
இந்தக் கல்வெட்டு பாதாமியிலுள்ள குடவரையின் முன்பு காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு 25 அங்குல நீளமும் 45 அங்குல உயரமும் உடையது. எழுத்துக்கள் சிறிது சிதைவடைந்திருக்கின்றன. இந்தக் கல்வெட்டு பேராசிரியர் எக்லிங்கால் இண்டியன் ஆண்டிகுவரியின் மூன்றாந் தொகுதியில் 305 ஆம் பக்கத்தில் பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு முதலாம் கீர்த்திவர்மனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் அவனுடைய இளவலான மங்களேச்வரன் திருமாலுக்கான கோயிலை எடுப்பித்து அதற்கு மதிலையும் கட்டிய குறிப்பைத் தருகிறது. மேலும் அந்தக் கோயிலில் இறைவனின் உருவத்தை நிறுவும் தறுவாயில் அந்தணர்களுக்கு…
தொடர்ந்து வாசிப்பு