வேறுமாநிலத்தைச் சேர்ந்த இரு சோழ தளபதிகள்

இடைக்கால வரலாற்றுப் பகுதியில் திறமை எப்பகுதியில் இருந்தாலம் மெச்சிப் போற்றப்பெற்றது. இதை அக்காலத்திய கல்வெட்டுக்களை ஆராய்வதன் மூலம் தெள்ளென அறியவியலும். அத்தகைய இருவர் சோழர்தம் தளபதிகளாகப் பணியாற்றியமையைக் காண்போம். வெள்ளன் குமரன் இவன் கேரளத்தின் நந்திக்கரைப் புத்தூரைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தகனின் இளவரசனாகிய ராஜாதித்யனுக்கு வலதுகரமாகத் திகழ்ந்தவன். அவனுடைய சரிதம் கிராமம் என்னுமூரிலுள்ள கல்வெட்டின் வாயிலாகத் தெரியவருகிறது. அங்கு அவன் எந்தைக்கு ஒரு கற்றளி எடுப்பித்த செய்தியை அந்தக் கல்வெட்டு சுட்டுகிறது. அந்தக் கல்வெட்டின் வடமொழிப்பகுதியைக்…

தொடர்ந்து வாசிப்பு