தாதாபுரத்தின் கபோதபஞ்ஜரம்

kapota1

காமிகாகமம் பஞ்ஜரங்களின் வகைகளை விளக்கும்போது கீழ்க்கண்டவற்றை விளக்குகிறது. तस्यादौ सिंहसंज्ञकम् सार्धपञ्जरमन्यत्स्यात्तृतीयं पञ्जरं मतम्  १३२      निर्यूहपञ्जरं पश्चात्पञ्चमं लम्बनासिकम् सिंहश्रोत्रं तु षष्ठं स्यात्खण्डनिर्यूहकं ततः  १३३ झषपञ्जरमन्यत्स्यात्तासां लक्षणमुच्यते பஞ்ஜரங்கள் எண்வகைப்படும், அவை ஸிம்ஹ பஞ்ஜரம், ஸார்தபஞ்ஜரம், பஞ்ஜரம், நிர்வ்யூஹபஞ்ஜரம், லம்பநாஸிகம், ஸிம்ஹச்ரோத்ரம், கண்டநிர்வ்யூஹகம் மற்றும் ஜஷபஞ்ஜரம் ஆகியவையாம். இவற்றின் இலக்கணங்களை வரையறுத்த பின்னர் ஒன்பதாவதாக கபோத பஞ்ஜரம் என்னும் பஞ்ஜர வகையை வரையறுக்கிறது இந்த ஆகமம். पञ्जाराकृतिसंयुक्तं कपोतात्तु विनिर्गतम्  १५२…

தொடர்ந்து வாசிப்பு

பத்ம மாளிகை

kanchipuram

விமானத்தைச் சுற்றியமையும் பிராகாரம் போன்ற கட்டிட அமைப்பே மாளிகை(வடமொழியில் மாலிகா) அல்லது திருச்சுற்று மாளிகை என்று நூல்களில் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. காமிகாமம் மாளிகை என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது.      शालायामपि शालाङ्गा निष्क्रान्ताननशोभिता। सा शाला मालिका ज्ञेया शास्त्रेस्मिन् कामिकाह्वये।। சாலைக்கு அங்கமாக அமைந்து முற்பகுதியில் நீட்சி பெற்றமையும் அமைப்பே மாளிகை என்று காமிகத்தில் அழைக்கப் பெறுகிறது. இவ்விதம் மாளிகையின் விளக்கம் ஆகமத்தில் கிடைக்கிறது. மாளிகையை ஸபைகளில் ஒன்றாகவும் கருதலாம். மாளிகையை அதன் இடத்தைப் பொறுத்து ப்ராஸாதமாளிகை,…

தொடர்ந்து வாசிப்பு