கோலாரில் ராஜேந்த்ரசோழன் எடுப்பித்த ஸப்தமாதா கோயில்

kolaramma-temple-at-kolar

     சோழர்படை கங்கமண்டலத்தைப் பத்தாம் நூற்றாண்டில் கைப்பற்றிய பிறகு அங்கு அழகிய கோயில்களையும் சமைத்தது. கோலாரில் உள்ள ஸப்த மாதா கோயில் ராஜேந்த்ர சோழனின் ஆணைப்படி அவனுடைய படைத்தளபதியால் எடுப்பிக்கப்பெற்றது. இது அந்த கோயிலுள்ள ஒரு கல்வெட்டால் உறுதியாகிறது. இந்தக் கல்வெட்டில் வழக்கமான மெய்கீர்த்திக்குப் பிறகு ராஜேந்த்ர சோழனின் 22ஆம்ஆட்சியாண்டில் சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டிலுள்ள வெண்ணாட்டு அமண்குடி என்னும் பெயர்கொண்ட கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலத்தைச்சேர்ந்த நராக்கண் என்னும் குடிப்பெயர் கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணன் ராமனான ராஜேந்த்ர சோழ…

தொடர்ந்து வாசிப்பு

கர்ணாடகத்தில் நரஸிம்ஹ பல்லவனின் வட்டெழுத்துக் கல்வெட்டு

vatteluthu

பின்வரும் கல்வெட்டு கர்ணாடக மாநிலம் கோலாரின் அருகிலுள்ள பங்கவாடியிலுள்ள ஸோமேச்வரர் கோயிலிலுள்ள ஒரு நடுகல்லில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு கன்னடம் விரவிய தமிழ்மொழியில் வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பல்லவ குலத்தின் முதலாம் நரஸிம்ஹவர்மனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு பாணகுலத்தரசனின் பணியாளைக் குறிப்பிடுகிறது. அவன் பெயர் அழிந்திருக்கிறது. பாணமன்னனின் பெயர் கந்த வாணாதிராசர் எனத்தரப்பெற்றுள்ளது.      இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா கர்ணாடிகாவின் பத்தாந்தொகுதியில் MB 227 என்னும் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றது. வரி 1: கோவிசைய நரசிங்க…

தொடர்ந்து வாசிப்பு