காஞ்சி காமாக்ஷி கோயிலில் ராஜஸிம்ஹ பல்லவனின் புதிய கல்வெட்டு

4a52f40e-f872-499a-a17e-433554a10a96

      கோயில் திருப்பணி நிகழ்ந்து வரும் காஞ்சி காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் திரு. ஸ்வாமிநாத ஸ்தபதியுடன் பின்வரும் கல்வெட்டைக் கண்ணுற்றேன். பங்காரு காமாக்ஷி ஸந்நிதியின் அருகிலுள்ள படிக்கட்டில் காணப்பெறும் இந்தக் கல்வெட்டு பல்லவர் காலக் கோயிலல்லாத பிற கோயில்களில் காஞ்சியில் கிடைப்பது முதன்முறையாகும். துண்டாக அமைந்த இந்தக் கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டின் அழகிய க்ரந்தத்தில் எழுதப்பெற்றுள்ளது. இதே முறைதான் ராஜஸிம்ஹ பல்லவேச்வரமான கைலாஸநாதர் ஆலயத்திலும் காணப்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.       இதன் வரியாவது       … रा च…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் கீர்த்தி வர்மனின் பாதாமி குடைவரைக் கல்வெட்டு

BADAMI_1

இந்தக் கல்வெட்டு பாதாமியிலுள்ள குடவரையின் முன்பு காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு 25 அங்குல நீளமும் 45 அங்குல உயரமும் உடையது. எழுத்துக்கள் சிறிது சிதைவடைந்திருக்கின்றன. இந்தக் கல்வெட்டு பேராசிரியர் எக்லிங்கால் இண்டியன் ஆண்டிகுவரியின் மூன்றாந் தொகுதியில் 305 ஆம் பக்கத்தில் பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு முதலாம் கீர்த்திவர்மனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் அவனுடைய இளவலான மங்களேச்வரன் திருமாலுக்கான கோயிலை எடுப்பித்து அதற்கு மதிலையும் கட்டிய குறிப்பைத் தருகிறது. மேலும் அந்தக் கோயிலில் இறைவனின் உருவத்தை நிறுவும் தறுவாயில் அந்தணர்களுக்கு…

தொடர்ந்து வாசிப்பு

ராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு

????????????????????????????????????

     பின்வரும் கல்வெட்டு போளூர் தாலூகாவிலுள்ள தென்மாதி மங்கலம் என்னுமூரின் அருகிலுள்ள மலையின் மீது உள்ளூரில் அடுக்கங்கல் என்று வழங்கப்பெறும் ஒரு கல்லில் பொறிக்கப்பெற்றதாகக் கண்டெடுக்கப் பெற்றது. இது வடமொழியில் 10-11 ஆம் நூற்றாண்டிற்கான க்ரந்த லிபியில் அமைந்தது. இந்தக் கல்வெட்டு 1933-34 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை ஆண்டறிக்கையில் 50 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது. இதுவரை இதன் வரிகள் வெளியாகாமையால் மத்திய தொல்லியல் துறையிலிருந்து அதன் மைப்படியைப் பற்று ஈண்டு வெளியிடுகிறேன்.      இந்தக் கல்வெட்டு…

தொடர்ந்து வாசிப்பு

1. முதலாம் புலகேசியின் பாதாமி கல்வெட்டு (காலம் சக ஆண்டு 465 – பொயு 543)

pulakesi

இந்தக் கல்வெட்டு பாதாமியிலுள்ள பெத்தாரப்பா கோயிலின் பின்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 250 அடி உயரத்திலுள்ள ஒரு மலைப்பாறையின் நெருங்க முடியாத பகுதியில் அமைந்துள்ளது. கீழ்மேற்காக அமைந்துள்ள ஒரு பெரும்பாறையில் அமைந்துள்ள இந்தக் கல்வெட்டிற்குச் செல்லும் பாதையும் மிகக் குறுகலானது. இந்தக் கல்வெட்டு அந்தப் பாறையின் வடபுறத்தில் அமைந்துள்ளது.             இந்தக் கல்வெட்டை தார்வாரிலுள்ள திரு. ஆர்.எஸ்.பஞ்சமுகி அவர்கள் மிகுந்த முயற்சியோடு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் இரண்டாம் எண்ணோடு பதிப்பித்தார். இந்தக் கல்வெட்டு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த…

தொடர்ந்து வாசிப்பு

கர்ணாடகத்தில் முதலாம் பரமேச்வர பல்லவனின் வட்டெழுத்துக் கல்வெட்டு

paramesa

     பின்வரும் கல்வெட்டு கர்ணாடகத்தில் முல்பல்கல் தாலூகாவிலுள்ள பைராகூரில் உள்ள கோபால க்ருஷ்ணர் ஆலயத்தினருகேயுள்ள நடுகல்லில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு தமிழில் வட்டெழுத்துக்களில் எழுதப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டுத் துண்டாக இருந்தாலும் கோவிசைய ஈச்சுவரவர்மனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. இந்த மன்னனைப் பல்லவர் குலத்தின் முதலாம் பரமேச்வர வர்மனாக அடையாளம் காணலாம். இந்தக் கல்வெட்டு காரோனிரி வாணரசர் போர்ச்சிறையானதையும் வேறொருவர் இறந்து பட்டதையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு முழுமையாக இல்லாததால் முழுத் தகவலையும் அறியமுடியவில்லை. இந்தக் கல்வெட்டின் காலம்…

