
இந்தக் கல்வெட்டு பாதாமியிலுள்ள பெத்தாரப்பா கோயிலின் பின்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 250 அடி உயரத்திலுள்ள ஒரு மலைப்பாறையின் நெருங்க முடியாத பகுதியில் அமைந்துள்ளது. கீழ்மேற்காக அமைந்துள்ள ஒரு பெரும்பாறையில் அமைந்துள்ள இந்தக் கல்வெட்டிற்குச் செல்லும் பாதையும் மிகக் குறுகலானது. இந்தக் கல்வெட்டு அந்தப் பாறையின் வடபுறத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டை தார்வாரிலுள்ள திரு. ஆர்.எஸ்.பஞ்சமுகி அவர்கள் மிகுந்த முயற்சியோடு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் இரண்டாம் எண்ணோடு பதிப்பித்தார். இந்தக் கல்வெட்டு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த…
தொடர்ந்து வாசிப்பு