கோலாரில் ராஜேந்த்ரசோழன் எடுப்பித்த ஸப்தமாதா கோயில்

kolaramma-temple-at-kolar

     சோழர்படை கங்கமண்டலத்தைப் பத்தாம் நூற்றாண்டில் கைப்பற்றிய பிறகு அங்கு அழகிய கோயில்களையும் சமைத்தது. கோலாரில் உள்ள ஸப்த மாதா கோயில் ராஜேந்த்ர சோழனின் ஆணைப்படி அவனுடைய படைத்தளபதியால் எடுப்பிக்கப்பெற்றது. இது அந்த கோயிலுள்ள ஒரு கல்வெட்டால் உறுதியாகிறது. இந்தக் கல்வெட்டில் வழக்கமான மெய்கீர்த்திக்குப் பிறகு ராஜேந்த்ர சோழனின் 22ஆம்ஆட்சியாண்டில் சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டிலுள்ள வெண்ணாட்டு அமண்குடி என்னும் பெயர்கொண்ட கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலத்தைச்சேர்ந்த நராக்கண் என்னும் குடிப்பெயர் கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணன் ராமனான ராஜேந்த்ர சோழ…

தொடர்ந்து வாசிப்பு

ராஜேந்த்ர சோழனின் ஹூப்ளே செப்பேடு

001

     இந்தச் செப்பேடு கர்ணாடக மாநிலத்திலுள்ள குளத்தூர் தாலூகா அலுவலகத்தில் கண்டெடுக்கப்பெற்றன. இது சோழ பரம்பரையின் ராஜேந்த்ர சோழனைக் குறிப்பிடுகின்றது. ஆனால் இதன் எழுத்தமைதி 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அமைந்துள்ளது. ஆகவே இது ஐயப்பாட்டுக்குரியதாகக் கருதப்பெறுகிறது. ஆயினும் பண்டைய மூலச்செப்பேட்டின் பிற்கால படியாகக் கருதவும் இடமுண்டு.      இந்தச் செப்பேட்டின் செப்பிதழ்கள் 4.75 அங்குல நீளமும் 1.5 அங்குல அகலமும் உடையவை. இவற்றின் இலச்சினையில் ஒரு யானையின் உருவம் அழிந்த நிலையிலுள்ளது. இந்தச் செப்பேட்டில் ஐந்து இதழ்கள்…

தொடர்ந்து வாசிப்பு