பத்ம மாளிகை

kanchipuram

விமானத்தைச் சுற்றியமையும் பிராகாரம் போன்ற கட்டிட அமைப்பே மாளிகை(வடமொழியில் மாலிகா) அல்லது திருச்சுற்று மாளிகை என்று நூல்களில் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. காமிகாமம் மாளிகை என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது.      शालायामपि शालाङ्गा निष्क्रान्ताननशोभिता। सा शाला मालिका ज्ञेया शास्त्रेस्मिन् कामिकाह्वये।। சாலைக்கு அங்கமாக அமைந்து முற்பகுதியில் நீட்சி பெற்றமையும் அமைப்பே மாளிகை என்று காமிகத்தில் அழைக்கப் பெறுகிறது. இவ்விதம் மாளிகையின் விளக்கம் ஆகமத்தில் கிடைக்கிறது. மாளிகையை ஸபைகளில் ஒன்றாகவும் கருதலாம். மாளிகையை அதன் இடத்தைப் பொறுத்து ப்ராஸாதமாளிகை,…

தொடர்ந்து வாசிப்பு

ராஜஸிம்ஹனின் கண்டஹர்ம்யங்கள்

khanda_3 copy

     ஒப்புவமையற்ற வேந்தனான ராஜஸிம்ஹனென்னும் புரவலனால் புரக்கப்பெற்ற சிற்பிகள் கல்லில் கலைவண்ணம் கண்டனர். காஞ்சி கைலாஸநாதர் கோயிலும் பனமலையிலுள்ள தாளகிரீச்வரர் கோயிலும் இத்தகைய கற்கோயில் வண்ணத்தின் ஈடற்ற எடுத்துக்காட்டுக்களாய்த் திகழ்கின்றன. இந்தக் கோயில்களில் காணப்பெறும கண்டஹர்ம்யம் என்னும் சிற்பக்கலைக்கூறு வேறு கோயில்களிலும் காணப்பெறாத ஒப்புவமையற்ற ஒன்றாகும்.      காஞ்சிக் கைலாஸநாதர் கோயில் மிச்ர விஷ்ணு சந்த அமைப்பில் அமைந்த நான்கு தளக் கோயிலாகும். இந்த விமானத்தின் நான்கு புறமும் நான்கு பத்ரசாலைகளும் மூலைகளில் நான்கு கர்ணசாலைகளும் இடம்…

தொடர்ந்து வாசிப்பு

காஞ்சி கைலாயநாதர் கோயிலிலிருந்து இரு புதிய கல்வெட்டுக்கள்

New inscription from Kailāsanātha temple

காஞ்சிபுரத்திற்கே கவினழகாய் திகழும் கைலாயநாதர் கோயிலில் பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பெற்றுள்ளன. ஆயினும் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி ஒன்றில் பதிப்பிக்கப்பெறாத இரண்டு கல்வெட்டுக்கள் இன்னமும் அங்கே கண்சிமிட்டாமல் இல்லை. கல்வெட்டு -1 இந்தக் கல்வெட்டு கருவறை நோக்கும்போது வலதுபுற மூலையில் அமைந்துள்ள தேவகுளிகையில் அமைந்துள்ளது. அந்த தேவகுளிகையின் உட்புற சுவரில் செதுக்கப்பெற்றுள்ளதால் இதை எவரும் கவனிக்கவில்லையென்று கருதுகிறேன். இந்தக் கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டைய பல்லவ க்ரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது. இது இக்கோயிலைக்…

தொடர்ந்து வாசிப்பு