புரவியைச் சேர்ந்த பகலவன்

Sūrya & Saṃjñā

     கதிரவன் விச்வகர்மாவின் மகளான ஸம்ஜ்ஞா தேவியை மணந்திருந்தான். அவனுடைய வெம்மையைத் தாளவொண்ணாத அவள் தனது சாயையை – நிழலை விடுத்து விட்டு தந்தைவீடு சென்றாள். அங்கும் இருக்க முடியாததால் குதிரையின் வடிவெடுத்து உத்தர குருதேசத்திற்குச் சென்று கடுந்தவமியற்றினாள். மாற்றாந்தாய் செயலினால் மனமுடைந்த கூற்றுவன் தாயை இகழ சாயை அவனைச் சபித்தாள். அதன் பிறகு தந்தையிடம் முறையிட்டான் கூற்றுவன். கதிரவனின் மிரட்டலால் உண்மையைக் கூறினாள் சாயா. உண்மையை அறிந்த கதிரவன் தனது மாமனார் வீடு சென்று தேடினான்….

தொடர்ந்து வாசிப்பு

தேய்ந்து போன தினகரன்

sharpening of the Sun god

நிலவு மாதந்தோறும் தேயும், வளரும். ஆனால் பகலவன் தேய்வதுண்டா. தேய்ந்ததுண்டு என்கின்றன புராணங்கள். அந்தக் கதையைக் கேட்போமா.. கச்யப முனிவருக்குக் கண்ணான புதல்வனானவன் கதிரவன். அவன் உலகுக்கெல்லாம் கண்ணானான். அந்த தூயப்பெருவொளிக்குத் தன் புதல்வியான ஸம்ஜ்ஞா(உஷா) தேவியைத் திருமணம் செய்து கொடுத்தார் விச்வகர்மா. அவர்களுக்கு மூன்று புதல்வர்கள் தோன்றினர். முதலாமவர் வைவஸ்வத மனு. இரண்டாவது புதல்வன் கூற்றுத் தெய்வமான யம தர்மன். அடுத்து யமுனை நதி மகளாகப் பிறந்தாள். ஆயின் ஸம்ஜ்ஞா தேவிக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை….

தொடர்ந்து வாசிப்பு

கதிரவனின் கணைப்போர்

கதிரவனின் கணைப்போர் ஒப்புவமையின்றி ஒளிவீசும் கலாச்சாரத்தைப் படைத்த நமது பாரதமண்ணில் எல்லாக் கூறுகளிலும் தெய்வத்தன்மையைக் கண்டு போற்றும் பண்பு இன்றளவும் எழில்வாய்ந்ததொன்றாக போற்றப்பெறுகிறது. சிற்பங்களும் கட்டிடக்கலையும் தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடுகளாக ஏற்றம் பெற்றுத் திகழ்கின்றன. அந்தச் சிற்பங்களிலும் வேத, புராணச் செய்திகளின் நுட்பமான வெளிப்பாடு இருபுலத்தையும் உணர்ந்தவர் மனதில் இறும்பூதெய்தச் செய்கிறது. பல்லவர் காலத்திய ஆலய சிற்பங்களில் வேதபுராணச் செய்திகள் திறம்பட எடுத்தாளப் பெற்றிருக்கின்றன. அதைத்தொடர்ந்து சோழர்கால சிற்பங்களிலும் வேதபுராணச் செய்திகள் திறனுற கையாளப்பெற்றிருப்பதைக் காணும்போது அவர்தம் அறிவுத்திறத்தை…

தொடர்ந்து வாசிப்பு