காஞ்சி காமகோடி பீடச்செப்பேடுகள் – 1

mutt_1

விஜயகண்ட கோபாலதேவனின் செப்பேடு      பண்டைய காலத்தில் கோயில்கள், மடங்கள், மதத்தைச் சேர்ந்தோருக்கு நிலங்களும் மற்றைய பொருட்களும் வழங்கப்பெற்றன. அத்தகைய தானங்கள் ஓலைச்சுவடி, செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆகியவற்றில் பதிவு செய்யப்பெற்றன. ஆகவே இவற்றிற்கு த்ரிபலீ சாஸனம் என்ற பெயருண்டு. அத்தகைய செப்பேடுகள் ஸ்ரீமத் ஆதிசங்கரபகவத்பாதர்களிடமிருந்து உருவாகியதாகக் கூறும் காஞ்சி காமகோடி பீடத்திலும் உள்ளன. உண்மையில் இந்த மடத்தில் சோழர் முதலியோருடையதாக 125 செப்பேடுகள் இருந்ததாக் கூறப்பெறுகிறது. கர்னல் மெக்கன்ஸி அவர்களின் மராட்டி மொழிபெயர்ப்பாளராக இருந்த திரு….

தொடர்ந்து வாசிப்பு

சோமங்கலம் ஏரி மடையடைத்த திருச்சுரக்கண்ணப்பன்

     பொதுவாக பெருமழை பொழிந்து ஏரிகள் நிரம்பிய பின்னர் மடையுடைந்து நீர்பெருகி வெள்ளமாகும். அத்தகைய ஏரிமடைகளை உடனே அடைத்தல் நலம். இப்படி அடைப்பதற்கு அரசாங்கத்தை எதிர்பாராது ஊரிலுள்ள ஊர்ப்பெருமகன்களே முன்னின்று அடைத்தால் விரைவிலும் நடக்கும். பயனும் அளிக்கும். அத்தகையதோர் நிகழ்ச்சி மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதிநாலாம் ஆட்சியாண்டில் நிகழ்ந்தேறியது. இது காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள ஸோமங்கலம் என்னுமூரில் நிகழ்ந்தது. அவ்வூரிலுள்ள ஸோமநாதேச்வரர் கோயிலிலுள்ள மண்டபத்தின் கீழைச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டு இதற்கு ஆவணமாக அமைந்துள்ளது. இவ்வூரின் மறுபெயர் பஞ்சநதி வாண…

தொடர்ந்து வாசிப்பு

பத்ம மாளிகை

kanchipuram

விமானத்தைச் சுற்றியமையும் பிராகாரம் போன்ற கட்டிட அமைப்பே மாளிகை(வடமொழியில் மாலிகா) அல்லது திருச்சுற்று மாளிகை என்று நூல்களில் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. காமிகாமம் மாளிகை என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது.      शालायामपि शालाङ्गा निष्क्रान्ताननशोभिता। सा शाला मालिका ज्ञेया शास्त्रेस्मिन् कामिकाह्वये।। சாலைக்கு அங்கமாக அமைந்து முற்பகுதியில் நீட்சி பெற்றமையும் அமைப்பே மாளிகை என்று காமிகத்தில் அழைக்கப் பெறுகிறது. இவ்விதம் மாளிகையின் விளக்கம் ஆகமத்தில் கிடைக்கிறது. மாளிகையை ஸபைகளில் ஒன்றாகவும் கருதலாம். மாளிகையை அதன் இடத்தைப் பொறுத்து ப்ராஸாதமாளிகை,…

தொடர்ந்து வாசிப்பு

கௌசிகீச்வரர் கோயில், காஞ்சிபுரம்

KAUŚIKĪŚVARA TEMPLE

கோயிலின் தற்போதைய பெயர் : கௌசிகீச்வரர், சொ(தொ)க்கீச்வரர் கல்வெட்டிலுள்ள பெயர் : தெற்கிருந்த நக்கர் கோயிலின் அமைவிடம் : நகரத்திற்கு நடுவில் காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு தென் மேற்கில்அமைந்துள்ளது. கோயிலின் காலம் : இந்தக் கோயிலில் அமைந்துள்ள பரகேஸரிவர்மனின் கல்வெட்டு பண்டைய அறிஞர்கள் உத்தமசோழனுடையதாகக் கணித்தனர். அதனையொட்டி கோயிலின் காலத்தை திரு. எஸ்.ஆர்.பாலஸுப்ரமண்யம் அவர்கள் முதலாம் பராந்தகனுடைய காலமாகவும் கணித்தார். ஆனால் பிறகு திரு.கே.ஆர்.ஸ்ரீனிவாஸன் அவர்கள் இந்தக் கோயில் சோழர்கட்டிடக்கலையின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்ததாகவும் பரகேஸரிவர்மன் முதலாம்…

தொடர்ந்து வாசிப்பு