।3)

உத்துங்க³பூ⁴பமகுடஸ்பு²ரத³ம்ʼஶுரத்னஜ்வாலாவலீட⁴கபிஶாங்க்⁴ரிஸரோஜயுக்³ம꞉(।)

ராஜேந்த்³ரசோளன்ருʼபதிஶ்ஶுப⁴ராஶிபூ⁴த꞉ பாயாத³ஶேஷபு⁴வனானி சிரந்தனஶ்ரீ꞉(॥3)

உயர்ந்த அரச மகுடங்களில் ஒளிரும் கதிர்களையுடைய இரத்தினங்களின் ஒளியினால் நிரப்பப்பெற்று பழுப்பு நிறமடைந்த அடித்தாமரையை உடையவனும் நல்லவற்றின் தொகுதியானவனும் நிலைத்த திருவுடையவனுமான ராஜேந்த்ர சோழன் எல்லா உலகையும் காக்கட்டும்.

 

श्रीमद्राजेन्द्रचोळेश्वरमवनितले पिच्चिनामा विधाय

ग्रामे वैकूरधीशो भवनममलधीः …. स्थण्डिलाख्ये(।)

शम्भोः कैलासतुल्यं सकलविभवयुक् स्थानमाचन्द्रतारं

कीर्तिं श्रद्धामवाप्नोदधिगतविभवश्चोळराजस्य मन्त्री(।।4))

ஶ்ரீமத்³ராஜேந்த்³ரசோளேஶ்வரமவனிதலே பிச்சினாமா விதா⁴ய

க்³ராமே வைகூரதீ⁴ஶோ ப⁴வனமமலதீ⁴꞉ ॥॥ ஸ்த²ண்டி³லாக்²யே(।)

ஶம்போ⁴꞉ கைலாஸதுல்யம்ʼ ஸகலவிப⁴வயுக் ஸ்தா²னமாசந்த்³ரதாரம்ʼ

கீர்திம்ʼ ஶ்ரத்³தா⁴மவாப்னோத³தி⁴க³தவிப⁴வஶ்சோளராஜஸ்ய மந்த்ரீ(॥4))

பிச்சி என்பான் திருவுடைய கைலையையொத்த்தும் எல்லாச் செழிப்பையுமுடையதுமான ராஜேந்த்ர சோளேச்வரத்தைப் புவியில் …ஸ்தண்டிலம் என்னும் சிற்றூரில் எடுப்பித்தான். அவன் வைக்கூருடையான். கதிரும் நிலவுமுள்ள வரை புகழையும் பக்தியையம் அடைந்தான். எல்லா செழுமையையுமுடையான். சோழவரசனின் அமைச்சன். (காவாந்தண்டலத்தை ஸ்தண்டிலம் என்று வடமொழியில் ஆக்கியிருக்கிறார்கள். முதற்பகுதி சிதைந்ததால் சரியாகத் தெரியவில்லை)

 

ஆக வல்லாளகண்டன் பிச்சன் என்பான் சோழமன்னனின் மந்த்ரீ என்று வடமொழிப்பகுதி குறிப்பிடுவதை எவரும் ஊன்றிப் பாராததால் இந்தக் குறிப்பை எவரும் தரவில்லை. நாடுவகைசெய்யும் என்று தமிழ்ப்பகுதி குறிப்பிடுவதை மட்டுமே குறிப்பிடுகின்றனர். வடமொழி அறியாமையால் விடுபட்ட குறிப்புக்களுள் இதுவும் ஒன்று.

இந்தக் கோயிலில் உள்ள பல்லவகாலத்து எச்சங்களாக அதிஷ்டானமும் தூண்களும் மட்டும  எஞ்சியுள்ளன. ஏனைய பாகங்களைப் புதுப்பித்து விட்டனர். தூணில் ஒரு பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டைப் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். அது மைய மற்றும் மாநில அரசு தொல்லியல் துறையால் குறிப்பிடப்பெறாத கல்வெட்டு. வடமொழியில் அமைந்தது. மறுபடி செல்ல நேர்ந்தால் அதனைப் படித்துப் பதிவிடுகிறேன்.

 

படங்கள் – இணையத்திலிருந்து

காவான்தண்டலம்

லக்ஷ்மீநாராயணப்பெருமாள் - மானஸர்ப்ப விஷ்ணுக்ருஹம்

லக்ஷ்மீநாராயணப்பெருமாள் – மானஸர்ப்ப விஷ்ணுக்ருஹம்

 

சோழேச்வரம்

சோழேச்வரம்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *