1. முதலாம் புலகேசியின் பாதாமி கல்வெட்டு (காலம் சக ஆண்டு 465 – பொயு 543)

pulakesi

இந்தக் கல்வெட்டு பாதாமியிலுள்ள பெத்தாரப்பா கோயிலின் பின்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 250 அடி உயரத்திலுள்ள ஒரு மலைப்பாறையின் நெருங்க முடியாத பகுதியில் அமைந்துள்ளது. கீழ்மேற்காக அமைந்துள்ள ஒரு பெரும்பாறையில் அமைந்துள்ள இந்தக் கல்வெட்டிற்குச் செல்லும் பாதையும் மிகக் குறுகலானது. இந்தக் கல்வெட்டு அந்தப் பாறையின் வடபுறத்தில் அமைந்துள்ளது.             இந்தக் கல்வெட்டை தார்வாரிலுள்ள திரு. ஆர்.எஸ்.பஞ்சமுகி அவர்கள் மிகுந்த முயற்சியோடு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் இரண்டாம் எண்ணோடு பதிப்பித்தார். இந்தக் கல்வெட்டு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் மஹேந்த்ர பல்லவரின் சேஜர்லா கல்வெட்டு

Amvar_Chejerla_Kapoteswara_temple_in_guntur_district_2

     இந்த வடமொழிக் கல்வெட்டு அறிஞர்களால் மிக அரிதாகவே எடுத்தாளப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டம் நரஸராவ் தாலுகாவிலுள்ள சாஸர்லாவிலுள்ள ஸ்ரீகபோதேச்வரர் கோயிலில் முன்னுள்ள நந்தி மண்டபத்தில் உள்ள கற்பலகையில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பெரும்பாலும் அழிந்திருந்தாலும் சிறு சிறு பகுதிகளோ படிக்கவும் புரிந்து கொள்ளவும்  இயலும் வகையில் அமைந்திருந்தாலும் கூட இந்தக் கல்வெட்டு முக்கியமானதாகும். காரணம் இந்தக் கல்வெட்டு அமைந்திருப்பதால் இந்தப் பகுதியில் பல்லவர்களின் அரசு கோலோச்சியது என்பதை உய்த்துணரவியல்கிறது. ஆகவே இந்தப் பகுதியை…

தொடர்ந்து வாசிப்பு

இரண்டாம் புலகேசியின் ஐஹோளெ கல்வெட்டு

Chalukyan_inscription_Aihole

       மிகப்புகழ்பெற்ற இந்தக் கல்வெட்டு பிஜபுர் மாவட்டத்திலுள்ள ஐஹோளெயில் அமைந்துள்ள மேகுடி என்னும் ஆலயத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்குச் சுவரில் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டை திரு. எஃப்.கீல்ஹார்ன் அவர்கள் எபிக்ராஃபியா இண்டிகாவின் ஆறாந்தொகுதியில் பதிப்பித்தார்.             இந்தக் கல்வெட்டு 19 வரிகளைக் கொண்டது. இந்தக் கல்வெட்டு நான்கடி ஒன்பதரை அங்குல நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்டது.  கல்வெட்டு வடமொழியில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டைய தெலுகு-கன்னட வரிவடிவத்தில் எழுதப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் புலகேசியின்…

தொடர்ந்து வாசிப்பு

முதலாம் நரஸிம்ஹ வர்மனின் வாதாபிக் கல்வெட்டு

high res

     சாளுக்ய மன்னன் இரண்டாம் புலகேசி இரண்டாம் முறை படையெடுத்து வந்தபோது அவனை எதிர்த்தபடியே முதலாம் நரஸிம்ஹவர்மன் வாதாபி வரைப் போந்ததும் அதனைக் கைப்பற்றியமையும் நாமறிவோம். மணிமங்கலம், சூரமாரம் மற்றும் பரியளம் ஆகிய இடங்களில் நிகழ்ந்த போர்களில் பல்லவர்களின் கை மேலோங்கியிருந்தது. பல்லவர் படை சாளுக்ய நாட்டின் இதயமாகத் திகழ்ந்த வாதாபியில் ஊடுருவி நின்றது. இதன் சாளுக்ய ஆட்சியே முன்காணாவிதமாக நிலைகுலைந்தது. ஈடில்லாப் பேரரசனான இரண்டாம் புலகேசி இறந்து பட்டனன். சீன யாத்ரிகனான ஹ்வான் ஸாங் சாளுக்ய…

தொடர்ந்து வாசிப்பு

மேலைச் சாளுக்ய பேரரசின் பெண்ணரசி

vijaya

     முதலாம் நரஸிம்ஹ பல்லவன் மேலைச் சாளுக்யர் தம் கோநகராம் வாதாபியைத் தூளாக்கி எரிகொளுவிய செய்தியை நாமறிவோம். ஈடற்ற பேரரசனாகத் திகழ்ந்த இரண்டாம் புலகேசியும் கூட அவனது கரங்களால் மாண்டுபட்டான். இவ்விரு செய்திகளும் வாதாபியிலுள்ள பொயு 642 இல் பொறிக்கப்பெற்ற பல்லவ சாஸனத்தாலும் அவர்தம் குலச் செப்பேடுகளாலும் உய்த்துணரக் கிடக்கிறது. இரண்டாம் புலகேசியின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய மகன்களான ஆதித்யன், சந்த்ராதித்யன் மற்றும் முதலாம் விக்ரமாதித்யன் ஆகியோர் நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். விக்ரமாதித்யனின் ஹொன்னூர் செப்பேட்டில் இவர்களின்…

தொடர்ந்து வாசிப்பு

ஒரு சாளுக்ய காதல் கல்வெட்டு

794px-7th_century_Kannada_inscription_at_Mahakutesvara_temple_in_Mahakuta

வரலாற்றில் இதுவரை பலவிதமான காதற்கல்வெட்டுக்களைக் கண்டிருக்கிறோம். அத்தகையதோரு கல்வெட்டொன்று பாதாமி சாளுக்யர்களின் சிற்பக் கலைப்படைப்பான மஹாகூடத்திலுள்ள மஹாகூடேச்வரர் கோயிலில் காணப்பெறுகிறது. இந்தக் கோயில் மேலைச்சாளுக்ய வேந்தன் மங்களேசனின் (பொயு 596-609) காலத்தியதாக கருதப்பெறுகிறது. மேற்கொண்டு செய்த ஆய்வுகள் இந்தக் கோயில் பொயு 625 இல் மீளமைக்கப்பெற்றதையும் பிற்காலத்திய சேர்க்கைகளையும் கொண்டு திகழ்வதையும் வெளிப்படுத்துகின்றன. இரண்டாம் புலகேசியின் கொள்பெயரனும் பொயு 696 முதல் 733 வரை ஆண்டவனுமான விஜயாதித்யனே இப்போதைய கதையின் நாயகன். அவனுடைய காலத்தில் வாழ்ந்த அவனுடைய…

தொடர்ந்து வாசிப்பு