பிறமொழிக் கல்வெட்டுக்கள் – 1

பிறமொழிக் கல்வெட்டுக்கள் – 1   அச்யுதராயரின் காஞ்சீபுரக் கல்வெட்டு வடமொழிக் கல்வெட்டுக்களைப் போன்றி தெலுங்கு, கன்னடக் கல்வெட்டுக்களும் முதலில் மொழிபெயர்ப்போடு வெளியிடப்பட்டன. பின்னர் சிறு குறிப்புரையோடும் பின்னர் அமைந்துள்ள இடத்தை மட்டும் கொண்டும் வெளியிடப்பட்டன. அத்தகைய பொருள் கூறப்படாத கல்வெட்டுக்களின் விளக்கங்களை இங்கு காண்போம். கல்வெட்டு அமைந்துள்ள இடம் காஞ்சீபுரத்தில் அத்தியூர் எனக்கூறப்படும் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அருளாளர் கோயிலில் இரண்டாம் பிராகாரத்தின் தென்புறச்சுவற்றில் இந்தக் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது. இதன் தமிழ்ப்படி வடபுறச்சுவற்றில் இடம்பெற்றுள்ளது….

தொடர்ந்து வாசிப்பு

வடமொழிக் கல்வெட்டுக்கள் – 2

வடமொழிக் கல்வெட்டுக்கள் – 2 இரண்டாம் ஹரிஹரனின் காஞ்சீபுரக் கல்வெட்டு கல்வெட்டு அமைந்துள்ள இடம் காஞ்சீபுரத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் கொக்கின் கீழமர்ந்த கருங்குயிலாளான அன்னை காமாக்ஷியின் கோயிலில் இரண்டாம் பிராகார கோபுரச் சுவற்றில் இந்தக் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது. கல்வெட்டின் நிலை பொதுவாகவே விஜயநகர கல்வெட்டுக்கள் சோழக் கல்வெட்டுக்களைப் போலல்லாமல் ஆழம் குறைந்ததாகவே இருக்கும். இந்தக் கல்வெட்டைப் பொறுத்தவரை இதன் மீது சுண்ணாம்பு வேறு பூசப்பட்டிருப்பதால் பரமேச்வரனின் திரோதான கிருத்யத்தைப் போல இருந்தும் இல்லாமல் இருக்கிறதாய்த் தெரிகிறது….

தொடர்ந்து வாசிப்பு

வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1

வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1 பூதிவிக்ரமகேஸரியின் கொடும்பாளூர் கல்வெட்டு கல்வெட்டுக்களாகப் பதியப்பட்ட செய்திகளில் பல வடமொழிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன. சில முழுதும் வடமொழியிலேயே அமைந்திருக்கின்றன. சில கல்வெட்டுக்களின் காப்பியச் சுவை வடமொழியில் உள்ள காப்பியங்களுக்கு நிகராகத் திகழ்கிறது. இத்தகைய கல்வெட்டுகளில் முதலில் வெளியிடப் பட்டவை மொழிபெயர்ப்போடும் குறிப்புக்களோடும் வெளியிடப் பட்டன. பிறகு வெறும் குறிப்புரையோடு வெளியிடப் பட்டன. பிந்தைய தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகள் சிறு குறிப்புரையோடு மொழிபெயர்ப்புமின்றி வெளியிடப் பட்டுள்ளன. அத்தகைய கல்வெட்டுக்களில் ஒன்று கொடும்பாளூரில் உள்ள…

தொடர்ந்து வாசிப்பு

கோட்டகாரம்

கோட்டகாரம் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளின் ஆய்வு தொடங்கியபோதே அவற்றிலுள்ள கலைச்சொற்களுக்கானப் பொருளைத் தேடும் ஆய்வும் துவங்கியது. இன்றளவும் தொடரும் இந்த ஆய்வில் சிற்சில சொற்களுக்குப் பொருள் சரிவர விளங்கவில்லை. பல கல்வெட்டுக்களை ஒப்புநோக்குதன் மூலமே ஒரு கலைச்சொல்லுக்கு விளக்கம் அளிக்கமுடியும். இத்தகைய ஆவணங்கள் வெளியிட்ட காலத்தில் சில சொற்கள் வடமொழிச் சொற்களின் மருவிய வடிவங்களாகக் காணப்படுகின்றன. ஆகவே தமிழரசர்களால் வெளியிடப் பட்டச் சாசனங்களை மட்டுமின்றி மற்றைய அரசர்களால் வடமொழியில் வெளியிடப் பட்ட சாசனங்களையும் ஒப்பு நோக்குவதன் மூலம்…