தொடர்ந்து வாசிப்பு

கொடும்பாளூர் வாழ்வான் கோவிந்தவாடிக்குக் கொடுத்த தானம்

வேறு வேறு இடங்களில் வாழ்வோர் தமதிடத்திலிருந்து வெகுதூரத்திலுள்ள கோயில்களுக்கும் தானமளித்தனர் என்பது கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. அத்தகையதொரு தானம் பின்வரும் கல்வெட்டில் ஆவணமாக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு அரக்கோணத்தை அடுத்துள்ள கோவிந்த வாடியிலுள்ள பெருமாள் கோயிலின் தென்புறச்சுவரில் காணப்பெறுகிறது. இது முதலாம் ராஜராஜனின் 3-ஆம் ஆட்சியாண்டைச் சுட்டுவதால் இதன் காலம் பொயு 988 ஆகும்.      இந்தக் கல்வெட்டு ஒரு வடமொழிச்செய்யுளையும் முடிவுறாத தமிழ்ப்பகுதியையும் கொண்டுள்ளது. வடமொழிப்பகுதி ஆதித்யன் என்பான் கோவிந்தபாடியிலுள்ள ஒரு அந்தணனுக்கு உணவளிக்க 30 தங்கக்…

தொடர்ந்து வாசிப்பு

கோலாரில் ராஜேந்த்ரசோழன் எடுப்பித்த ஸப்தமாதா கோயில்

kolaramma-temple-at-kolar

     சோழர்படை கங்கமண்டலத்தைப் பத்தாம் நூற்றாண்டில் கைப்பற்றிய பிறகு அங்கு அழகிய கோயில்களையும் சமைத்தது. கோலாரில் உள்ள ஸப்த மாதா கோயில் ராஜேந்த்ர சோழனின் ஆணைப்படி அவனுடைய படைத்தளபதியால் எடுப்பிக்கப்பெற்றது. இது அந்த கோயிலுள்ள ஒரு கல்வெட்டால் உறுதியாகிறது. இந்தக் கல்வெட்டில் வழக்கமான மெய்கீர்த்திக்குப் பிறகு ராஜேந்த்ர சோழனின் 22ஆம்ஆட்சியாண்டில் சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டிலுள்ள வெண்ணாட்டு அமண்குடி என்னும் பெயர்கொண்ட கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலத்தைச்சேர்ந்த நராக்கண் என்னும் குடிப்பெயர் கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணன் ராமனான ராஜேந்த்ர சோழ…

தொடர்ந்து வாசிப்பு

கர்ணாடகத்தில் நரஸிம்ஹ பல்லவனின் வட்டெழுத்துக் கல்வெட்டு

vatteluthu

பின்வரும் கல்வெட்டு கர்ணாடக மாநிலம் கோலாரின் அருகிலுள்ள பங்கவாடியிலுள்ள ஸோமேச்வரர் கோயிலிலுள்ள ஒரு நடுகல்லில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு கன்னடம் விரவிய தமிழ்மொழியில் வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பல்லவ குலத்தின் முதலாம் நரஸிம்ஹவர்மனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு பாணகுலத்தரசனின் பணியாளைக் குறிப்பிடுகிறது. அவன் பெயர் அழிந்திருக்கிறது. பாணமன்னனின் பெயர் கந்த வாணாதிராசர் எனத்தரப்பெற்றுள்ளது.      இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா கர்ணாடிகாவின் பத்தாந்தொகுதியில் MB 227 என்னும் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றது. வரி 1: கோவிசைய நரசிங்க…

தொடர்ந்து வாசிப்பு

ராஜஸிம்ஹ பல்லவனின் பனைமலைக் கல்வெட்டு

sea_shore1

இந்தக் கல்வெட்டு பனைமலையிலுள்ள தாளகிரீச்வரர் கோயிலின் பட்டிகையில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் க்ரந்த லிபியிலும் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் நரஸிம்ஹ வர்மனான ராஜஸிம்ஹ பல்லவனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு பல்லவ குலத்தின் முதல்வனும் த்ரோணரின் மகனுமான அச்வத்தாமனைக் குறிப்பிடுகிறது. அதன் பிறகு, பல்லவன், ஏகமல்லனான பரமேச்வர வர்மன் ஆகியோரோடு ராஜஸிம்ஹனிடம் முடிவடைகிறது. அதன் பிறகு ராஜஸிம்ஹன் ஈசனின் மீதுகொண்ட பக்தியையும் அவனது ஆட்சிச் சிறப்பையும் கூறாநிற்கிறது. Line 1: ………….. नोदपादि प्रथितभुजबलो…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் ராஜாதிராஜனின் கர்ணாடகத்து மாதவ மந்த்ரி அணைக்கல்வெட்டு.

madhav mantri

     பின்வரும் கல்வெட்டு ஒரு துண்டுக் கல்வெட்டு ஆகும். இது கர்ணாடகத்திலுள்ள பிஸ்கோட்டில் உள்ள மாதவமந்த்ரி அணைக்கட்டில் பதிக்கப்பெற்றுள்ளது. இது தமிழ் மொழியிலும் தமிழ் எழுத்திலும் அமைந்தது. இது தழைக்காட்டிலுள்ள ஒரு கோயிலிலிருந்து பெயர்க்கப்பெற்று நூறு வருடங்களுக்கு முன்பாக அணைக்கட்டு கட்டப்பெறும்போது பதிப்பிக்கப்பெற்றுள்ளது.      இந்தக் கல்வெட்டில் துவக்கப்பகுதியில்லை. இதில் இருக்கும் மெய்க்கீர்த்தித் துண்டை வைத்து இது முதலாம் ராஜாதிராஜனின் காலத்தது என்பதனை அறியமுடிகிறது. இந்தக் கல்வெட்டு தழைக்காடான ராஜராஜபுரத்திலுள்ள தேவர்க்கு கொடுத்த நிவந்தங்களைக் குறிப்பிடுகிறது. இந்தக்…

தொடர்ந்து வாசிப்பு