சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – காகிதம்

paper_manus1

பாரதத்தில் பயன்படுத்தப்பெற்ற சுவடிகளுக்கான மூன்றாவது முக்கியமான எழுதுபடு பொருள் காகிதமாகும். பொதுவாகக் காகிதத்தைச் சீனத்தைச் சேர்ந்த சாய் லுன் என்பவர் பொயு 105 இல் கண்டறிந்ததாகவும் அதன் பிறகு முகலாய அரசர்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப் பெற்றதாகவும் கருத்துண்டு. ஆனால் காகிதம் இந்தியாவிலேயே கண்டு பிடிக்கப்பெற்றதென்று கருதவும் சில சான்றுகள் உள்ளன. அலெக்ஸாண்டரின் தளபதியான நியர்கோஸ் தனது குறிப்பில் இந்தியர்கள் எழுதுவதற்காக பஞ்சினாலான காகிதத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளான். இந்தக் குறிப்பு சரியாயின் சீனர்களுக்கு முன்னமேயே இந்தியர்கள் காகிதத்தைக்…

தொடர்ந்து வாசிப்பு

பண்டைய பாரதத்தின் எழுத்தியல் – வேத வேதாங்க சான்றுகள்

              பண்டைய வரலாற்றை ஆராயும்போது அதற்கான இருமுகங்கள் தெரியவரும். அதன் ஒருமுகம் எல்லா சான்றுகளையும் ஆராய்ந்து அவற்றை வரிசைசெய்து அவற்றின் மூலம் உண்மையை வெளிக்கொணர்வதாகும். மற்றொரு முகம் கர்ண பரம்பரையாகவும் இலக்கிய ரீதியாகவும் உள்ள தரவுகளைக் கொண்டுவரும் நம்பிக்கையாகும். இவ்விரண்டிலிருந்தும் ஸமதொலைவிலிருந்து ஆய்வை மேற்கொள்வது ஆய்வாளர்களின் கடமையாகும்.  அவ்விதமான ஆய்வில் தர்க்கரீதியில் சரியான பழஞ்செய்திகளையும் ஆய்ந்து பிழிவான உண்மையை ஏற்பது நிகழும். இவ்வாறாக இலக்கிய தரவுகளும் வரலாற்றைப் புனரமைப்பதில்…

தொடர்ந்து வாசிப்பு