தொடர்ந்து வாசிப்பு

சோழர்களின் சாஸன சுலோகங்கள்

காணுமிடமெங்கும் கடும்புலியின் கொடி பொறித்து கயலும் கணைவில்லும் கவினிழந்து தடுமாறக் கார்குழலாள் நிலமடந்தைக்குக் கணவனெனக் கோலோச்சியச் சோழப்பரம்பரை வரலாற்றுப்பதிவுகளிலும் தன் ஈடிணையிலாப் பெருமையை நிலைநாட்டியது. இராஜகேஸரி, பரகேஸரி என்று மாறி மாறி பெயர்சூடிய சோழ குல வேந்தர்கள் பல்வேறு தானங்களுக்காக ஆவணங்களை வெளியிட்டனர். இப்படி மாறி மாறி பெயர் சூடியதற்கு காரணம் தெளிவாகத் தெரியவில்லை. லெய்டன் செப்பேட்டின் எட்டாம் செய்யுளும், திருவாலங்காட்டுச் செப்பேட்டின் 32 ஆம் செய்யுளும் இராஜகேஸரி, பரகேஸரி என்று இரு புராணகால அரசர்களைக் குறிப்பிட்டு…

தொடர்ந்து வாசிப்பு

தாமிர சாஸனம்

தாமிர சாஸனம் பண்டைய நாட்களில் தானமாக வெளியிடப்படும் அரசாவணங்களை வெளியிடுவதற்கு பெரும்பாலும் செப்பேடுகளும் கல்வெட்டுக்களுமே பயன்பட்டன. எல்லோரும் அறியும்படி ஆவணமாக்கப் பட்டவை கல்வெட்டுக்களாகும். தானம் பெறுபவரின் ஆவணமாகச் செப்பேட்டுகள் வெளியிடப்பட்டன. இத்தகைய செப்பேடுகள் பண்டைய காலம் தொட்டே வழங்கப்பட்டு வந்துள்ளன. இவற்றை வெளியிடும் விதம் பற்றி பழைய தர்மசாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. தர்மசாஸ்திரங்கள் ஸ்ம்ருதி என்று வடமொழியில் வழங்கப்படுகின்றன. மனு முதலியவர்களால் ஸ்ம்ருதிகள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை எழுதியவர்களின் பெயரிலேயே அந்த ஸ்ம்ருதி நூல்கள் வழங்கப்படும். அத்தகைய ஸ்ம்ருதி…

தொடர்ந்து வாசிப்பு

திருவிந்தளூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி

செப்பேடுகள் பண்டைய காலத்தில் எழுதப்பயன்படுத்தப் பெற்ற பொருட்களில் உலோகத்திற்குச் சிறப்பான இடமுண்டு. உலோகங்களிலும் செம்பின் பயன்பாடு மிக அதிகம். செம்பில் எழுதப்பெற்ற ஆவணங்கள் செப்பேடுகள் என வழங்கப்பெறுகின்றன. யாஜ்ஞவல்கிய ஸ்ம்ருதி மற்றும் விஷ்ணுபுராணம் ஆகிய வடமொழிநூல்கள் செப்பேடுகளில் எழுதி அரச இலச்சினையைப் பொறிக்கும் முறையைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு கிடைத்த செப்பேடுகளில் மிகப்பழமையான செப்பேடு சோகௌரா என்னுமிடத்தில் கிடைத்த செப்பேடாகும். பிராகிருத மொழியில் இடம்பெற்ற இந்தச் செப்பேடு அசோகனுடயை காலத்திற்கு முந்தையதாகும் என்பது பல ஆய்வறிஞர்களின் கருத்து. கிட்டத்தட்ட…

தொடர்ந்து வாசிப்பு