வேறு வேறு இடங்களில் வாழ்வோர் தமதிடத்திலிருந்து வெகுதூரத்திலுள்ள கோயில்களுக்கும் தானமளித்தனர் என்பது கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. அத்தகையதொரு தானம் பின்வரும் கல்வெட்டில் ஆவணமாக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு அரக்கோணத்தை அடுத்துள்ள கோவிந்த வாடியிலுள்ள பெருமாள் கோயிலின் தென்புறச்சுவரில் காணப்பெறுகிறது. இது முதலாம் ராஜராஜனின் 3-ஆம் ஆட்சியாண்டைச் சுட்டுவதால் இதன் காலம் பொயு 988 ஆகும். இந்தக் கல்வெட்டு ஒரு வடமொழிச்செய்யுளையும் முடிவுறாத தமிழ்ப்பகுதியையும் கொண்டுள்ளது. வடமொழிப்பகுதி ஆதித்யன் என்பான் கோவிந்தபாடியிலுள்ள ஒரு அந்தணனுக்கு உணவளிக்க 30 தங்கக்…
தொடர்ந்து வாசிப்புசோழன்
கோலாரில் ராஜேந்த்ரசோழன் எடுப்பித்த ஸப்தமாதா கோயில்

சோழர்படை கங்கமண்டலத்தைப் பத்தாம் நூற்றாண்டில் கைப்பற்றிய பிறகு அங்கு அழகிய கோயில்களையும் சமைத்தது. கோலாரில் உள்ள ஸப்த மாதா கோயில் ராஜேந்த்ர சோழனின் ஆணைப்படி அவனுடைய படைத்தளபதியால் எடுப்பிக்கப்பெற்றது. இது அந்த கோயிலுள்ள ஒரு கல்வெட்டால் உறுதியாகிறது. இந்தக் கல்வெட்டில் வழக்கமான மெய்கீர்த்திக்குப் பிறகு ராஜேந்த்ர சோழனின் 22ஆம்ஆட்சியாண்டில் சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டிலுள்ள வெண்ணாட்டு அமண்குடி என்னும் பெயர்கொண்ட கேரளாந்தகச் சதுர்வேதிமங்கலத்தைச்சேர்ந்த நராக்கண் என்னும் குடிப்பெயர் கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணன் ராமனான ராஜேந்த்ர சோழ…
தொடர்ந்து வாசிப்புமுதலாம் ராஜராஜனின் கர்ணாடகத்து பல்முரிக் கல்வெட்டு

இந்தக் கல்வெட்டு கர்ணாடகத்திலுள்ள பல்முரியில் அமைந்துள்ள அகஸ்த்யேச்வரர் கோயிலின் மேற்புறத்திலுள்ள கல்லில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு ஹளெ(பழைய) கன்னடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா கர்ணாடகாவின் மூன்றாம் தொகுதியில் ஸ்ரீரங்கபட்ண தாலூகா கல்வெட்டுக்களில் 140 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்aறுள்ளது. இந்தக் கல்வெட்டு முதலாம் ராஜராஜனின் 28-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இதில் சக வர்ஷம் 934 குறிப்பிடப்பெற்றிருப்பதால் இதன் காலம் 1012 ஆகும். ஆகவே ராஜராஜனின் 29-ஆம் ஆட்சியாண்டு 1012க்குச் சமமானதென்றாகிறது. இந்தக் கல்வெட்டிலுள்ள மற்றைய தகவல்கள் இது…
தொடர்ந்து வாசிப்புஸிம்ஹவிஷ்ணுவில் துவங்கும் பல்லவபரம்பரையின் காலவரையறை – மீளாய்வு

பல்லவர்தம் சாஸன காலம் தொடர்பாக பல்வேறுவிதமான கணக்கீடுகள் இருப்பதை நாமறிவோம். பிராக்ருத செப்பேடுகளை வெளியிட்ட பல்லவர்களைக் காட்டிலும் ஸம்ஸ்க்ருத செப்பேடுகளை வெளியிட்ட பல்லவர் வழியைப்பற்றித்தான் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பெற்றுள்ளன. மூன்றாம் ஸிம்ஹவர்மன் மற்றும் ஸிம்ஹவிஷ்ணுவில் துவங்கும் மன்னர்தம் கொடிவழியைப் பற்றி பல்லவர் வரலாற்றை ஆராயும் எல்லா ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் பின்னர் பட்டியலிடப்பெற்றுள்ளன. அரசன் பெயர் ஆர். கோபாலன் ஆர். ஸீவெல் டிஸி. ஸர்க்கார் கே.ஆர்.ஸ்ரீனிவாஸன் எஸ்.ஆர்.பாலஸுப்ரஹ்மண்யம் கே.ஏ.நீலகண்டசாஸ்த்ரி கே.வி.ஸுப்ரஹ்மண்ய ஐயர்…
தொடர்ந்து வாசிப்பு