
பின்வரும் கல்வெட்டு ஒரு துண்டுக் கல்வெட்டு ஆகும். இது கர்ணாடகத்திலுள்ள பிஸ்கோட்டில் உள்ள மாதவமந்த்ரி அணைக்கட்டில் பதிக்கப்பெற்றுள்ளது. இது தமிழ் மொழியிலும் தமிழ் எழுத்திலும் அமைந்தது. இது தழைக்காட்டிலுள்ள ஒரு கோயிலிலிருந்து பெயர்க்கப்பெற்று நூறு வருடங்களுக்கு முன்பாக அணைக்கட்டு கட்டப்பெறும்போது பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டில் துவக்கப்பகுதியில்லை. இதில் இருக்கும் மெய்க்கீர்த்தித் துண்டை வைத்து இது முதலாம் ராஜாதிராஜனின் காலத்தது என்பதனை அறியமுடிகிறது. இந்தக் கல்வெட்டு தழைக்காடான ராஜராஜபுரத்திலுள்ள தேவர்க்கு கொடுத்த நிவந்தங்களைக் குறிப்பிடுகிறது. இந்தக்…
தொடர்ந்து வாசிப்பு