அரங்கநாதருக்குக் கொடையளித்த கலைஞன்

                பின்வரும் வடமொழிச் செய்யுள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் இரண்டாம் ப்ராகாரத்தின் தென்புறச்சுவரில் கல்வெட்டாக அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு ஒரு தமிழ்க்கல்வெட்டை அடுத்து அதன் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளது. தமிழ்ப்பகுதியிலுள்ள வானியற்குறிப்புக்களைக் கொண்டு இதன் காலமாக பொயு 1270 மார்ச் 24 எனத் தீர்மானிக்க இயல்கிறது.      இந்தக் கல்வெட்டு 1892 ஆமாண்டு தொல்லியல்துறை அறிக்கையில் 51 ஆம் எண்ணோடு தெரிவிக்கப் பெற்றுள்ளது. பிறகு தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 499 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு…

தொடர்ந்து வாசிப்பு

சுந்தரபாண்ட்யனின் ஸ்ரீரங்கக் கல்வெட்டு

     பின்வரும் கல்வெட்டு ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதரின் ஆலயத்தில் கருவறை முன்னுள்ள மண்டபத்திலுள்ள நான்கு தூண்களிலும் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு 1892 ஆமாண்டு தொல்லியில் அறிக்கையில் 60 ஆம் எண்ணோடு குறிப்பிடப்பெற்றிருந்தது. பின்னர் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 507 ஆம் எண்ணோடு மூலம் மட்டுமாகப் பதிப்பிக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு ஜடாவர்மன் சுந்தர பாண்ட்யன் (பொயு 1251-1268) ஸ்ரீரங்கநாதர் ஆலயத்துக்கு செய்வித்த தங்கத்தினாலான கைங்கர்யங்களைக் குறிப்பிடுகிறது. முதல்வரி மெய்கீர்த்தியின் துவக்கமானாலும் ஒற்றைச் சொல்லுடன நின்றுவிட்டது. வரி 1. स्वस्तिश्री।…

தொடர்ந்து வாசிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் தசாவதாரக் கல்வெட்டு

பின்வரும் கல்வெட்டு பகல்பத்து மண்டபத்தின் மேற்குச் சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி இருபத்து நான்கில் 488 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு சிதைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு திருமாலின் பத்து அவதாரங்களை வர்ணித்துப் பிறகு கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடுகிறது. இந்த தானங்கள் ரங்கநாதர், திருமகள், ஸேனைமுதலி மற்றும் கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு விளக்கெரிப்பதற்காகவும் மற்றைய திருவிழாக்களுக்குமாக சின்னசெவ்வன்-மூர்த்யம்பா தம்பதியரின் மகனான குமார அச்யுதனால் வழங்கப்பெற்றவை. இந்தக் கல்வெட்டின் காலமான சக…

தொடர்ந்து வாசிப்பு