ஸனாதன தர்மத்தில் ஸமூஹ மேம்பாட்டிற்காகப் பலவகையான சடங்குகள் கூறப்பெற்றிருக்கின்றன என்பதை நாமறிவோம். போரில் வெல்லவும் பலவகையான சடங்குகள் கூறப்பெற்றிருக்கின்றன. நம்முடைய முன்னோர்கள் இத்தகைய சடங்குகளைத் தம் வெற்றிக்காகவும் நன்மைக்காகவும் மேற்கொண்டனர். அத்தகையதோர் சடங்கு காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்க கல்வெட்டால் அறியக்கிடக்கிறது. இந்தக் கல்வெட்டு பொயு 1166 முதல் 1178 வரையாண்ட இரண்டாம் ராஜாதிராஜ சோழனின் காலத்தைச் சேர்ந்தது. அவனுடைய ஆட்சியில் இலங்கையிலிருந்து படை தமிழகத்தில் புகுந்து பல கோயில்களையும் அழித்தது. மக்களுக்கும் சொல்லொணாத் துயரை…
தொடர்ந்து வாசிப்புஇலங்கை
சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – தங்கம்

இதுவரை சுவடிகளுக்கான முக்கியமான எழுதுபடுபொருட்களான பனையோலை. பூர்ஜபத்ரம், காகிதம் மற்றும் ஸாஞ்சிபாத்தைப் பற்றிப் பார்த்தோம். இப்போது நாம் முக்கிய மற்ற பொருட்களைப் பார்ப்போம். முக்கியமற்ற பொருட்கள் இரு பிரிவுகளாக உள்ளன. உலோஹங்கள் உலோஹமற்ற பொருட்கள் உலோஹங்களில் இப்போது நாம் அரச உலோஹமான தங்கத்தைப் பயன்பாடு சுவடித்துறையில் எவ்விதம் அமைந்துள்ளது என்று காண்போம். தங்கமும் தாமரத்தைப் போல எளிதில் உருகும் தன்மையுடையது என்பதாலும் அதனையும் அடித்து ஏடுகளாக்கி எழுதவியலும். ஆயினும் அதன் அருமையையும் விலையையும் கருத்திற்கொண்டு அது…
தொடர்ந்து வாசிப்பு